Monday, December 18, 2006

58 : என் தங்கை கல்யாணி - தேன்கூடு போட்டி

குறும்பு

"அம்மா அம்மோவ்... இன்னிக்கோட ஸ்கூல் முடிஞ்சது இன்னும் ரெண்டு மாசத்துக்கு லீவுதான்" குதியாட்டம் போட்டுக்கொண்டு வந்தேன்.

"என்னடா மணி பதினொன்னரைதானே ஆகுது... பரிட்சை ஒழுங்கா எழுதினியா இல்லியா... தங்கச்சிப் பாப்பா எங்கடா"

"அவள மிஸ் பன்னிரெண்டரைக்குத்தான் அனுப்புவேன்னு சொல்லிட்டாங்க... எனக்கு இன்னிக்கு கணக்குப் பரிட்சைதானம்மா... அதெல்லாம் ஒழுங்கா எழுதிட்டேன்"

"இருந்து அவளயும் கூப்ட்டு வரவேண்டியதுதானே... இங்க என்னத்த அள்ளிமுடிக்கிறதுக்கு ஓடியாந்த"

இந்த அம்மா எப்பவும் இப்படித்தான் எதயாவது சொல்லி என்ன திட்டிக்கிட்டே இருப்பாங்க ஆனா தங்கச்சி பாப்பான்னா மட்டும் நல்லா கொஞ்சுவாங்க... "பசிச்சது அதான் வந்துட்டேன்" கொஞ்சம் கோபமாகவே சொல்லிவிட்டு செருப்பை மூலையில் உதறித்தள்ளிவிட்டு வீடு அதிர அதிர உள்ளே நுழைந்தேன்.

சற்றுநேரம் பொறுத்து உள்ளே வந்த அம்மா, "என்ன தொரைக்கு கோவமா? தங்கச்சிய கூட்டியாரச்சொல்லி உங்கப்பன் கிட்ட சொல்லிட்டுவாரேன்... விளையாட எங்கயும் ஓடிப்போயிராத அடுப்புல சாம்பார கொதிக்க வச்சுருக்கேன், அப்பப்ப கிண்டி விட்டுக்கிட்டு இரு நல்லா கொதி வந்ததும் நிறுத்திரு என்ன... இந்தா இந்த பிஸ்கட்ட சாப்டு, ரெண்டு மட்டும் எடுத்துக்கிட்டு மிச்சத்த தங்கச்சிக்கு வச்சிரு."

ஹைய்யா பால் பிஸ்கட், சந்தோஷத்துடன் எழுந்து ஓட நினைத்தாலும் கோப-முறுக்கை அவ்வளவு சீக்கிரமா விட்டுக்கொடுப்பது, "ம்...சரி சரி" என்று மட்டும் முடித்துக்கொண்டேன். நமக்கு ஒரு டம்ளர் நிறைய தண்ணீரும் ஒரு கட்டு பிஸ்கட்டும் குடுத்துட்டாங்கன்னா போதும் உலகத்துல வேற என்ன நடந்தாலும் தெரியாது. ஒவ்வொரு கடியாய் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடைசி பிஸ்கட் இருக்கையில் தங்கை ஞாபகம் வந்தது, சரி இந்த ஒண்ணு மட்டும் வச்சுருவோம். என்ன இருந்தாலும் ஸ்கூல்ல எனக்கும் கோபிக்கும் நடக்கற சண்டைய அவ அம்மாகிட்ட சொல்லாம காப்பாத்தறால்ல, அதுக்காகவாவது.

"மூதேவி... கருகற வாசனை தெருமுனை வரைக்கும் வீசுது எங்கடா தொலைஞ்சுபோன"

அய்யய்யோ சாம்பார கிண்டிவிட மறந்துட்டனா? ஓடுறா ராசு.

ஒரு ரெண்டு மணிக்கா மெதுவா வீட்டுக்குள்ள எட்டிப் பார்த்தேன், தங்கச்சி சிட்டி-சாமான்லாம் வச்சுக்கிட்டு விளையாண்டுகிட்டு இருந்தா, அம்மா கொஞ்சம் சந்தோஷமா தெரிஞ்சாங்க, துணிமணியெல்லாம் பெட்டில எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க

"ஐ அம்மா நம்மெல்லாம் லீவுக்கு ஊருக்கு போறமா", ஒண்ணுமே தெரியாதவன் போல ஓடிப்போய் காலைக் கட்டிக்கொண்டேன்.

சொத் சொத் என முதுகில் ரெண்டு விழுந்தது, "ஏண்டா தீமக்காரப் பயலே சாம்பார கருக விட்டுட்டு எங்க போன... முழு பிஸ்கட் பாக்கெட்டயும் தின்னு... தாந்தின்னிப் பயலே"

"எம்மா எம்மா அடிக்காதீங்கம்மா... பிஸ்கட் சாப்ட்டுட்டே மறந்துட்டேன்", இந்த தங்கச்சி கழுத நான் அடி வாங்கறத பாத்துட்டு சிரிக்குதா இருக்கட்டும் அப்புறம் வச்சிக்கறேன்.

"நீ என்ன சொன்னாலும் சரி உன்ன லீவுக்கு பேரையூருக்கு கூட்டிட்டுப் போகல, நானும் தங்கச்சி பாப்பாவும் மட்டும்தான் போறோம். ஊர்ல மாமா எல்லாம் விரதமிருந்து பூமிதிக்கிறாங்க... உன்ன கூட்டிட்டு போனா என்னென்ன சேட்டை செஞ்சு தீமவேல செய்வியோ"

"எம்மா எம்மா... நான் நல்ல பையனா நடந்துக்கறம்மா, என்னயும் கூட்டிட்டுபோங்கம்மா"

"இல்லல்ல நீ உங்கப்பனுக்கு உதவியா கடகண்ணிக்கு போய்ட்டு வந்திட்டு இரு"

அம்மா எதோ சிரிச்சுக்கிட்டு விளையாட்டா சொல்ற மாதிரி இருக்கு, இருந்தாலும் எதுக்கும் கெஞ்சி வைப்போம், "எம்மா எம்மா... நம்புங்கம்மா, நான் சேட்டையே பண்ண மாட்டேன் நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்"

"அப்படியா சரி, தெருமுக்குல இருக்ற பைப்ல தண்ணி அடிச்சு, உள்வாசல்ல இருக்ற அண்டாவ ரொப்பு, கூட்டிட்டுப் போறேன்."

ச்சே... 'என்ன சொன்னாலும்'ன்னு சொல்லியிருக்க கூடாது, அந்த பீம குண்டாவல்ல நிறைக்க சொல்லிட்டாங்க, இனி எவ்வளவு கெஞ்சினாலும் நடக்காது அம்மா பிடிவாதம் அந்த மாதிரி... கரெக்டா பதினாலு குடம் தண்ணி ஊத்தினா போதும் அண்டா நிறைஞ்சுரும். சரி ஆரம்பிப்போம்.

நாலு குடம் ஊத்தினதும், தங்கச்சிக்கு இரக்கம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். நானும் போறம்மான்னு அடம்பிடிச்சு அவளும் சின்னதா ஒரு குடத்த தூக்கிட்டு வந்துட்டா. "அப்பத்தாண்டா சீக்கிரம் நிறையும்"னு சிரிச்சுக்கிட்டே சொல்றா...இனி சப்பைமூக்கிக்கு கூட ரெண்டு பிஸ்கட் வச்சிட்டுதான் சாப்பிடணும்.

"ஏலேய் மரவதம் மவனே நான் ஒத்தக்குடம் பிடிச்சுக்கறண்டா... அண்ணனும் தங்கச்சியுமா, அப்புறம் ரொப்புவீங்களாம் அண்டாகுண்டா எல்லாம்" என்று சுப்பக்கா தண்ணீர் பம்ப்-ஐ பிடித்துக் கொண்டார்கள். எதிர்க்க வந்த தங்கச்சியக்கூட "கொஞ்சம் இருடி என் சின்ன சக்களத்தி உன் மாமன் குளிக்கறதுக்குதான் தண்ணி பிடிக்க வந்திருக்கேன்" என்று வாயடைத்து விட்டார்கள்."

எங்க ஊர் அடிபம்ப்-ல கைப்பிடி மேலபோய் வரும் வழியாகவும் சற்று தண்ணீர் வெளிவரும், கைப்பிடி மேல்போய் கீழ் வருவதற்குள் அந்த இடத்தில் இருக்கும் தண்ணீரை ஒற்றை விரலால் தள்ளிவிடுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. "ஏலேய் கைய நச்சுக்கப் போறல" என்று யாராவது எச்சரித்தால் கூடுதல் மகிழ்ச்சியுடன் செய்வேன்.

சுப்பக்கா தண்ணீர் அடித்துக்கொண்டு இருக்கும்போது கூட அப்படித்தான் விளையாண்டு கொண்டிருந்தேன். "ஏலேய் கைய நச்சுக்கப் போற" என்று சொல்லிப் பார்த்தார்கள். "அதெல்லாம் நச்சுக்க மாட்டேன் நீங்க சீக்கிரம் முடிச்சுட்டு குடுங்க" என்று தெனாவட்டாக சொன்ன நேரத்தில் சாமி சிரித்திருக்க வேண்டும்.

கவனக்குறைவாக இருந்த ஒரு நொடியில் "நச்"னு ஒரு சத்தம். பைப்-ல "டங்"னுதானே சத்தம் வரணும் அதென்ன 'நச்'னு யோசிக்கிறீங்களா நீங்க நினைக்கிறது மிகச் சரி, என்னுடைய ஆள்காட்டி விரல் நுனிதான், அம்மியில் இடிச்ச இஞ்சி போல் மாறி ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. "உ....ம்ம்ம்ம்ம்" னு அழுதுகிட்டே வீட்டுக்குப் போறேன். எங்கம்மாவும் திட்டிக்கிட்டே வீராச்சாமி டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க.

"என்னடா எப்பவும் முட்டிய ஒடச்சிக்கிட்டு வருவ இன்னிக்கு என்ன கையா... அய்யய்யோ என்னடா இப்படி நச்சுக் கொண்டாந்துருக்க, பையன கவனமா பாத்துக்க வேணாமாம்மா... லீவெல்லாம் விட்டாச்சா...பரிட்சையெல்லாம் முடிஞ்சதா... உங்க அப்பன எங்க...", இப்டி என்னென்னமோ கேட்டுக்கிட்டு நைந்து தொங்கிய பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, தையல் போட்டு, கட்டு போட்டு ஒரு ஊசியையும் போட்டு விட்டாரு டாக்டர். அவர் பையன் வினோத் வேற நான் அழுகுறத பாத்துட்டான். ஸ்கூல் ஆரம்பிச்சதும் என்ன மாதிரியே அழுது காமிச்சு வேற கேலி பண்ணுவான். சாமி அதுக்குள்ள எப்படியாவது இந்த விஷயத்த அவன் மறந்துடனும்.

"அய்யா டாக்டரய்யா... யோவ் கண்ணுசாமி டாக்டரய்யா இருக்காரா... வலி உயிர்போகுதே"

"யாருயாது இந்தக் கத்து கத்தி வாரது... நீங்க உள்ள போயி மருந்த வாங்கிக்கம்மா ஏலேய் இன்னிக்கு முழுசும் விரல தூக்கியே வச்சுருக்கணும் கீழே தொங்க விடப் படாது அப்புறம் இன்னும் வலிக்கும் ரத்தம் கொட்டும்" என்று எங்களை உள்ளே அனுப்பிவைத்துவிட்டு வெளியே போனார் டாக்டர்.

"என் மண்டைய உடச்ச கைய அடுப்புல வைக்க..." என்று ஆரம்பித்து என் அம்மா என் காதைப் பொத்தும் அளவுக்கு மிகப் பயங்கரமாய் அர்ச்சனை போய்க் கொண்டிருந்தது. எங்கேயோ மிகப் பழகிய-கேட்ட குரல் என்று வெளியே போய்ப் பார்க்க ஆர்வம் தூண்டினாலும் அம்மாவுக்கு பயந்து அவர்கள் கூடவே நின்றிருந்தேன். சீக்கிரமே சத்தமும் நின்று விட்டது.

வெளியே வந்து பார்த்தால் சுப்பக்கா அமர்ந்திருந்தார்கள், பார்த்ததுமே அர்ச்சனைக்கும், சத்தம் நின்றதற்குமான காரணம் புரிந்து போனது. தலையை சுற்றி தாடையோடு சேர்த்து ஒரு பெரிய கட்டு போட்டு உக்கார்ந்திருந்தார்கள். என்ன, எப்படி, எங்கே, ஏன் நடந்தது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே விடையும் கிடைத்து விட்டது.

என் தங்கச்சியா, எப்பப் பார்த்தாலும் சண்டைபோடுபவளா, சின்னதா கிள்ளுனாலும் அம்மாகிட்ட காட்டி கொடுத்து அடி வாங்கி குடுப்பவளா... இனி அவளுக்கு குடுத்துட்டுதான் எல்லாம் சாப்பிடணும், அவகிட்ட இருந்து புடுங்கிகிட்ட விளையாட்டு சாமான்லாம் திரும்ப குடுத்துரணும். தினமும் அவளுக்கு பால் ஐஸ் வாங்கி குடுக்கணும், இனிமேல் அவகூட சண்டையே போடக்கூடது என்று ஓடிக்கொண்டே தீர்மானித்துக் கொண்டிருந்தேன்.

என்னாது ஏன் ஓடிக்கிட்டு இருக்கேனா? நல்லா கேட்டீங்க போங்க, "என்னடியாத்தா புள்ள வளர்த்துருக்க... இவன் வேணும்னு கையவிட்டுக்கிட்டதுக்கு, எங்கண்ணன் கைய ஏண்டி ஒடச்சன்னு ரோட்ல கிடந்த கருங்கல்லெறிஞ்சு எம்மருமவ மண்டைய ஒடச்சுப்புட்டா ஒம்மவ. இப்படி வெளமெடுத்தவளாவா வளர்த்து வச்சுருப்ப..." அப்படின்னு சுப்பக்கா மாமியார் கிருஷ்ணம்மா சொல்லிக்கிட்டு இருந்தப்ப "அதவிடுங்க கிருஷ்ணம்மா, இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே"ன்னு நான் கேட்டதுக்கு, சுப்பக்கா தொரத்திட்டு இல்ல ஓடி வர்றாங்க. நல்லவேளை தாடையோடு சேர்த்து கட்டுப் போட்டார்கள், இல்லைன்னா அர்ச்சனையும் சேர்ந்து வந்துருக்கும். இன்னொரு சமயம் மத்த சேட்டைகளை சொல்றேன்.

இப்போதைக்கு வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா....

Friday, December 08, 2006

57 : திருவரங்கத்தில் பெரியார் சிலை! - என் இரண்டனா

Photobucket - Video and Image Hosting

அட இதப்பார்றா!

Wednesday, November 22, 2006

56 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு - தகவலறிக்கை



நண்பர்களே உங்கள் அனைவரிடமும் அளவளாவி அனேக நாட்கள் ஆகிவிட்டது எனவே முதலில் வணக்கம், அனைவருக்கும்!

அடுத்து சாஷ்டங்கமாய் வுளுந்து மன்னிப்பும் கேட்டுர்றேன்... கோவை வலைப்பதிவர் சந்திப்பை பெரிய அளவில் நடத்தமுடியாமல் போனதற்கு. சின்னதோ பெரிதோ நடந்ததை தமிழ்கூறும் வலையுலகின் பார்வைக்கு வைக்கின்ற மரபிற்க்கேற்ப...இதோ!

ஏதோ பழைய ஞாபகத்தில் லாலி ரோடு, அரோமா பேக்கரின்னு போட்டாச்சு, எதேச்சையா அந்தப் பக்கம் போய் பார்த்தா அரோமா ஆராதனா-வா மாறிப்போச்சு. இதென்னடா பெரிய குளறுபடியா போச்சேன்னு கணிணி மையத்திற்கு ஓடியாந்து வர்றேன்னு சொன்னவங்க பேரெல்லாம் பார்த்து தனிமடல் போட்டு தொலைபேசி எண் வாங்கி ரயில்நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள கே.ஆர்.பேக்ஸ்க்கு சந்திப்பு மையத்தை மாத்தியாச்சு. அப்புறமும் ஒரே உறுத்தல் யாரும் நேரா லாலி ரோடுக்கே போய் ஏமாந்து வந்துருப்பாங்களோன்னு??!! ஒரே ஆறுதல் இதுவரைக்கும் யாரும் அப்படி மடலிட்டு திட்டாதது.

அடுத்தது என்னுடைய கைப்பேசி எண்ணை தெரிவிக்க முடியாமல் போனது அதனால் வரவேண்டுமென்று நினைத்தவர்களுக்கு இலகுவான தொடர்பு என்பது இல்லாது போயிற்று. இந்தக் குறைகளையும் மீறி சந்திப்புக்கு வருவதாய் சொன்னவர்கள்


புதுமாப்பிள்ளை ராசா
நாமக்கல் சிபி
குமரன் எண்ணம்
சுப்பையா வாத்தியார்
ப்ரியன்
சுதர்சன்.கோபால்
முரட்டுக்காளை
கோவை.ரவீ
சம்பத்

ப்ரியன் சேரநாட்டுக்கு திடீரென பயணிக்க வேண்டியிருந்ததாலும், எதிர்பாரா விருந்தினர் வருகையால் சுதர்சன்.கோபால்-ம் வரமுடியாது போயிற்று. முரட்டுக்காளை, கோவை.ரவீ, சம்பத் ஆகியோரை தொடர்பு கொள்ள விட்டுப்போனதால் அவர்களையும் சந்திக்க முடியாது போயிற்று அன்றைய தினத்தில். மேலும் சிலரும் கலந்துகொள்வதாய் இருந்து கடைசிநேரத்தில் முடியாது போயிற்று.

குமரன் எண்ணம் முதலில் ஆஜர்-ங்கோன்னாரு அப்புறமா கோவை ரெமோ - ஜெமோ சிபியும் சேர்ந்தார். பிரம்புகளை உடைக்கிற கண்டிப்பான வாத்தியார்கள் மத்தியில் நம்ம சுப்பையா வாத்தியார் ரொம்ப அன்பானவருங்க. தீபாவளி பலகாரங்களோடு அன்னிக்கு என்ன பேசலாம்-ன்ற அஜெண்டாவோட வந்தாரு. பல நல்ல காரியங்கள் பண்ணிக்கிட்டு இருக்காரு அதெல்லாம் பத்தி சொல்லிட்டுருந்தாரு. அஜெண்டாவோட வந்தவரு அதையெல்லாம் பத்தி பேசறதுக்குள்ள அர்ஜெண்டா கிளம்பிட்டாரு.

இன்னோரு டீ அடிச்சு முடிச்ச நிமிஷத்துல ராசா மல்லு வேட்டி கட்டி மாப்பிள்ளையா வந்தாரு. பல சரித்திர நிகழ்வுகளை சொல்லி தமிழ் மணம்வீசும் வரலாற்றுப் பாடம் எடுத்தாரு. குமரன் எண்ணத்திற்கும் - குமரனுக்கும் இடையே அடிக்கடி குழப்பிக்கிட்டேன் நான். நாமக்கல் சிபியும் பல விஷயங்கள் சொல்லிட்டுருந்தாரு. மறுக்காவும் டீ குடிச்சிக்கிட்டோம்.

மொத்தம் 60-70 மணித்துளிகள் நீடித்த சந்திப்பு எல்லாருக்கும் மனநிறைவை தந்ததாகவே நினைக்கிறேன். கடைசியா ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டோம். (வாத்தியாரய்யா தந்த தீபாவளி பலகாரம் கடைசியா யார் கைக்கு போச்சு...என்ன இருந்துச்சு..எப்படி இருந்துச்சு) எல்லாருமே பொதுவா சொன்ன சில கருத்துக்கள்

* தனிமனித தாக்குதல்களை ரசிக்கமுடிவதேயில்லை
* கருத்து சுதந்திரத்திற்கும் வரையறைகள் இருக்கின்றன
* மத/இன/ஜாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்குமுன் அவரவர் சுயமதிப்பீடு செய்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும்
* டோண்டு Vs போலிக்கு தீர்வாக கருதுவது - "Free-யா விடு மாமே" ன்னு கண்டுக்காம இருக்றதுதான்

நெடுநாள் முன் நடந்ததாலும், என்னுடைய இயல்பான ஞாபக மறதியாலும் இன்னும் சில-பல விஷயங்களை விட்டிருக்கலாம், வந்தோர் பின்னூட்டங்களில் சேர்க்கவும்.

விடுமுறையில் கணிணி பக்கம் நிமிஷக் கணக்கில்தான் செலவளிக்க முடிந்தது மேலும் மூன்று வார விடுமுறையில் வேலைகள் நிறைய சேர்ந்துவிட்டன எனவேதான் இந்த தாமதம். ஏண்டா போட்டிக்கு கதையெல்லாம் எழுத தெரியுது, இந்த சந்திப்ப பத்தி எழுத இவ்வளவு நாளான்னு கேட்பவர்களுக்காக... இன்னோரு தபா, மன்ச்சிக்கங்கபா!

இந்த சந்திப்பை பற்றி நான் என்ன நினைக்கிறேன்?
இதுகாறும் வெறும் பெயர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். இனி அதனினும் மேம்பட்ட திருப்தி கிடைக்குமென்று நினைக்கிறேன்! இனி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள திட்டம்!

அவ்ளோதான் இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!

Friday, November 17, 2006

55 : இலவசங்களின் விலை - தேன்கூடு போட்டிக்கு

Photobucket - Video and Image Hosting

என்ன பெரிய கருப்பா அடுத்த மாசம் பட்ஜெட் தாக்கல் பண்ணனும் எல்லாம் ரெடி பண்ணிட்டியா... எதிர்க்கட்சி காரனெல்லாம் கண்ல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு காத்துருக்கானுங்க என்ன குத்தம் கண்டு பிடிக்கலாம்னு

என்னங்கய்யா இப்படி சொல்லிட்டிங்க என்ன நம்பி எவ்வளவு பெரிய பொறுப்ப ஒப்படச்சுருக்கிங்க...துண்டு விழாத அளவுல பட்ஜெட் போட்ருக்கங்கய்யா விவரம் எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு பார்த்துட்டு சொல்லுங்க

மந்திரிங்க கணக்க காமிச்சு மத்தில இருந்து ஒரு ஆயிரம் கோடி வாங்குனோம் ஆனாலும் பத்தாதேய்யா எப்படி சமாளிச்ச

கஷ்டமாத்தான் இருந்துச்சுங்கய்யா... போன வருஷம் இலவச வேஷ்டி சேலை குடுத்த வகையிலயே ஒரு 500 கோடி துண்டு விழுந்துச்சு. 1000 கோடிய குடுத்துட்டு டில்லிக்காரன் கூட்டு வரிய அமுல் படுத்தனும்னுட்டான் அதுல ஒரு 1300 கோடி துண்டு விழுந்துச்சு ஆனா 1000 கோடி மானியம் கிடைச்சது அப்படி இப்படின்னு ஒரு 800 கோடி துண்டு விழறாப்ல இருந்துச்சு அப்புறம்தான் அரிசி கொள்முதல் விலைல கிலோவுக்கு 6ரூபாயும் கரும்புல டன்னுக்கு 400 ரூபாயும் குறைச்சு எடுத்தோம் அதுல கணக்கு நேராகி 1118 கையிருப்பு இருக்கு

பிரமாதம்யா... எட்டாங்கிளாஸ் படிச்சவனா இருந்தாலும் எடுத்துக்காட்டா ஒரு பட்ஜெட் குடுத்துருக்க...

***

செட்டியாரய்யா நம்ம ரேஷன் கார்ட குடுத்தீகன்னா நாளைக்கு மந்திரி வேஷ்டி சேலை தர்றாராம் வாங்கிட்டு தந்துருவனுங்க

காளி அந்த சிவப்பு கலர் பேரேட எடு... முனியா பழைய பாக்கி 350 இருக்கு இப்ப ஒம் மச்சான் செத்தாம்னு கணக்குல சேந்தது ஒரு 400 இருக்கு எப்ப அடைக்கப் போற அந்தக் கணக்க எல்லாம்

ரெண்டு மாசத்துல அறுவடை இருக்குங்கய்யா அதுவரைக்கும் வாய்தா குடுங்க அறுவடைல எப்படியாச்சும் அடச்சுப்புடறேன். அப்புறம் எழவுக்கு வந்த துணிமணியே நெறய இருக்குங்கய்யா... என் கார்டுக்கும் என் தங்கச்சி கார்டுக்குமா சேத்தின்னா 2 வேஷ்டி 2 சேலை வருமுங்க மந்திரிமார் குடுக்கறத அப்படியே இங்கன கொண்டாந்து குடுக்கறேன், வரவு வச்சிக்கங்கய்யா

எப்படில ரெண்டுரெண்டு வரும் ஓ இன்னும் ஒம் மச்சான் செத்தது கணக்குல வரலயாக்கும்... பெரிய ஆளுதாம்ல நீயி. சரி சரி இந்தா ரேஷன் கார்டு... இலவச வேஷ்டி சேலை என்ன எதுனா மட்டமான சரக்கா கொண்டு வந்து தருவானுங்க சரி அத இங்க கொண்டாந்து காளிகிட்ட கொடுத்திடு ஒரு நூறு ருபா வரவு வச்சிக்குவான்... உன் சொமை குறையுமேன்றதுக்காக சரின்னு சொல்றேன்

எலேய் காளி சாயங்காலம் நூறு ருபா வரவு வச்சுக்கிட்டு முனியண்ட்ட இருந்து ஞாபகமா ரேஷன் கார்ட வாங்கி வச்சுக்கனும் சரியா நான் MLA வீட்டுக்கு போய் மந்திரிய பாத்துட்டு வந்தர்றேன்

***

என்ன கணபதி செட்டியார் எப்படி இருக்கிங்க

வாங்க ரெங்கசாமியண்ணே... MLA ஐயா எப்படி இருக்காரு

ஐயா நல்லா இருக்காரு சரி வர்ற 19ம் தேதி அமைச்சரய்யா முதல்வர் எல்லாம் வரப் போறாங்க தெரியுமில்ல

அப்படியா ரொம்ப சந்தோஷம்... நம்ம பையன் வேலை விஷயத்தையும் அப்படியே காதுல போட்டு வைங்கண்ணே இந்த சமயத்துல

செஞ்சிரலாம் செஞ்சிரலாம்... உங்களுக்கில்லாமலா அப்புறம் 50 நோட்டுக்குள்ள 500 வேஷ்டி 500 சேலை ரெடி பண்ணிக்கங்க MLA ஆபிஸ்ல 50க்கு பில் குடுத்துட்டு நாளைக்கு செக் வாங்கிக்கங்க. செக் வந்ததும் வழக்கம் போல நம்ம கணக்குல 10 வரவு வச்சிக்கங்க. தீபாவளி பாக்கி நேராயிடும்ல...

அதுக்கென்னண்ணே பண்ணிக்கிரலாம்... பையன் வேலை விஷயம் மட்டும் மறந்துராதீங்க

சரி சரி நான் மறக்கல.. இளைஞரணி வரும்போது 2000-மாவது எழுதுங்க அப்படின்னாதான் ஐயாகிட்ட பேசவாவது முடியும் வரட்டுமா.

***

ஹலோ MLA சந்தானம் பேசறேன்

யோவ் நான் அமைச்சர் பெரிய கருப்பன் பேசறேன். உன் தொகுதில என்னய்யா நடக்குது... இன்னிக்கு தலைவர் கூப்ட்டு எகிறு எகிறுன்னு எகிறிட்டாரு.

என்ன விஷயம் அண்ணாச்சி...

நம்ம சாதிக்காரன்னு உன்ன MLAவாக்கி அழகு பாத்தா... பட்டினி சாவு நெறய ஆகிப்போச்சாம்லய்யா... மாத்து துணி கூட இல்ல, அவன் அவன் மருந்தக் குடிச்சிட்டு செத்துப் போறாம் அரசாங்கம் என்ன பண்ணுதுன்னு நெற்றிக்கண்ல கிழிகிழின்னு கிழிச்சுட்டாம் அதுலயும் உன் தொகுதிலதான் நெறயன்னு என்ன புடிச்சி வறுத்துட்டாரு

அமைச்சரே... என்ன சொல்றீங்க, நீங்க சொன்னீங்கன்னுதானே..

அதெல்லாம் பேசிக்கிட்டு இருக்காத... என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது எதயாவது செஞ்சு நம்ம கட்சி பேரக் காப்பாத்து முக்கியமா தலைவர் மனசு குளிர்ற மாதிரி எதாவது செய். அவ்ளோதான் சொல்வேன்

சரிங்கய்யா

பி.ஏ ரெங்கசாமிய கூப்பிடய்யா... யோவ் அமைச்சர்ட்ட பேசி முதல்வர் அப்பாயிண்ட்மெண்ட் புக் பண்ணிக்க. நெற்றிக்கண்ல ஒரு பக்க விளம்பரம் ஒண்ணு ரெடி பண்ணிக்க முதல்வர் தலைமையில் இலவச வேஷ்டி சேலை வழங்கறதா செய்தி பண்ணிக்க துயர் துடைக்க வந்த தூயவனே அது இதுன்னு நாலஞ்சு பஞ்ச் வச்சுக்க சரியா

அப்புறம் 500 வேஷ்டி சேலை ரெடி பண்ணிக்க தொகுதி நிதிலருந்து 50,000 எடுத்துக்க. இளைஞரணிட்ட சொல்லி விழா செலவுக்கு 15,000 வசூல் பண்ணிக்க சொல்லு

****
என்னடா காளி இன்னிக்கு மதுரைல இருந்து சரக்கு வந்துருச்சா... சரி விலை எழுதி வில்லையெல்லாம் ஒட்டிரு

என்ன விலை எழுதட்டுங்கய்யா

என்னடா வேலைக்கு சேந்து ஆறுமாசம் ஆச்சு இன்னும் இதப் போயி எங்கிட்ட கேட்டுகிட்ட இருக்க? சரி அந்த ஃபைல எடு

எடுத்தியா... வீனஸ் வேஷ்டிக்கு நேரா என்ன போட்ருக்கு

50 எண்ணம் 980ன்னு இருக்குங்கய்யா

சரி பூனம் சேலைன்னு போட்டு அதுக்கு எதுத்தாப்ல என்ன இருக்கு

100 எண்ணம் 2520ன்னு இருக்குங்கய்யா

அந்த லாரிக்கார கிருஷ்ணம்பய இத குடுத்துட்டு எவ்வளவு வாங்கிட்டுப் போனான்

அம்பது ருபா வாங்கிட்டுப் போனான்

நீ ஒரு வெவரங்கெட்டவன் நாப்பது ரூபாதான்னு அடிச்சுப் பேச வேணாமா...நீயெல்லாம் எப்படித்தான்... சரி சரி வேஷ்டிக்கு 45ரூபான்னு எழுதிக்கோ சேலைக்கு 65ன்னு போட்டுக்கோ

அப்படியே கல்லாப் பெட்டிலருந்து ஒரு பத்து ருவா எடு. முனியன் வீட்டு கேதத்துக்கு போய்ட்டு வந்தர்றேன். நீ கடையப் பூட்டி சாவிய ஆச்சிக்கிட்ட குடுத்திடு. ஆமாம் இன்னிக்கு அவன் கணக்குல எவ்வளவு பற்று.

3 சேலை, 3 வேஷ்டி-துண்டு எடுத்தான் 420 வந்துச்சு 20 தள்ளி 400 எழுதிருக்கேங்க.

***
அம்மா... செட்டியாரய்யா... இருக்காகளா

என்ன முனியா காலங்காத்தால வந்துருக்க...

இல்லம்மா, வீட்ல ஒரு காரியம்... ம்... வந்து... ஐயா இருக்காகளா

யார் இறந்தது...

என் மச்சினந்தானுங்கம்மா... கரும்பு போட்ருந்தான், அறுப்பு முடிஞ்சதும் மில்லுல ரேட்ட கொறச்சுட்டாங்க அறுப்பு கூலிகூட கட்டலன்னு பூச்சி மருந்த எடுத்துக் குடிச்சிட்டாம் பாவிப்பய... பச்சப் பச்சப் புள்ளைங்கம்மா... எந்தங்கச்சிய கண் கொண்டி பாக்க முடியல... சொல்லும்போதே துண்டெடுத்து வாய் பொத்தி குலுங்க ஆரம்பித்தான் முனியன்.

ஏங்க... இங்க செத்த வந்துட்டு போங்க

கேட்டுகிட்டுதான் இருந்தம்டா முனியா... சாயந்தரம்தான தூக்குவீங்க வந்தர்றேன்... இப்ப எதுனா வேணுமா

கேதத்துக்கு கோடித் துணி எடுக்கணும்ங்கய்யா அதுக்குத்தான் இத்தனை காலையில எழுப்ப வேண்டியதா போச்சு...

சரி சரி காசு எதுவும் வச்சுருக்கியா

இல்லங்கய்யா... ரேஷன் கார்டு எடுத்துட்டு வந்திருக்கேன்

***

(இந்த கதைய கடைசி பகுதில இருந்து கூட மேல படிச்சிகிட்டு போகலாம்...பெரிசா ஒண்ணும் மாற்றம் இருக்காது)

Tuesday, October 17, 2006

54 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு

Photobucket - Video and Image Hosting

இதுனால கோயம்புத்தூரு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் சுத்துவட்டாரத்துல இருக்ற 18 பட்டிகள்ள இருக்ற வலைப்பதிவர்களுக்கும் சொல்லிக்கறது என்னன்னா....

வலைப்பதிவர் உலகில் கோவை மண்ணிலிருந்து நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் சந்திப்புகள் எதுவும் நடந்ததாக தகவலில்லை. (நடந்து என் கவனத்தில் வராமலும் போயிருக்கலாம் அப்படி இருந்தால் - மன்னிக்க!)

இந்த முறை தீபாவளி விடுமுறையை ஒட்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தால் என்ன என்று வெகுநாட்களாய் சிந்தித்து வந்ததில் விளைந்த பதிவு இது.

விடுமுறைக்கு நிறைய பேர் தங்கள் சொந்த ஊருக்கு வருவார்கள் என்பதால் நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கூடுதல் அனுகூலம்.

விசாரித்த வரையில் இன்னொரு பெருங்கூட்டமும் இருக்கிறது அதுதான் நம்மூரு அம்மணிகளை (தங்கமணி) மணந்திருக்கும் கூட்டம். எனவே மாமனார் வீட்டுக்கு வந்திருப்போரும் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது ;-)

சந்திப்புக்கு வர ஆர்வமிருப்போர் ஆஜர் என்று ஒரு பின்னூட்டமிட்டால் மகிழ்வேன் - வோம்! எண்ணிக்கையை பொறுத்து இடத்தை முடிவு செய்து கொள்ளலாம், அக் 22, 2006 ஞாயிற்றுக் கிழமை... மிக மந்தமான நேரமான மாலை 3 - 5 க்குள் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்பது திட்டம்.

வடை-போண்டா என்று குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து கோவை புகழ் 'பேக்கரி'கள் ஏதாவதொன்றில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அல்லது வேறெதுவும் சுவாரசியமான இடங்களை/பதார்த்தங்களை பரிந்துரைக்கலாம்.

தற்போதைய திட்டம்
===================
இடம் : லாலி ரோடு - அரோமா பேக்கரி
நாள் : அக், 22, 2006
நேரம் : காலை 10 - 12

கோவையை சேர்ந்த சில நண்பர்கள் இப்போதே விடுமுறை எடுத்துக்கொண்டு பிரயாணங்களில் ஈடுபட்டிருக்கலாம்... அல்லது இந்தப் பதிவு அவர்கள் கவனத்திற்கு வராது போகலாமென்பதால்... இப்பதிவை பார்ப்போர் சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியச் செய்யுங்கள்.

அலை கடலென திரண்டு, அனைவரும் வாரீர்... ஆதரவு தாரீர் (ஓ தேர்தல்-லாம்தான் முடிஞ்சுருச்சே). சீக்கிரமே சந்திப்போம், அதுவரை உங்கள் மேலான ஆலோசனைகளை எதிர்நோக்கி...

நண்பர்களே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

Monday, October 16, 2006

53 : விடுதலைப் போராளிகள்

Photobucket - Video and Image Hosting

"எங்க பரம்பரையில ஆம்பளைங்க கூட இம்புட்டு படிப்பு படிச்சதில்ல, எம்பேத்தி எட்டு ஜில்லாவுக்கும் கலெக்டராகப் போறா", பார்ப்போரிடமெல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்த பாட்டி "மாப்ள சொல்றத கேட்டு நடந்துக்க தாயி" என்றதில் காலம் காலமாய் பெண்கள் கையில் போடப்பட்டிருந்த விலங்கு என் கையிலும் அலங்காரமாய் ஏறியது.

"அம்மா நான் இன்னும் படிக்கணும்" என்றதற்கு "சும்மா கிடடி, நீ படிச்சிருக்ற படிப்புக்கு மாப்ள தேடறதுக்கு முன்னாடி நாக்கு தள்ளுது... இன்னும் படிக்கப் போறாளாம் படிக்க..." அவள் காலைச் சுற்றியிருந்த சங்கிலியின் கண்ணிகள் என் கால்களையும் இணைத்துக் கொண்டது.

"அம்மாடி கல்யாணி, அப்பா இந்த வருஷத்தோட ரிடையர்ட் ஆகப்போறேன், வர்ற பணத்துல உன் கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டன்னா என் கடன் தீர்ந்துரும்"
"இல்லப்பா, நான் வேலைக்கு போறேன், அப்படியே நான் ஆசப்பட்ட ஆராய்ச்சிப் படிப்பையும் படிச்சிடறேன்ப்பா...அதுக்கப்புறம் கல்யாணத்த பத்தி யோசிக்கலாமே?"
"இல்லம்மா அதெல்லாம் சரிவராது, வயசாச்சி...நாலுபேர் நாலு விதமா பேசிடுவாங்க", என்று தலைகோதி சொன்னதில், முகம் தெரியாத சமூகத்தின் போலி சட்டதிட்டங்கள் முன் என் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் தலைகுனிய வேண்டியதாயிற்று.

அதுவும் அமெரிக்க மாப்பிள்ளை என்றதும் என் பேச்சைக் கேட்க ஆளே இல்லை, "ஏங்க நான் மேற்கொண்டு இங்க படிக்கட்டுமா..." கேள்வி முடியுமுன்னரே "அதெல்லாம் காசுக்குப் பிடிச்ச கேடு... படிச்சு என்ன செய்யப் போற... ஆச்சு, அடுத்த வருஷமெல்லாம் குழந்தை குட்டின்னு, உனக்கு வீட்ட பாத்துக்கறதுக்கே நேரமில்லாமல் போய்டும் பாரேன்". எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தீய்ந்து போனது அவனுக்கெப்படி தெரியும்.

"ஏய் அடுப்புல ஏதோ தீஞ்சு கருகுது பார்... கவனமெல்லாம் எங்க இருக்கு", ஆதிக்க உணர்வின் கோரவிரல்களில் நகங்கள் படுவேகமாக வளர்ந்தன. வலுக்கட்டாயமாய் உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு ரசித்து ரசித்து சமைத்துப் போட்டாலும், டி.வியில் ஒரு கண் வைத்துக்கொண்டே பொங்கலா, கிச்சடியா என்றுகூட தெரியாமல் சாப்பிட்டுப் போகையில், சமைக்கும்போது பட்ட தீக்காயம் இன்னும் கொஞ்சம் எரிகிறது.

இதோ, இன்று அடிவாங்காத குறையும் தீர்ந்துவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் வழிந்தோடும் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை. கண்ணாடி முன் நின்று என் கன்னங்களை தடவுகையில் அவன் விரல் தடங்கள் என் விரல் பட்டதும் தேக்கி வைத்திருந்த அத்தனை கண்ணீரும் அணை உடைத்து என் கன்னங்கள் வழியே வழிந்தோடுகிறது.


***ooOoo***

ஹாய் சந்துரு

ஹேய் கல்ஸ், நியூயார்க் நகரம்.. உறங்கும் நேரம்... என்ன பண்ற?

ஹா ஹா, ரமேஷ் இன்னும் வேலையில இருந்து இன்னும் வரல, அதான் அதுவரைக்கும் நெட்ல மேயலாம்னு பாத்தா நீ இருந்த ஆன்லைன்ல... கூப்ட்டேன், சரி நீ என்ன பண்ற

நான்கு சுவற்றுக்குள்ளே... நானும் கொசுவத்தியும் கொடுமை கொடுமை ஓ, கொசு, கொடுமை கொடுமை ஓ!

ஹே... கத்தாதடா... உன் பாட்டுதான் கொடுமையா இருக்கு... இன்னும் அப்படியேதாண்டா இருக்க நீ எப்பப் பாத்தாலும் கடிச்சுக்கிட்டு
சரி உன் சிலோன் பொண்டாட்டி எப்படி இருக்கா


என்னமோ ஊர் ஊருக்கு பொண்டாட்டி வச்சுருக்றா மாதிரி சிலோன் பொண்டாட்டி எப்படி இருக்கான்ற... ம்ம்.. சூப்பரா இருக்கா ரெண்டு பேரும் இந்தியா வந்திருக்கோம்... ரெண்டு வாரமாச்சு

ஓ கிரேட்... போன ரெண்டு வாரமாத்தான் ஊருக்குள்ள சிக்-குன் குனியான்னு சொன்னாங்க... பொறு எதுக்கும் மதுரை முனிசிபாலிடிக்கு ஃபோன் பண்றேன்.

பாத்தியா வார்ற... அப்புறம் எப்படி இருக்கு அமெரிக்க வாழ்க்கை... சொல்ல மறந்துட்டனே சுலோவுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு தெரியுமா

ம்ம்... தெரியும்டா, போன வாரம் அவ எனக்கு ஃபோன் பண்ணி கல்யாணம்ன்னா... சந்தோஷந்தான், அமெரிக்கா மாப்பிள்ளைன்னு சொல்லும்போது ஃபோன்ல கூட அவ பூரிப்ப மறைக்க முடியவில்லை. எனக்குன்னா தாங்க முடியாத ஆத்திரம், அடியே ஒத்துக்காதடி! அமெரிக்கா.. அமெரிக்கான்னு இங்க வர்றதுக்கு முன்னாடிதான் அடிச்சுக்கும்... வந்த பின்னாடிதான் தெரியும்னு, எல்லாத்தையும் கொட்டிடனும் போல அப்படி ஒரு படபடப்பு வந்திடுச்சு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டு சந்தோஷம்னு சொல்லி ஏதோ ஒப்பேத்தி வைச்சேன். ஒரு வேளை அவ திருமண வாழ்க்கை சந்தோஷமா அமைஞ்சா என்னால கெட்டுப் போனதா இருக்க வேண்டாமே!

ஆரம்பிச்சிட்டியா உன் புலம்பல... நல்ல வேளை சுலோவ குழப்பாம இருந்தியே...

ஹேய் நான் இங்க கிட்டத்தட்ட சிறையில இருக்கேன் தெரியுமா, என் கஷ்டத்த சொல்லி புலம்பறதுக்குக் கூட ஒரு ஜீவனும் கிடையாது இங்கே. இதுலேர்ந்து எப்படா விடுதலை கிடைக்கும்னு இருக்கேன். அது சரி உனக்கெங்கே தெரியப் போகுது எங்களோட வலியைப் பற்றி, நீயும் ஒரு MCPதானே

என்ன, மேல் சாவனிஸ்ட் பிக்-ன்றியா... நீ என்ன வேணும்னா திட்டு, உன் கனவை பாதுகாக்க, செயல்படுத்த உனக்குத் தெரியல, ஊர்ல இருக்ற எல்லார் மேலயும் கோபப்படுற...

எல்லாருமா சேர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க... இப்போ என்ன விட்டுட்டு ஓடிடுன்றியா

உடனே அந்தக்கரைக்கு தாவினா எப்படி கல்யாணி, விடுதலைன்றது விட்டுட்டு ஓடறதுல இல்ல. உன் ஆசைகள் மேல உனக்கில்லாத அக்கறை, அதைப் பற்றி கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் கூட தெரியாத உன் கணவனுக்கு இருக்கனும்னு எதிர்பார்க்கிறது நியாயமா?

என்னடா படிக்கணும்னு ஆசப்படறேன் அது தப்பா, இதக்கூட புரிஞ்சிக்க முடியாதா

எனக்குத் தெரிஞ்சு நிறைய பேர், சும்மா பேருக்கு, அமெரிக்காவில் படித்தேன் அப்டின்ற பெருமைக்கு படிப்பாங்க உன்னையும் அவர் அப்படி நினைத்திருக்கலாம்ல... உன் ஆசைல நீ எவ்ளோ தீவிரமா இருக்கன்றத செயல்ல காமி, ரமேஷே புரிஞ்சிப்பான், நான் பேசின வரைக்கும் அவன் ரொம்ப நல்லவனாத்தான் தெரியறான்.

ம், செயல்ல காமிச்சா மட்டும், அப்பயும் எதுனா நொண்டிச்சாக்கு சொல்வீங்க... ஏதோ மனைவி ஆசைய அப்படியே நிறைவேத்தறா மாதிரி

கல்ஸ் இப்போ நாங்க எதுக்கு இந்தியா வந்திருக்கிறோம் தெரியுமா? ராமேஸ்வரத்துல இருக்ற அகதி முகாம்ல சேவை செய்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலொன்றில் பொறுப்பெடுக்க வந்திருக்கிறோம். உனக்கே தெரியும் ஸ்ரீலங்கா நிலைமை, குமுதினிக்கு அவங்க ஊர் மக்களுக்கு எந்த விதத்திலாவது உதவணும்னு ஆசை, நான் கூட முதல்ல புரிஞ்சிக்கல. இத்தனைக்கும் எங்களோடது காதல் கல்யாணம். ஆனா அவ சும்மா இல்ல கனடாவிலிருந்து சுனாமி, பூகம்பம்னு ஒவ்வொன்னுக்கும் நிதி திரட்டிக் குடுப்பா. கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்து அதன் மூலமும் உதவிக்கிட்டுருந்தா.


இப்போ போர்மேகம் சூழ்ந்து நிறைய பேர் வெளியேறிக்கிட்டிருக்ற இந்த சூழ்நிலையில இன்னும் நிறைய பண்ணனும்னு ஆசைப்பட்டா, இவளோட உறுதியப்பார்த்துட்டு என் வேலையை நான் மதுரைக்கு மாத்திக்கிட்டேன். சம்பளம்னு பார்த்தா மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் ஆனா குமுதினி முகத்தில் தெரியும் நிம்மதிக்காக நானும் இப்போல்லாம் வார இறுதிகள்ல அங்க போயிடறேன். விடுதலை, விடுதலைன்னு சொல்றியே, நீ இவங்க கிட்ட எதை விடுதலையா நினைக்கிறாங்கன்னு கேட்டீன்னா, வாழ்க்கை பற்றிய நமது பார்வையே மாறிடும்னு நினைக்கிறேன்.

என்னடா என்னை என் விடுதலைக்காக விட்டுட்டு ஓடாம போராடுன்ற... அங்க போராடாம ஓடி வர்ற அகதிகளுக்காக சேவை செய்யப் போறேன்ற

Photobucket - Video and Image Hostingகல்ஸ், என்னைக் கேட்டா அகதிகளைக் கூட விடுதலைப் போராளிகள்னுதான் சொல்லுவேன், போரின் குரூர நியதிகளை வெறுக்கும் போராளிகள்தான் அகதிகளா வெளியேர்றதுக்கு துணியறாங்கன்றது என்னோட கருத்து. சொந்த மண்ணை பிரிவது எவ்வளவு வேதனையான விஷயம் தெரியுமா?
மேலும் எந்த இடத்தில் நடக்கும் போராக இருந்தாலும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல் விளையாட்டு மிருகத்தனமானது.

உன்னோட விஷயம் அப்படியில்லை வானம் கூட உனக்கு எல்லை இல்லைன்றத நீ புரிஞ்சிகிட்டாலே போதும். உன்னை யாரோ கூண்டுல போட்டிருக்கிறதா நீயே நினைச்சுக்கிட்டு உனக்கு சிறகு இருப்பதையே மறந்துட்டன்னுதான் சொல்வேன்.

ம்ம்... ஏதோ சொல்ற, புரிஞ்சா மாதிரி இருக்கு... யோசிக்கிறேன். அப்புறம் கார் சத்தம் கேக்குது, ரமேஷ்தான் வர்றாருன்னு நினைக்கிறேன்... பசியில வருவான், உன் கூட அப்புறமா பேசறண்டா சந்துரு... சொல்ல மறந்துட்டனே நீயும் குமுதினியும் ரொம்ப நல்ல காரியம் பண்றீங்கடா...உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா பண்றேண்டா... வர்றேன் அப்புறமா கண்டிப்பா பேசுவோம்...பை பை டாட்டா!

***ooOoo***

அக். 16, 2006 அன்றைய கல்யாணியின் டைரி குறிப்புகள்
......
...
.
.
விரல் தடம் பட்ட இடங்களிலெல்லாம் நான் மறுக்க மறுக்க முத்தமிட்டான் ரமேஷ். நான் நினைத்தது போலில்லை அவனுக்கு காதலிக்கவும் தெரிந்திருக்கிறது, வேலையினாலெல்லாம் அன்று அவனுக்கு தாமதமாகவில்லை. எனக்கொரு பரிசு வாங்கவென்று அலைந்து, எனக்கு மிகவும் பிடித்த காதல் பறவைகள் ஒரு ஜோடி வாங்கி வந்தான். 'என்னை மன்னிப்பாயா' என ஒரு அட்டையும் தந்து ரோஜாப்பூவொன்றோடு என் முன்னே மண்டியிட்டான்.
.
.
...
......
ஹலோ இது என்னோட டைரிங்க... நான் என் ஃபிரெண்டோட நெட்ல பேசினத கேட்டுட்டிங்க, என் டைரியப் படிச்சுட்டிங்க, இதுக்கு மேலயும் சின்னஞ்சிறுசுங்க இருக்ற இடத்துல இப்படி விவஸ்தையில்லாம நிக்கிறதா....

சரி சரி போகும் முன் அதுக்கப்புறம் நடந்ததயும் கேளுங்க. மொத்தம் மூணு விஷயம் பண்ணினேன்-னோம்.

நான் ஆராய்ச்சி உதவியாளராய் வேலைக்கு சேர்ந்து விட்டேன், வீட்ல இருந்தபடியே வேலை செய்யலாம், எனக்கும் ரமேஷுக்கும் மிக்க மகிழ்ச்சி.


சந்துரு-குமுதினி சேவை செய்யும் தொண்டு நிறுவனத்தின் நியூயார்க் நகர கிளை இனிதே தொடங்கப்பட்டது ரமேஷ்-கல்யாணி இருவரையும் இணைத்துக் கொண்டு.

மறுநாள் காலையிலேயே அருகிலிருந்த பூந்தோட்டத்திற்குப் போய் ரமேஷ் வாங்கி வந்திருந்த காதல் பறவைகளை வானில் பறக்க விட்டோம், வானத்தை விட அழகிய இல்லம் பறவைகளுக்கு ஏது?

52 : வேலிகளால் கிடைக்குமா விடுதலை?

Photobucket - Video and Image Hosting

என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாச் செடியொன்று நட்டேன்
பூக்கள் தருமென்ற நம்பிக்கையோடு

படுபயங்கர கனவுகளுடன்
மூச்சு வாங்கி விழித்த தினத்தில்
மொட்டொன்று முளைத்து ஆற்றுப்படுத்தியது

குழந்தையின் இளஞ்சிவப்பு உதடாய்
மலரொன்று மலர்ந்த தினத்தில்
வேலிபோலிருந்த சுவரில்
விரிசல் விழுந்தது

முதல் பூவை சாமி பாதத்தில்
வைக்கலாம் எனப் பறிக்கையில்
"அண்ணா நான் இந்தப் பூவை எடுத்துக்கறனே"
பட்டாம்பூச்சி கண்கள் கெஞ்ச
பக்கத்துவீட்டிலிருந்தொரு சிறுமி கேட்க
மேலும் சில செங்கல்கள் உதிர்ந்தன
எங்கள் வீடுகளின் வேலியிலிருந்து.

பிறிதொரு நாளில் ஒரு ரோஜாக்கன்றை
அவளுக்கு பரிசளிக்க,
அவர்கள் வீட்டிலும்
பூத்துக் குலுங்கின பூக்கள்

முட்கள் இருந்தும், பூக்கள் குலுங்கும்
கிளைகள் இணைந்து தழுவி நின்றன
இருவர் வீட்டு வேலிகளும் தாண்டி

"உங்க சாமிக்கு எங்கவீட்டுப் பூ வைங்க"
அதே பட்டாம்பூச்சி தேனாய் சொன்னதில்
இருவர் வீட்டு வேலிகளும் இடித்துவிட்டு
ரோஜாவனமொன்று அமைக்கலாம் என
கனவு கண்டிருந்தேன், குயில் இசையோடு!

யாரோ ஒருவர் பூப்பறிக்கையில்
கவனக்குறைவில் முள்ளொன்று பாய
காரணம் தேடி ஆரம்பித்தது யுத்தம்

வேலிகள் தாண்டி செடிகளை நாசம் செய்தோம்
வேரறுந்த செடியில்
பூக்களும், இலையும் காய்ந்து உதிர்ந்தபின்
முற்கள் மட்டுமே எஞ்சியிருந்தன

பின் வேலிகளை பழுது பார்த்து
முள் கம்பிகளும் இட்டு பலப்படுத்தினோம்

முள்வேலியால் காயம் பட்டு
மீண்டும் மூளலாம் போர்!
விடுதலை?

Thursday, October 12, 2006

51 : முந்தைய பதிவின் நதிமூலம்!

Photobucket - Video and Image Hosting
ஹும்...சே யேக் ஜ்ஷ்டுஎ ஷ்...... எண்ணே முதல்ல கட்ட அவுத்துவிடுங்கன்னே சின்னப்புள்ள மாதிரி விளையாண்டுகிட்டு

ம்... வாடே கோகோ, எம்புட்டு நாளு கூப்ட்டுகிட்டு இருந்தேம் நீ பாட்டுக்கு நமக்கு டிமிக்கி குடுத்துக்கிட்டு இருந்த பொறவு என்னிய என்ன பண்ணச் சொல்லுத

அதுக்காக இப்பிடியா உள்ளாட்சி வேட்பாளர் கணக்கா ஆள வச்சு கடத்தி செந்தூக்கா தூக்கியாரது...

ஆமா இவரு அந்தானைக்கி கவுன்சுலர் ஆயிட்டாலும்... கெடந்து குதிக்காதல வெசயத்துக்கு வாறேன் அந்தா இந்தான்னு அம்பதாவது பதிவு எழுதப் போறேன், என்ன எழுதலாம்னு ஐடியா கேக்கத்தாம்ல உன்னத் தூக்கியாந்தம்.

ஆமா இம்புட்டுக் காலம் என்னியக் கேட்டா எழுதினீய இன்னிக்கு என்ன புதுசா வாழுது... இந்த 49-ஏ எப்படி வந்ததுன்னு எனக்குத்தான் தெரியும், சும்மா கோழியடிச்சது, போளி சாப்ட்டது, ஒரே கதையா ஆறாப் போட்டது எவனோ அனுப்ச்ச போட்டா வீடியோவெல்லாம் வலையேத்தி ஒப்பேத்திப்புட்டு என்னமோ எழுதறதுக்கு ஐடியா கெடைக்கலன்றீரு... நானென்ன கேனப்பயலா

அதில்லடே 50-ன்றது ஒரு கவுரதையான நம்பர்தானல இந்த கிரிக்கெட்ல கூடப் பாரேன் 50 அடிச்சதும் மட்டைய தூக்கி காமிக்குதாக... அதான் எதுனா நல்ல வெசயத்த எழுதலாம்னு...

யோவ் எனக்கு நல்லா வாயில வந்துரப் போகுது...பெரியவுக வந்து போற இடம்ன்றதால சும்மா விட்டு வைக்கேன்... நீர் வேணும்னா டைப்படிச்ச கீ-போர்ட்-அ தூக்கி காட்டுமேய்யா 50 அடிச்சுட்டேன்னு, சரி பேசாம வெட்டிப்பயலோட அதிசய எண் மாதிரி இந்த 50-க்கும் எதுனா செஞ்சுவுடுமே(ன்)

ஆத்தீ 50 வெசயத்துக்கு எங்கல போவேன்... 1-க்கே இங்க சிங்கியடிக்குது

ஆமாம்யா ஒமக்கு கள்ளும் குடிக்கனும் பல்லுலயும் படப்படாது... சரி பேசாம டைகர் பிஸ்கட் மாதிரி நீரு 50-50 பிஸ்கட் பத்தி எழுதி ஒப்பேத்திரும்

திங்கிறதப்பத்தியே எழுதிக்கிட்டு இருந்தா வெளங்கிரும்ல... நல்ல யோசனயா சொல்லுடே தின்னிமாடா

எல்லாம் என் நேரம்... பேசாம ஒரு 50 பதிவு, எனக்குப்பிடித்த 50 பாடல்கள், 50 படங்கள்னு...ம்...வேணாம் வேணாம் நமக்கு 6-பதிவு போடவே ஆள் கிடைக்கல... 50-ன்ற நம்பரத்தாண்டி யோசிப்போம்... பேசாம சிங்கைப்பாண்டின்னு இன்னோரு பதிவு போட்டா...

போல சவத்துமூதி... நான் என்னிக்கு சினா பானா போட்டனோ அன்னில இருந்து ஆனந்த விகடன்ல பராக் பாண்டி-ய நிறுத்திப்புட்டாக, நம்ம ராசி அப்பிடி இருக்கு...

ஹா... ஹா... அப்பிடியாண்ணே எனக்கு இந்த விசயம் புதுசு, இந்த தேன்கூடுல இனிமே தொடர்கதையெல்லாம் எழுதக் கூடாதுன்னு சொல்லிப்போட்டாகளே அந்த மாதிரி... ஹா ஹா, ம்ம்... அப்போ பாத்துத்தாம் யோசனை சொல்லணும்... பேசாம, இந்த மாச தலைப்புக்கு ஒண்ண எழுதிப் போட்டுட்டா எண்ணிக்கைக்கு எண்ணிக்கையும் ஆச்சு போட்டிக்கும் படைப்பு ஆச்சு

போடே போக்கத்த பயலே அதெல்லாம் பெரிய விஷயம்... விடுதலைன்ற தலைப்பே விடுகதை போடுதா மாதிரி இருக்கு இப்போதைக்கு ஆகக்கூடியத சொல்டே

பேசாம கவிதை ஒண்ணை எழுதிட்டா? நம்ம கவிமடத்தலைவன் சொன்னாப்ல... இப்போத்தான் நட்சத்திரம் கண் சிமிட்னத வச்சு பாடம்லாம் எடுத்தாருல்லா

சொறிஞ்ச எடம் சொகமா இருக்கு கொஞ்சம் சுண்ணாம்பு தடவுன்னானாம் ஒன்ன மாதிரி ஒருத்தன்... அடே அவர் சொல்றதெல்லாம் பெரிய பெரிய விஷயம், நமக்கு அதப் படிக்கும்போதே கண்ணக் கட்டுது, கவிதை வந்தா ஒண்ணல்லாம் ஏம்ல கடத்துதேன்... ஆங் சமயத்துக்கு ஒனக்கும் நல்ல நல்ல ரோசனையாத்தாம்ல வருது... இரு தமிழோவியத்துக்கு அனுப்பின கவிதை ஒண்ணு இருக்கு அத வச்சு ஒப்பேத்திட்டு வாரம்...

இப்போதைக்கு வ்வ்வர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா...

Wednesday, October 11, 2006

50 : வாழ்க்கை சிகரெட் - காதல் நெருப்பு #1

Photobucket - Video and Image Hosting

குளிர்கால இரவது
என் கம்பளி ஜில்லிட்டுக் கிடக்கிறது

கலைந்த என் தூக்கமங்கே
நெளிந்து புரள்கிறது

பரிதாபப்பட்ட முட்டாள் இயற்கையோ
பனிப்போர்வை போர்த்திச் செல்கிறது

நுரையீரலையாவது கதகதப்பூட்டலாமென்று
தேடியதில் கிடைத்தது
தீக்குச்சியில்லா தீப்பெட்டியும்
கன்னித் தன்மையோடு ஓரு சிகரெட்டும்

தீப்பொறியாய் உதிர்ந்த நட்சத்திரமொன்று
என் கை சேரும்முன்னே அணைந்து போயிற்று

நெருப்பின்றி புகையாதே - பனிப்புகை பார்த்தேன்
நிச்சயம் நெருப்பிருக்கும் மேலே

விழுகின்ற வெண்பனி விழுதேறி
விண்ணுச்சி அடைந்தேன் சிகரெட்டோடு

மேகக் கிளைகள் ஒதுக்கினேன்
சில நட்சத்திரப்பூக்கள் உதிர்ந்தன

அதிர்ந்த நீ நிமிர்ந்து பார்த்தாய்
அட, தீப்பொறி தேடிவந்தால், தேவதை

உன் கையில் நிலாக் கண்ணாடி
எனக்கிப்போது இரு நிலவுகள் தெரிந்தன

உச்சிக் கிளையிலிருந்து உன்னருகே குதித்தேன்
பதறிய நீ, உதறியதால் சிதறியது, நிலாக்கண்ணாடி
விண்வெளியெங்கும் நீ, நான் இறைந்து கிடந்தோம்

உதயசூரியனின் சாயமெடுத்து,
பூசிக்கொண்ட உதடசைத்து
என்ன வேண்டுமென்றாய் நீ

என் சிகரெட் பற்ற வைக்க
கொஞ்சம் நெருப்பு வேண்டுமென்றேன்

சிக்கி-முக்கி கல்லாய் உரசிக்கொண்டோம்
தெறித்த பொறியொன்று வெறிகொண்டெரிந்தது.

இந்த வாரம் தமிழோவியத்தில் வெளிவந்திருக்கிறது. நான் எழுதியதில் எனக்கு மிகப் பிடித்த கவிதை.

இதற்கு முந்தைய தேவதைக் கவிதை இங்கே!

Thursday, October 05, 2006

49 : என் வாழ்க்கை... நான் கொடுத்த விலை

Photobucket - Video and Image Hosting
உன் தாய் தந்தையிடமிருந்து பேச்சு நடைகளைக் கற்றுக் கொள்கிறாய், ஆசிரியர்களிடமிருந்து எதைப் பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொள்கிறாய், புத்தகங்களிடமிருந்துதான் உனக்கு சிறகுகளும் இருப்பதை உணர்ந்து கொள்கிறாய் என்று யாரோ சொன்னது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட தினத்தில் நான் "One" என்ற புத்தகத்தை படித்து முடித்திருந்தேன்.

மேலே படத்தில் உள்ள ரிச்சர்ட் பாக்(Richard Bach), One, Jonathan Livingston Seagull, Bridge Across Forever, Illusions போன்ற பல பிரபல புத்தகங்களின் எழுத்தாளர். அவர் (Richard Bach) எழுதிய One என்ற இந்த புத்தகத்தை நண்பனொருவன் பரிந்துரைத்தான். படித்து முடித்ததும் நண்பனைவிட, இந்த புத்தகத்தை மிக நெருக்கமாக உணர ஆரம்பித்துவிட்டேன். இந்த புத்தகத்தை சிபாரிசு செய்ததாலேயே அவன் இன்னும் நெருங்கிப் போனது தனி நிகழ்வு.

கதை சொல்லும் பாங்கு, நிகழ்வுகளின் கட்டமைப்பு மற்றும் சொல்ல வரும் விஷயத்தின் நேர்த்தி இவையனைத்துமே தனித் தனியாக சிலாகிக்க வேண்டிய விஷயங்கள், ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் இந்தப் புத்தகத்தின் அடிநாதமாக விளங்கும் சில கருத்துக்கள் மற்றும் கேள்விகள்தான்.

ஒவ்வொரு யோசனையும், ஒவ்வொரு தீர்மானமும் நம்மைப் போன்ற ஒரு பிரதியை உண்டாக்கி விடுகிறது, இந்த பிரபஞ்சத்தில்.

சிந்திக்கவே எவ்வளவு சுவாரசியமான விஷயம் இது, ஒரு கல்லூரியை உதாரணமாக எடுத்துக் கொண்டீர்களானால், படிப்பு முடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு முடிவு எடுப்பார்கள் அதன் படி அவர்கள் வாழ்க்கைப் பாதையே மாறும். இவர்கள் அனைவரும் உங்கள் பிரதிகள் என்று வைத்துக் கொண்டீர்களானால் உங்கள் வாழ்வும் ஒவ்வொரு முடிவுகளால் எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்று ஊகிக்க உதவும். இதையே நம் வாழ்வில் முன் சென்று பார்ப்பதற்கும் உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இன்று நேரும் மிகச்சிறிய மாற்றம், நம்மை மிக வித்தியாசமான நாளையில் கொண்டுசேர்த்து விடுகிறது. (A tiny change today brings us to a dramatically different tomorrow)

இந்த புத்தகத்தில், நமது யோசனை, சிந்தனை, தீர்மானங்களை சேகரிக்க, அல்லது அவற்றின் வழி சென்று பார்க்க வகை செய்யும் சக்தி வாய்ந்த ஒரு தொழில்நுட்பத்தை பற்றி அதிக குழப்பமின்றி பேசுவார் பாக், கால இயந்திரத்தை இன்று நடைமுறையில் இருக்கும் மிகச் சாதாரணமான போக்குவரத்து சாதனம் போலவே பாவித்துக் கொள்கிறார். இதுவே நம்மை அதிக எதிர்க்கேள்விகளின்றி கதையின் போக்கில் செல்ல துணை புரிகிறது. ஆசிரியர் நம்மைப் பார்த்துக் கேட்கும் ஆதாரக் கேள்வியை புரிந்துகொண்டு, நம்மை நாமே அதைக் கேட்டுக் கொள்ள வைக்கும் பணியில் வெற்றியும் பெற்று விடுகிறது ஆசிரியரின் இந்த படைப்பான "One".

நீங்களே படித்துணர வேண்டிய விஷயங்கள்தான் இந்தப் புத்தகமெங்கும் நிறைந்து இருப்பதால், இந்த புத்தகத்தைப் பற்றி நான் வேறு எதுவும் கூறப் போவதில்லை. இந்த புத்தகம் எழுப்பிய மிக சுவாரசியமான கேள்விகள் சிலவற்றை மட்டும் கேட்டு வைக்கிறேன்.

1) இப்போது இருக்கும் நீங்கள் உங்களை உங்கள் சிறு வயதிலே சந்தித்தால் என்ன கூறுவீர்கள்? உங்களின் எந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்கள்?

எ.கா : பத்தாவதில் மார்க் கம்மி என்று இப்படி அழுது கொண்டிருக்கிறாயே... இந்த மார்க் உனக்கு உபயோகமாகப் போவதேயில்லை ஏனென்றால் நீதான் பனிரெண்டாவதில் ஸ்டேட் பர்ஸ்ட். அழாமல் அடுத்த வேலையைக் கவனி. (அல்லது) சிறுசிறு சண்டைகளால் அவனுடன் பேசாமல் இருக்கிறாயே, கல்லூரி முடியும் இந்த தறுவாயிலாவது அவனோடு பேசிவிடு, இந்த வாய்ப்பை விட்டால் அவனை நீ சந்திக்கவே போவதில்லை. குறைந்த பட்சம் உன் 40 வயது வரை

2) அப்புறம், மேலும் ஒரு சூழல். இப்போதுள்ள உங்களை, உங்களின் 60 வயது பிரதி சந்தித்தால் என்ன கேட்டுக் கொள்வீர்கள்?

எ.கா : சோழிங்கநல்லூர் பக்கத்தில் வாங்கிய மனை விலையேறியதா?
(அல்லது)
ஓயாமல் குடியும் கும்மாளமாக இருக்கிறேனே, நான் 60 வயது வரை உயிரோடு இருந்தேனா என்ன?

அதற்கு அவர்கள் பதில் என்னவாக இருந்திருக்கும்? அவர்கள் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?

யோசியுங்கள், ஏனென்றால் நம் வாழ்வின் கடைசிக் கேள்வி இப்படியிருக்கலாம்.

இப்போது உள்ள நானாக மாறுவதற்கு விலையாக என் வாழ்க்கையையே தந்திருக்கிறேன். நான் தகுந்த விலையைத்தான் கொடுத்திருக்கிறேனா ? (I gave my life to become the person I am right now. Was it worth it?

இந்தக் கேள்விகளை சில வலைப்பதிவர்களிடம் கேட்ட போது...

அனிதா
1) அந்தச் சிறுமியிடம், பெற்றோர்களோடும், தங்கையோடும் இன்னும் அதிக நேரம், அதிக மகிழ்ச்சியாக செலவழிக்கச் சொல்வேன், (பிற்காலத்தில் அவ்வளவாக கிடைப்பதில்லை அந்தப் பொழுதுகள்). பள்ளிக்கு செல்வதே இன்பம் என்பதை எடுத்துக் கூறுவேன், விளையாடுவதற்கென்றே நேரம் ஒதுக்கப் பட்டிருக்கிறதே!! (சிறு வயது அனிதா, அலுவலகம் செல்பவர்களை பொறாமையுடன் பார்ப்பாள் :-))
2) சூப்பர் சீனியர் அனிதா நான் கேட்பதற்கு முன்னமே, வாழ்க்கை விலைமதிப்பற்றது எனவே சின்னச்சின்ன விஷயங்களுக்காகவெல்லாம் வருத்தப்பட்டு அழுது கொண்டிராதே என்பாளாயிருக்கும். மேலும், இப்போது நீ வருந்தும் விஷயங்கள் எல்லாம் பைசா பிரயோஜனமில்லாதவை... ஏனென்றால் நானும் என் பிரிய கணவனும் பண்ணைவீட்டில், மகன், மகள், பேரன் பேத்திகளுடன் வாழ்க்கையை உல்லாசமாக க(ழி)ளித்திக் கொண்டிருக்கிறோம் ;-)

தடாலடி கௌதம்
1) இப்ப இருக்க மாதிரியே சிகரெட், தண்ணி இரண்டையும் இனிமேலும் தொடாதடா!
2) ஆசைப்பட்டதை எல்லாம் அடைந்து விட்டாயா?

வெட்டிப்பயல்
1) +2ல எண்ட்ரன்ஸ் மார்க் வந்தது என் பிறந்த நாளன்று... மார்க் குறைஞ்சிடுச்சினு ரொம்ப வருத்தப்பட்டேன். அந்த பாலாஜிய பாத்திருந்தேன்னா கவலைப்படாம ஜாலியா இரு... உனக்கு நல்ல கம்பெனில வேலை கிடைச்சு நீ நல்ல நிலைமைல இருப்பனு சொல்லியிருப்பேன் :-)
2) அந்த பாலாஜிய பார்த்தேன்னா கேக்கறது இதுவாத்தான் இருக்கும். ஒழுங்கா ஏதாவது புண்ணியம் செஞ்சியா? இல்லனா சீக்கிரம் செய். நீ நாளைக்கே செத்தாலும் செத்துடுவனு சொல்லுவேன் ;)

தேவ்
1) எப்பிடி கஜோலை தீவிரமா லவ் பண்ணி அஜய் தேவ்கன் கூட போட்டி போட முடியாமல் என் முதல் காதலை மொழி தெரியாமல் தொலைத்தேன்னு சொல்லுவேன்.. காதல் அப்டின்றது ஒரு மாயவலை கல்யாணம் அது அதை விட பெரிய மந்திரக்கலைன்னு எடுத்து சொல்லுவேன்.
2) ஆமா என்ன என்னமோ பெரிய பீட்டர் விட்டுகிட்டு திரிஞ்ச இப்போ எல்லாதையும் சாதிச்சிட்டியா ? என்ன ஆச்சுன்னு கேட்பேன்? White House விலை பேசி அதுக்கு சிவப்பு பெயின்ட் அடிக்க போறேன்னு சொன்னியே செஞ்சியான்னு கேட்பேன்.

சோம்பேறி பையன்
1) நன்றாக படிக்க வேண்டும் என சொல்வேன்.
2) உங்கள் திருமண வாழ்க்கை எப்படியிருந்தது என கேட்பேன்.

நான் இவர்களிடம் கேட்க மறந்த கேள்வி...

உங்களுக்கு கிடைக்கும் பதிலால் உங்கள் வாழ்க்கைப் பாதை மாறியிருக்குமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய பதில்களையும் பின்னூட்டமிடலாமே...

சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவந்த கட்டுரை இது!

48 : சர்தார்ஜி ஜோக்குகள், கற்பனையோடு முடிந்துவிடுவதில்லை!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........
Corrected மச்சி \/

Wednesday, October 04, 2006

47 : கற்பனையோடு முடிந்துவிடுவதில்லை சர்தார்ஜி ஜோக்குகள்!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........

46 : இவரைத் தெரியுமா உங்களுக்கு?

Photobucket - Video and Image Hosting
இவரைத் தெரியுமா உங்களுக்கு?

இந்தக் கவிதையைப் படித்திருக்கிறீர்களா?

My Heart is Heavy

My heart is heavy with many a song
Like ripe fruit bearing down the tree,
But I can never give you one
My songs do not belong to me.

Yet in the evening, in the dusk
when moths go to and fro
in the gray hour if the fruit has fallen
take it, no one will know.

சாரா என்று அழைக்கப்படும் சாரா டீஸ்டேல் (Sarah Teasdale). இந்தப் பெண் கவிஞரின் கவிதைகளை இணைய தளத்தில்தான் சந்தித்தேன். முதல் வாசிப்பிலேயே என்னை ஈர்த்துவிட்ட கவிதைகள் அவை.

ஒரு சிறு பெண்ணாய் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வடிக்கிறார், இயற்கையை தாய் மடியாய் நேசித்து அதன் சிறு சிறு நிகழ்வுகளை கவிதைப் படுத்துகிறார் . அவர் வாழ்ந்த காலம் 1884-1933, ஆனால் அவர் எழுதிய கவிதகள் இன்றும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. அவர் எழுதிய கவிதை பாணி இன்றளவும் நடை முறையில் இருந்து வருகிறது.

1918-ல் தன்னுடைய காதல் கவிதைகளுக்காக மிக உயரிய விருதான புலிட்சர் விருது வாங்கியிருக்கும் இந்தக் கவிஞரை அறிந்தோர் மிகச் சிலரே.அவர் கவிக்கடலில் இருந்து ஒரு நல்முத்தை, எனக்குத் தெரிந்த தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

எடுத்துக் கொள்ளடி, எவருக்கும் சொந்தமற்ற என் பாடலை!

பழுத்த பழங்களால் வளைந்து கிடக்கும் கிளை போலே
பாடல்களால் கனத்துக் கிடக்குது என் மனது - இருந்தும்
பரிசாய் உனக்கென ஒன்றைக்கூட என்னால் தர முடியாது
என் பாடல்கள் எவையும் எனக்கு சொந்தமானதில்லை

பொழுதுசாயுமந்த அந்திப் பொழுதில்
பூச்சிகளும் அலையும் அந்த வேளையில்
(தென்றலின் வருடலில்) சில கனிகள் உதிர்ந்திருந்தால்
எடுத்துக் கொள்ளடி, எவருக்கும் தெரியாது.

பாடல் எனும் இடத்தில் கவிதை என்றோ காதல் என்றோ பொருள் மாற்றி வாசித்து பாருங்களேன் மீண்டுமொருமுறை!

சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவ்ந்திருந்தது இந்தப் படைப்பு

Monday, October 02, 2006

45 : ஆசிரிய வணக்கம்

வணக்கம் ஆசிரியரே, நன்றி!

பாறையாய் நானிருந்தேன்
உளியாய் என் ஆசிரியர்கள்
கல்வெட்டோ கால்தூசோ
அவர்தம் கை வண்ணமே!

என் வாழ்வில் நான் என்னென்ன முன்னேற்றங்கள் அடைந்தேனோ அத்தனையும் என் ஆசிரியர்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு நல்லுணர்வு இருந்து வந்திருக்கிறது. சில சமயம் அவை உறவாகக் கூட மலர்ந்திருக்கின்றன. ஒரு வேளை என் பிறந்த தினமும் ஆசிரியர் தினமும் ஒன்றாயிருப்பதாலோ என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். இங்கு சிறப்பாசிரியர் ஆன இந்த தருணத்தில் எனக்கு மிகவும் பிடித்த 10 ஆசிரியர்களை அவர்களை சந்தித்த கால வரிசையிலேயே நினைவு கூற ஆசைப்படுகிறேன்.

அன்னபாக்கியம் டீச்சர் : எங்கள் ஊர் கழுகுமலையில் குறைந்தது 60% சதவீத மாணவர்களுக்கு அ, ஆ, கற்றுத்தந்தவர். என் அப்பா கூட இவரிடம்தான் கற்றுக் கொண்டாராம். மிக அன்பான பெண்மணி, ஆரம்பப் பள்ளிகளில் அன்பே உருவாய் இருக்கும் ஆசிரியர்கள்தான் தேவை. பெற்றோரை விட்டு முதல் முதலாய் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வீட்டில் கிடைக்கும் அன்பும் கவனிப்பும் தேவைப்படும், அதுவும் கிராமங்களில் கண்டிப்பாக தேவைப்படும் ஒரு விஷயம் இது. இல்லையென்றால் நாம் பள்ளி செல்ல அடம்பிடிக்கையில், 'சரி பய படிச்சு என்னத்த கிழிக்கப் போறான், அப்பாவுக்கு துணையா கடை கண்ணிக்கு போய்ட்டு வந்துட்டு இருடே" ன்னு விட்டுவிடும் ஆபத்து மிக அதிகம். எப்போது ஊருக்கு சென்றாலும் தேடிப் போய் சந்தித்து விடுவேன்.

ஹிந்தி சார் : இவரென்னமோ நல்லாத்தான் சொல்லிக் குடுத்தாரு ஆனா எனக்கு கவனமெல்லாம் வேறெங்கோ இருந்ததால் பிராத்மிக், மத்யமாவோடு நின்று போனது என் ஹிந்திப் பயணம். படிக்கும்போது ஒழுங்காக மதிக்காததால்தான் எனக்கு ஹிந்தி வராமலே போயிற்றோ என்ற குற்ற உணர்ச்சியிலேயே இவரை அடிக்கடி பார்த்து மரியாதை செலுத்தப்போய், பாடங்கள் தாண்டிய செய்தி பரிமாற்றங்களில் எனக்கு மிகவும் பிடித்தவராகிப் போனார். பெயர் ராமசாமி என்று நினைக்கிறேன், ஹிந்தி சார் என்று அழைத்தே பழகி விட்டதால்... பெயரில் என்ன இருக்கிறது.

ஆறுமுகம் வாத்தியார் : ஆறாம் வகுப்பு நான் இவரிடம்தான் பயின்றேன். அறிவியல் பாடங்கள் மட்டும்தான் எடுப்பார், நாம் சாதாரணமாய் பார்க்கும் பழகும் விஷயங்களில் உள்ளொளிந்து இருக்கும் அறிவியலை எடுத்துக் காட்டி பாடத்தில் நாட்டம் உண்டு பண்ணிவிடுவார். அந்த வருடம் மட்டும் என் இருப்பிடமே ஒரு பரிசோதனைச்சாலை போல் இருக்கும். மந்திர மை, வண்ணத்துப் பூச்சி வளர்ச்சி, நியூட்டன் கோட்பாடுகள் என்று நிறைய இப்போதும் ஞாபகம் இருக்கிறது. உற்சாகமும் ஊக்கமும் எப்போதும் நிறைந்து கிடக்கும் இவரிடம். பல ஏழை மாணவர்களுக்கு புத்தகம், பரிட்சைக் கட்டணம், சீருடைகள் என்று பரிசளிக்கும் வெளிவராத நல்ல மறுபக்கமும் கொண்டவர்.

இசக்கி சார் : புளியங்குடியில் இருக்கும் இவர் இல்லத்தில் எனக்கு கிடைத்தது மூன்று மாத குருகுல வாசம். உண்மைதான் அவருக்கு கை கால் அமுக்கிவிட்டு நாங்கள் கற்றுக் கொண்டது கணிதமும் தமிழும். சைனிக் பள்ளி செல்ல பயிற்சி வகுப்புகள் நடத்துவார், நான் கடைசி நேரத்தில் சேர்ந்ததால் எனக்கு கிடைத்தது 3 மாதப் பயிற்சி மட்டுமே. விடியற்காலையே எழுந்து கணக்குகளுக்கு விடை கண்டு பிடிக்கும் வகுப்போடு ஆரம்பிக்கும் பயிற்சி இரவு 9 மணி வரை ஏதாவது வகுப்புகள், புதிர்கள், பரிட்சைகள் என்று ஒவ்வொரு நொடியும் ஏதாவது புது விஷயம் கற்றுக் கொண்டிருந்ததால் எனக்கு மிகப் பிடித்த காலகட்டம் அது. எனக்கு புதிர்களும் அதில் ஒளிந்து இருக்கும் சவாலும் எனக்கு பிடிக்கும், காரணம் கேட்டால் நான் இவரைத்தான் கை காட்டுவேன்.

ஷீலா செரியன் மிஸ் : அன்னபாக்கியம் டீச்சரின் அனைத்துக் குணாதிசயங்களோடு இன்னும் கொஞ்சம் கருணையும் கண்டிப்பும் சேர்த்தால் இவரைப் பார்க்கலாம். அப்போதெல்லாம் சைனிக் பள்ளியில் பெரும்பாலும் கிராமத்திலிருந்து வந்தவர்கள்தான் மாணாக்கர்களாக இருப்பார்கள் எனவே ஆறாம் வகுப்பிலும் நிறைய பேருக்கு ABCD... கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கும். கையெழுத்து நன்றாக வர வேண்டும் என்று ரொம்பவும் பிரயாசைப் படுவார், கையெழுத்தை சீராக்க முயன்று வெகு சிலரிடமே தோற்றிருக்கிறார் அவர்களுள் நானும் ஒருவன் என்பதை தலை குனிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். வகுப்புகளில் ஏனென்றே தெரியாமல் நான் நிறைய தூங்குவேன், இப்போது வரை தொடரும் ஒரு கெட்ட பழக்கம் அது. ஆசிரியர்கள் அனைவரும் அந்த ஒரு காரணத்திற்காக என்னை அடித்து துவைக்கும் போது, இவர் ஒருவர்தான் என் தந்தையை சந்தித்து "பையனுக்கு உடல் நல ரீதியா ஏதாவது பிரச்னை இருக்கப் போகிறது மருத்துவரிடம் சென்று காண்பியுங்கள்" என்று அன்போடு பரிந்துரைத்தவர். "கொழுப்புதான்... ஒடம்புல வேறென்ன நோவு இருக்கப் போகுது"ன்னு என் அப்பா என்னை தனியாய் கவனித்தது வேறு கதை.

A.D.S : ஏ.தேவண்ண சாமி என்ற அவரின் பெயர் நிறையப் பேருக்கு தெரிந்தே இருக்காது, வரலாறு ஆசிரியர். எங்கள் பள்ளி வள்ளுவர், பாரதியார், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என ஆறு இல்லங்களாக பிரிக்கப் பட்டிருக்கும். நான் இருந்த பாண்டியா இல்லத்தின் பொறுப்பாசிரியராக இருந்தவர். இவரை நான் நினைவில் வைத்திருப்பதற்கு காரணங்கள், நான் அதிகம் தூங்கிய வகுப்பு இது, அதிகம் அடி உதை கொடுத்தவர் இவர் அப்புறம் அவருடைய "ஸ்ப்ளெண்டர் பைக்". அவர் வண்டி மட்டும் புதிது போல எப்போதும் பளபளக்கும் வித்தையை எவருக்கும் கற்று தந்ததில்லை என நினைக்கிறேன்.

P.C : என் வாழ்வில் இந்த எழுத்துக்களை மறப்பேனா என்று தெரியவில்லை. நான் கணிணி தொடர்பான வேலையில் இருப்பதால் அல்ல, பி.சந்திரன் அவர் பெயர், எனக்கு வேதியியல் கற்றுத்தந்தவர், மிக மென்மையான பேச்சாளர், ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டு பின் பாடம் எடுப்பதில் வல்லவர். என் தூக்க வியாதியால் பாடங்கள் நிறைய கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் அவரை நான் நினைவில் வைத்திருப்பது அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்காக. உயிரோடிருந்ததால் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது, என் மீது எனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட தருணத்தில் என்னை நானிருந்த இல்லத்தின் கேப்டனாக அறிவித்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை விதைத்தவர். அவர் ஆசைப்பட்டதில் நூறில் ஒரு பங்காவது சாதித்திருப்பேனா தெரியாது ஆனால் என்னை நான், முதன் முறையாக நம்பிக்கையோடு பார்க்க வைத்தவர்.

மேரி லாலி : கல்லூரி ஆசிரியை, B.Sc பாடத்திட்டத்தில் பல்வேறு வகுப்புகள் எடுப்பார். இவர் வகுப்பை மட்டும் நாங்கள் தவற விட மாட்டோம். ஏனென்றால் பாடமே எப்போதாவது தான் நடக்கும். ஏதாவது குறும்பு செய்து பாடத்தை திசை திருப்பும் வேலைக்கென்றே வகுப்பில் நான், சந்து, காளி, தேவா, டேவிட் என்று சிலர் இருப்போம். ஆனால் எங்களையெல்லாம் சொந்த தம்பி போல் பாவித்து அன்பு செலுத்துவார். மிகுந்த இறை பக்தி மிகுந்தவர், அதை வைத்து சீண்டியே பல வகுப்புகளை வீணடித்திருப்போம். அவர் திருமணத்தில் கலந்து கொண்டது மறக்க முடியா நினைவுகளை உள்ளடக்கியது.

ஆராவமுதன் : இந்த நிமிடம் கூட நான் இவருடைய மாணவன் தான். கணிணியியலில் இவருக்கு தெரியாததும் இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கும் அளவுக்கு அனேக விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். கல்லூரி பாடத்திட்டங்களுக்கு வெளியேயும் ஜாவா, லினக்ஸ் என்று எங்களுக்கு கற்பித்தவர். இவரிடம் சூரியனுக்கு கீழேயும் மேலேயும் எந்த விஷயங்களைப் பற்றி வேண்டுமானாலும் விவாதிக்க முடியும், விவாதித்திருக்கிறேன். கல்லூரியுடன் முடிந்து விடாத நட்பு மற்றும் உறவு இது. தன்னுடைய மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை கொண்டு அறிவுரை சொல்வதோடு மட்டுமல்லாது ஆக்கப்பூர்வமாய் உதவுவதையும் தொழிலாகக் கொண்டவர்.

ஸ்வர்ண அகிலா : இவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று இரண்டொருமுறை யோசித்த பின்னேதான் சேர்த்தேன். இன்று இந்தப் பெயரை சொல்லி இவர்களைத் தெரியுமா என்று கேட்டீர்களானால், நான் தெரியாது என்று கூட சொல்லிவிடுவேன், சமயங்களில்! அருணாக்கா என்றுதான் தெரியும் இப்போது. பகுதி நேர பாடத்திட்டத்தில் பயிலும் போது சில வகுப்புகள் எடுப்பார். கண்டிப்புக்கு பெயர் போனவர், வகுப்புகளில் கவனம் இல்லையென்றால் சுத்தமாகப் பிடிக்காது. "ப்ராக்ஸி" போடுவதற்கென்று பழகி, சண்டையிட்டு, பின் சகோதரனாய் என்னை தத்தெடுத்துக் கொண்டவர். இப்போது என்னைப் போன்றே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், என் வாழ்வில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். எப்போது அறிவுரை சொன்னாலும் ஒரு 'ஆசிரியத்தொணி' தென்படும், அதற்காகவே இவர்கள் இந்தப் பட்டியலில்

இந்தக் கட்டுரை சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவந்தது.

Saturday, September 30, 2006

44 : சொர்க்கமே என்றாலும்...

கழுகாசலமூர்த்தி திருக்கோவிலின் தெற்கு நுழைவாயில்

எங்க ஊருக்கு போய்ட்டு வந்திருக்கிறார் ஜான் அண்ணா, எதுக்குப் போனாரா? அட அவர் ஊரும் அதுதானுங்க... அதாவது நம்ம ஊர்ஸ் அவரு.

போனவரு சும்மா வராம எங்க ஊரின் கலைப் பொக்கிஷங்களை கொள்ளையடித்து வந்திருக்காரு, கேமரா பொட்டியிலதான். பார்த்ததுமே நமக்கும் பத்திக்கிச்சு ஊருக்குப் போகின்ற ஆசை.

எங்க ஊரப் பாக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா, ஒரு நடை
ஜான் வலைப்பூக்கள்-க்கு சென்று வந்து விடுங்கள்.

பார்த்ததும் தெரிகின்ற சில விஷயங்கள்
* தெப்பத்தில் தண்ணீர் குறைஞ்சுருக்கு (போன வருஷம் நல்ல வர்ஷம்! என்று சொன்னார்கள்)
* கோவிலின் முன் பாகத்தில் அமைந்துள்ள, அரண்மனைத் தெருவை நன்கு அகலப் படுத்தி உள்ளார்கள்
* கைவைக்க முடியாத அந்த தேன்கூடு இன்னும் அப்படியே உள்ளது
* ஆம்பூரணி நிலை அழுகை வர வைப்பதாக உள்ளது


எல்லாம்வல்ல கழுகாசலமூர்த்தியிடம் ஊரில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை மட்டுமாவது தீர்க்கறதுக்கு ஒரு கோரிக்கை வைக்கனும், அதுக்காகவாவது ஊருக்கு போகணும் சீக்கிரமா!

ஊரைப் பற்றிய எனது பிறபதிவுகள்
கழுகுமலைக் கள்ளன்
வெட்டுவான் கோவில் கதை
வெட்டுவான் கோவில் கதை - தொடர்ச்சி

Friday, September 29, 2006

43 : எனக்கும் வேண்டாம் தேன்கூடு தரும் பரிசு! (?)

Photobucket - Video and Image Hosting

இந்த முறை மைக் செட்டெல்லாம் வைக்கவில்லை, மூன்று-நான்கு பதிவுகள் ஒரே படைப்பைப் பற்றி பேசி கழுத்தறுக்கவில்லை ஆனாலும் மிகமிக அதிகப் படியாக 62 ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன. கிள்ளிப் பார்த்து வலித்த போதும் கூட நம்ப முடியாமல்தான் இருக்கிறது.

இது உண்மையில் வெற்றியா? என யோசிப்பவர்களுடனும் மற்றவர்களுடனும் நான் திட்டமிட்டு செய்த தகிடுதத்தங்களையும், திட்டமிடாமலே அடித்த அதிர்ஷ்டத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

* ஒரே கதை, அதை நீளம் என்று சாக்குச் சொல்லி 5-ஆக பிரித்தளித்திருந்தேன். அவற்றை தனித்தனியாகவே தேன்கூட்டில் சமர்ப்பித்திருந்தேன். அதிகம் பேரை ஈர்க்க என்று செய்த சின்ன சித்து விளையாட்டு அது.

*** அது ஐந்து வெவ்வேறு கதைகளாக புரிந்து கொள்ளப்பட்டது தனி துன்பியல் நிகழ்வு :-(

*** மேலும் வாக்களிக்கும் சமயத்தில்தான் ஓட்டுகள் பிரியும் அபாயத்தை உணர்ந்தேன், தேன்கூடு நிர்வாகிகள் தந்த ஆலோசனையால் அது
ஒரே பதிவாக வாக்குக்காக வைக்கப்பட்டது, என் அதிர்ஷ்டமே. நிறைய ஓட்டுக்களுக்கு மிக முக்கிய காரணியாக இதை கருதுகிறேன்.

* உலகத்திலேயே அதி சுவாரசியமானது காதல் அதுவும் அடுத்தவனது காதல் என்ற உண்மையை மனதில் வைத்து காதல் ரசத்துடன் இரண்டு அத்தியாயங்களை இடையில் சொருகியிருந்தேன் - கதைக்கு தேவைப்படா விட்டாலும்

*** தனிப்பட்ட முறையில் என் நண்பியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்

* வளைகாப்பு விருந்து பற்றிய பதிவில் திட்டமிட்டே போட்டிக்கான என் படைப்பை சுட்டியிருந்தேன். மேலும், பதிவின் தலைப்பு, இட்லி வடையும் போளியும். இட்லிவடை மற்றும் போலி மிக அதிகம் பேரை ஈர்க்கும் வார்த்தைகள் என்பதால் அந்த சதி.

*** நான் எதிர்பார்த்திருந்த வருகை எண்ணிக்கையோ, பின்னூட்டங்களோ இல்லாது போய் என் மூக்கறுத்தது வேறு விஷயம்!

*** சில தினங்கள்(5) முன்கூட்டியே செய்த பதிவென்பதால் ஓட்டுக்களை அது பெற்றுத்தந்திருக்காது என்பதுவும் என் எண்ணம்.

* என் கல்லூரியில் நடந்த பல நிகழ்ச்சிகளின் தொகுப்பே கதையென்பதால் என் கல்லூரி நண்பர்கள்(10-15 பேர்) அனைவருக்கும் இப்படைப்பை பார்க்க சிபாரிசித்திருந்தேன். கதையின் பின்புலத்தை அவர்கள் அறிந்திருந்ததால் அனைவருமே ரசித்தனர்,. தேன்கூட்டில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே பதிவிட்டிருந்ததையும் அவர்களுக்கு தெரியப் படுத்தியிருந்தேன்.

*** ஆனால் எத்தனை பேர் நேரத்தில் படித்திருப்பார்கள், அவற்றில் எத்தனை ஓட்டாக மாறியிருக்கும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

*** ஏனெனில் தங்கள் மடல் முகவரிகளை பதிந்து கொண்டு, அவற்றிற்கு உயிரூட்டி பின் வாக்களிப்பது என்பது நிச்சயம் சில மணித்துளிகளை எதிர்பார்க்கும் விடயங்களே. இந்தக் கதை அவர்களுக்கு பிடித்திருக்காத பட்சத்தில் அதை செய்ய வேண்டிய அவசியமும் அவர்களுக்கில்லை.

*** மற்ற கதைகளை படித்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு குறை அந்த ஓட்டுக்களை, கள்ள ஓட்டுக்களாக மாற்றுமா என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு வைக்கிறேன்.

* பின்னூட்டங்களில்லாவிடினும்...இன்னும் இருக்கிறது ஆகாயம், என்ற பதிவும் அதில் செந்தழல்ரவி உபயத்தில் எதிர்பாராமல் நடந்த கும்மியும் என் வலைப்பூவுக்கு நிறைய பேரை வர வைத்திருக்கலாம், அது ஒரு காரணியாகவும் இருந்திருக்கலாம், ஏனென்றால் சம்பவம் ஆரம்பித்த தினம் செப். 20, 2006.

என் படைப்பை நிஜமாகவே படித்து ஓட்டுப்போட்ட அனைவருக்கும் என் நன்றிகள்! உள்ளபடியே மிகப் பெருமையுடன், தேன்கூடு தந்த பதக்கத்தை என் சட்டையில் குத்திக்கொள்கிறேன்.

போட்டி நடத்திய தேன்கூடு-தமிழோவியம், மற்றும் இந்த வித்தியாசமான தலைப்பைக் கொடுத்து போட்டியை சுவாரசியப் படுத்திய கொங்கு ராசு, நடுவர்கள் நிலா, ராசு மற்றும் KVR அனைவருக்கும் என் நன்றிகள்.


சொல்லி அடித்த ஆசாத், யோசிக்க வைக்கும் யோசிப்பவருக்கும், நல்ல படைப்புகளால் மிரட்டும் முரட்டுக்காளைக்கும் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

அப்புறம் எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள், இதுபோன்ற சிறு மனக்கிலேசங்களால் எழுதுவதையோ, போட்டிக்கு அனுப்புவதையோ தயவுசெய்து நிறுத்திவிடாதீர்கள்.

என் மன உணர்வுகளையும், வாழ்வின் நிகழ்வுகளையும் எழுத்தில் வடிக்க இயலும் என்ற நம்பிக்கையை எனக்கு தந்ததற்காகவும் அனைவருக்கும் மேலும் ஒரு சிறப்பு நன்றி!

ம்... எல்லாம் சரி அப்புறம் ஏன் தலைப்பு இப்படி...

பின்ன என்னங்க பின்ன, இங்கயே எழுத சரக்கு ஒண்ணுமில்லாமதானே இத்தன கூத்து பண்ணிக்கிட்டு இருக்கோம்; இதுல பரிசு என்னடான்னா? தமிழோவியத்திலும் எழுதணுமாம்!

மேலும் ஜீன்ஸ் அணிவதல்ல இன்றைய ஃபாஷன்!


Tuesday, September 26, 2006

42 : எங்ககிட்ட மட்டும் ஏண்டா? - சிங்கை பாண்டி!

Photobucket - Video and Image Hosting
(ஆனந்த விகடனில் 'பராக் பாண்டி' படிப்பீர்களா? எனக்கு ரொம்ப பிடித்த பகுதி அது. சும்மாகாச்சுக்கு அதை பின்பற்றி...
சிங்கப்பூர பத்தி நல்ல விஷயமா நானூறு கூட சொல்லலாம் இப்போதைக்கு நக்கலா ஒரு நாலு!)


ஜிம்-ல போய் வெயிட்டடிச்சுகிட்டு இருக்கும்போது, அதிசயமா நம்மள பாத்து ஒரு ஃபிகர் சிரிச்சு வைக்கும், ஒரு 10 கிலோ வெயிட் அதிகமா போட்டு இன்னோருக்கா எக்ஸர்சைஸ் பண்ணிட்டு கெத்தா ஒரு பார்வை பாக்ற நேரத்துல, எக்ஸ்கியூஸ் மி-ன்னுட்டு அசால்ட்டா ஒரு 50-கிலோ போட்டு ஏண்டா எங்க பர்ஸனாலிட்டில புல்டோசர் ஏத்தறீங்க தண்டால் கையனுங்களா?

ரயில்லயோ பஸ்லயோ, பக்கத்துல உக்காந்துருக்காங்களேன்னு சினேகமா ஒரு சிரிப்பு சிரிச்சு வைச்சா, ஏதோ தீவிரவாதி கஞ்சாவுக்கு கங்கு கேட்டா மாதிரி ஏண்டாப்பா அப்படி ஒரு
ஜெர்க் ஆகறீங்க தனிக்காட்டு தண்டப் பசங்களா?

வேகாத வெயில்ல, இன்னும் கொஞ்சம் கறுத்துருவமோன்னு நொந்துகிட்டே சிக்னல்ல நிக்ற பத்து செகண்ட் கேப்-ல பச்சாக்-னு முத்தம் குடுத்துக்கிட்டிருக்கிங்களே... அப்படியென்னடா அவசரம் பபிள்-கம் வாயனுங்களா?

காலியா வர்ற லிப்ட்-ல நாங்க ஏறிட்டா, அவசரமாவே இருந்தாலும் அடுத்த லிப்ட்-க்காக காத்துகிட்டு இருக்கிங்களே? சிங்கை வாழ் குட்டி,ஆண்ட்டி,பாட்டிங்களே... பத்திரிக்கை-ல மட்டும் வந்தா போதுமா சீன-இந்திய நல்லுறவு!


(நமக்கு தெரிஞ்சவங்க நெறய பேரு நம்ம பக்கத்துக்கு வர்றதுனால இப்போதைக்கு ஜூட்... மிச்சத்த அனானியா பின்னூட்டம் போட்டுக்கலாம் ?! வாட் சே யூ!)

Wednesday, September 20, 2006

41 : பின்னூட்டங்களில்லாவிடினும்,இன்னும் இருக்கிறது...

Photobucket - Video and Image Hosting

(இந்தக் கவிதை போதிய பின்னூட்டமின்றி தவிக்கும் என் சக வலைப்பதிவர் அனைவருக்கும் சமர்ப்பணம்!)

மறுமொழிகளை மட்டுறுத்தலாம் என்றெண்ணி
பின்னூட்டப் பெட்டி திறந்தேன், ஒரு பின்னிரவில்!
வெறுமை வந்தென் முகத்தில் அறைந்தது
துணையற்ற நெடும்பயணம் போன்று

கடை விரித்தேன் கொள்வாரில்லை...
வள்ளலாரின் வலி புரிந்ததெனக்கு!

இலையுதிர் காலத்து சருகு போலே
பெயரற்று போய் விடும் உயர் நோக்கோடு
வந்து சென்றிருப்பர் பலர்
நான் சென்று வருவதைப் போன்றே

எண்ணங்களை பதிவு செய்யாது
எண்ணிக்கைகளை மட்டுமே
கணக்கில்வைத்துக் கொள்ளும்
என் *'வருகை எண்ணி' , சொல்லிற்று...

கவிதையொன்று வடித்து நிமிருகையில்
கடவுளானேனென கர்வம் வந்து செல்லும்
கண நேரமேயானாலும், அதுவும் சொல்லிற்று
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கண்சிமிட்டும் நட்சத்திரங்களும்
தேய்ந்து வளரும் நிலவுமில்லாவிடினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்,
இளஞ்செங்கீற்றாய் விடியலுடன்!

*'வருகை எண்ணி' : Hit Counter-க்கான தமிழாக்கமென்றரிக!

படம் : நன்றி முரட்டுக்காளை
ஊக்கம் : நன்றி தமிழ்ச்சங்கம்

Tuesday, September 19, 2006

40 : இன்னும் இருக்கிறது ஆகாயம்!

Photobucket - Video and Image Hosting

விண்ணிருந்து நட்சத்திரமொன்று உதிர்ந்த கணத்தில்
கண் மூடி நானுன்னை யாசித்தேன்

மேகமிடித்து மழை பொழிந்த தினத்தில்
மின்னல் வெட்ட, உன்னை நான் சந்தித்தேன்

மெரீனா... ஒண்ணு வாங்குங்க"
என் வாழ்வின் பௌர்ணமி அன்றுதான்

கடலலை கால் தொட கதையளக்கையில்
என் வானெங்கும் நீந்திக் கொண்டிருந்தன
அன்னப் பட்சிகள்

"என்னைப் பிடிச்சிருக்கா" நீ கேட்ட விநாடி
வானவில்லொன்று வெடித்துச் சிதறி
விண்ணெங்கும் ரங்கோலி!

தயங்கியவாறே நானுன்னை தீண்ட
முத்தமிட்டுக் கொண்டிருந்தன
வானும் கடலும், தூரத்தில்

"அருந்ததி தெரியறதா பாருங்கோ"
உன் விரலழுத்தி சிரித்தேன், சிரித்தோம்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
நமக்கான தேனிலவை சுமந்துகொண்டு!

- நன்றி தமிழ்ச்சங்கம்

Friday, September 15, 2006

39 : இட்லி வடையும் போளியும்!

Photobucket - Video and Image Hosting

ஏவ்...

என்னண்ணே இன்னிக்கு சாப்பாடு ரொம்ப பலமோ

அடடே கோகோ என்னப்பா ரொம்ப நாளா ஆள காங்கலயே... எங்கடே போய்ட்ட

போட்டிக்கு நீங்க எழுதுன தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கதைய படிச்சனா, எங்க நம்மள கூப்ட்டு பிரச்சார பீரங்கின்னு சொல்லி மைக்-க கைல குடுத்துருவீகளோன்னுதான் இந்த பக்கமே வாரதில்ல

உனக்கு அந்த நொம்பளமே வேணாம்ல இந்த தடவ நம்ம படைப்பு சும்மா சம்பிரதாயத்துக்குதான், நம்ம நண்பர்கள் எல்லாம் சூப்பரா எழுதுதாவ அதுனால அவுகளுக்கு ஓட்டப் போட்டுட்டு ஒதுங்கிரணும்னு இருக்கேன்

அடேங்கப்பா... தாராள பிரபு... அது சரி சட்டையெல்லாம் நெய் மணக்குதே என்னவே சாப்ட்டீரு

அட வாசனை புடிச்சிகிட்டேதான் இந்த பக்கம் வந்தியாக்கும்... இன்னிக்கு நம்ம வீட்ல விஷேசம்

வீட்ல விசேஷமா... உங்களுக்கு எப்பண்ணே கல்யாணம் ஆச்சு

அட முந்திரிக் கொட்டைக்கு முந்திப் பொறந்தவனே... ஒரு விஷயத்த முழுசா கேக்குதியா பாரு

சரி சரி கோவிக்காம சொல்லுங்கண்ணே

நம்ம நண்பர்கள் ரெண்டு பேர் சீக்கிரமே அப்பா ஆகப் போறாய்ங்கடே அதுனால அவுகளயும் அவுக வீட்லயும் கூப்ட்டு ஆனந்த் அம்மா இன்னிக்கு விருந்து வச்சாங்க

ஓ நெல்லுக்கு பாயற நீர் அப்படியே புல்லுக்கும் பாயற மாதிரி...

ஆமாண்டே அதிகப் பிரசங்கி... ஏதோ ஏழு வகையான சாதம் செஞ்சு வளைகாப்பு செய்வாகலாம்ல,

Photobucket - Video and Image Hostingஅந்த மாதிரி இவுக பதினோரு வகையான சாதம் செஞ்சு குடுக்கணும்னு ஆசப்பட்டு அசத்திப்புட்டாங்க

பதினோரு வகையா?... இவ்ளோ பெரிய ஏப்பம் வரும்போதே நினைச்சேன்

ஆமாம்டே சொல்தேன் கேளு
சர்க்கரைப் பொங்கல்
கல்கண்டு சாதம்
புளியோதரை
எலுமிச்சை சாதம்
தக்காளி சாதம்
புதினா சாதம்
எள்ளு சாதம்
வெண் பொங்கல்
மாங்காய் சாதம் - அவுக ஸ்பெஷல்
தேங்காய் சாதம்
தயிர் சாதம்

அடேங்கப்பா இவ்வளவுமா...

வாய மூடுடே... உள் நாக்கே தெரியுது... அதுமட்டுமில்லடே தேங்காய் போளி, அப்புறம் உளுந்த வடை இதெல்லாமும் செஞ்சு ஜமாய்ச்சுட்டாங்க

அடா அடா... நீங்க சொல்லும்போதே நாக்கு ஊறுதே...

இதுல எல்லா சாதமுமே தூள், அதுலயும் இந்த மாங்காய் சாதம்லாம் நான் மொதமுறையா சாப்பிடறேன், அப்புறம்டே இந்த போளில சில இடங்கள்ல மாவு அதிகமா இருக்கும், சில இடங்கள்ல பூரணம் அதிகமாகி பிஞ்சு போகும் ஆனா இவங்க பண்ணினதுல அளந்து வச்ச மாதிரி ஒரே சீரா...

போதும்ணே போதும்... வாங்க உங்க வீட்டுக்கு ஒரு நடை போய்ட்டு வந்துருவோம்

ம்... ஆசதோச அப்பள வடை... ஆங் வடைன்னதும் ஞாபகத்துக்கு வருது... இந்த இட்லி கூடெல்லாம் வைப்பாங்கல்லடே, அந்த உளுந்த வடைக்கு மிளகல்லாம் அரச்சு போட்டு அவ்வளவு முருகலா... அடடா அது ஒரு தனி சுவையா இருந்துச்சு... உளுந்த வடைல ஏண்டா நடுவுல ஓட்ட போடுறாங்கன்னு வருத்தப் பட வச்சுருச்சுன்னா பாத்துக்கயேன்

வேணாம்ணே என்ன ஏங்க வைக்கிறதுக்கே உங்களுக்கு வயித்த வலிக்க போகுது

போடா போடா இவரு பெரிய கடோத்கஜன் சொல்ற சாபம் பலிக்க போகுது... சரி உனக்காக ஒரு வாய்ப்பு, நம்ம பயலா போயிட்டியேன்றதுக்காக குடுக்கறேன். ரெண்டு கேள்வி, சரியா

கேளுங்க, கேட்டுப்பாருங்க... சொல்லி எப்படி கில்லி மாதிரி ஜெயிக்கிறேன்னு

ஒண்ணு, வளைகாப்பு எதுக்கு வைக்கிறாங்க
Photobucket - Video and Image Hosting
ப்பூ... இவ்ளோதானா, சொல்றேன்... அதுக்கு முன்னாடி ரெண்டாவது கேள்வியவும் கேட்ருங்க

சர்க்கரைப் பொங்கல்ல தட்டுப்படற முந்திரி பருப்புக்கும் தேங்காய் சாதத்துல தட்டுப்படற முந்திரி பருப்புக்கும் இடைல இருக்ற ஆறு வித்தியாசங்கள சரியாச் சொல்லு உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்

ஆறு வித்தியாசம் நெசமா இருக்கு?... சொல்லிபுட்டா கூட்டிட்டு போகணும்னே
எல்லாம் கூட்டிட்டு போறண்டா... போ போய் கொஞ்சம் தள்ளி நின்னு
யோசனை பண்ணு... உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாய்ங்க, அண்ணன் அப்படியே ஒரு பலத்த தூக்கத்த போட்டுட்டு வந்தர்றேன்

அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ட்ட்ட்டா!

Wednesday, September 13, 2006

38 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

Photobucket - Video and Image Hosting

மச்சான் இந்த பிரின்சி ஓவர் ஆட்டம்டா

ஏன்டா சந்துரு என்னாச்சு

காட்டுக்குள்ளாற கொண்டு போய் காலேஜ கட்டிருவானுங்க, பஸ் பாஸ்லயும் கொள்ளை அடிப்பானுங்க, 5 நிமிஷம் வெயிட் பண்ணவும் மாட்டாரு இந்த டிரைவரு

ஏய் விஷயத்த சொல்லுடான்னா...இன்னாடா பஜன பண்ற

அதில்லட நம்ம இந்த பாலத்துல இருந்து காலேஜ் போறதுக்கு லிஃப்ட் எடுத்துதானே போவோம்... இனிமே அப்டிலாம் போகக்கூடாதாம்.

யார் சொன்னா...

பிரின்சிதான்... போயி பயோ-டெக் க்ளாஸ்-ல சொல்லிருக்கான்... நம்ம க்ளாஸ்ல சொல்லி இருந்தா அடி கிழிஞ்சுருக்கும்ல

ஏன் என்னவாம்...

இந்த ஷார்ப் மோட்டார்ஸ் மானேஜர் இருக்காரில்ல அவர் போட்டுக் குடுத்துதான் இப்டின்னு நம்ம கதிர் சொன்னாண்டா

டேய் அவரா, வழக்கமா நிறுத்தி லிஃப்ட் குடுப்பாரு நமக்கெல்லாம். நேத்தும்கூடி நிறுத்தி நம்ம பசங்கெல்லாம் ஏத்திட்டு போனாரே, ராசு நீ கூட நேத்து போனியேடா, அவர் ஏன் இப்படியெல்லாம் பண்ணப் போறாரு - இது கதிர்.

நான் போனதுனாலதான் பிரச்னையே,

ராசு, என்ன சொல்ற

பின்ன என்ன, போன வாரம் ஒரு நாள் பஸ் கிளம்பிடுச்சு, நான் இங்கன காத்துகிட்டு இருக்கேன், அந்தாளு நிக்காம போய்ட்டான், மத்தியானம் அய்யன் கடைல ஒரு தம் போட்டுகிட்டு இருக்கும்போது வந்தாரு. ஏய்யா நிறுத்தாம போய்ட்ட அப்டின்னு கேட்டா அதுக்கு சொல்றான் நீ காலேஜ் பையன் மாதிரி டீசண்டா டக்-இன் பண்ணாம இருந்த... உன்ன எப்படி ஏத்திக்கறதுன்றான் வெறு....தி!

சரி அதுக்கு நேத்து நீ என்ன பண்ண

முந்தாநேத்து மழை பேஞ்சு இருந்துச்சுல்ல, ரோட்ல ஓரமா கொஞ்சம் சேறு இருந்துச்சு, நல்லா ஷூ நெறய அப்பிட்டு போய் கார்-ல ஏறி நாஸ்தி பண்ணிட்டேன்.

அடப்பாவி, உனக்கு ஏண்டா புத்தி இப்டிலாம் போகுது

அடிங், பிரின்ஸியே என்ன ஒரு கேள்வி கேக்க மாட்டான், இவன் யார்றா. ஏய் கதிரு இவந்தான் போட்டுக்குடுத்தானாடா நேத்து, உண்மைய சொல்லு, எம்பேரக்கீது சொன்னானா?

உம்பேரெல்லாம் சொல்லலிடா பொதுவா பசங்களுக்கு கொஞ்சம் ஒழுக்கம் சொல்லிக் குடுங்கன்னுட்டுருந்தான், விஷயத்த கேட்டதும் பிரின்ஸி இன்னும் கொஞ்ச நாளைக்கு யாருக்கும் லிஃப்ட் குடுக்காதீங்க, அப்பதான் பசங்களுக்கு புத்தி வரும்னு சொல்லிட்டு, லெக்சரர் எல்லார்க்கும் ஒரு அறிக்கையும் அனுப்பி வச்சுட்டாரு காலேஜ் பஸ்தான் வருதில்ல, அதனால் யாரும் பசங்களுக்கு லிப்ட் குடுக்காதீங்கன்னு

அப்படியா விஷயம், சரி டேய் நம்ம யாருன்னு அந்த பிரின்சிக்கு காமிப்போம்டா, BBA பசங்க எல்லாம் நம்ம பக்கம்தானே நிப்பானுங்க.

B.Com, Bio-Tech விட்டுடலாம், பூச்சிப் பசங்க.

மறுநாள் பிரின்சி அவரோட லொட லொடா வெஸ்பாவில் வர, பாலத்திலிருந்து 20 அடிக்கு ஒருவர் என கல்லூரிக்கு சற்று முன் வரை வரிசையாக நின்றிருந்த 50 பேரும் ஒவ்வொருவராக கேட்டோம், சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா!

*****

ஏய்...ஏய் வித்யா... நிறுத்து நிறுத்து...

ஹேய் வண்டிக்குள்ளாற விழுந்துடாதடா என்ன விஷயம்

வீட்டுக்குதான போற... நானும் வர்றேன் என்ன ஹோப்ஸ்-ல இறக்கி விட்டுரு

சரி உக்காரு

இல்ல வண்டிய என்கிட்ட கொடு... நீ பின்னாடி உக்காரு

ஏய் இது என் வண்டிடா

பெரிய வண்டி...ஒன்ரயணாவுக்கு ஒரு கைனடிக் ஹோண்டா... ஹட்... பின்னாடி போய் உக்காரு

ஒரு பொண்ணுக்கு பின்னாடி உக்காந்துகிட்டு வரக்கூடாதோ... எல்லாம் ஈகோ... ஆம்பளைங்க எல்லாம் MCPsதானே இந்தா புடி

உன் ஓட்ட வண்டில பின்னாடி உக்காந்துகிட்டு எங்க பிடிச்சுக்கறது... உன்ன புடிச்சிக்கலாம்னா கோவப்படுவ

கஷ்டகாலம்...ஏண்டா நீ இப்டி இருக்க.. அப்புறம் எங்க வண்டி தேர் மாதிரி தெரிஞ்சுக்கோ

தேரா அடேங்கப்பா, அது சரி அதென்ன MCP... எங்களுக்கெல்லாம் McD தான் தெரியும்...

நீ திருந்தவே மாட்டடா.. சரி எங்க போற

ராகம்-ல காமசூத்ரா பாக்க போறோம் நீயும் வர்றியா

வேணாண்டா ராசு ஏங்கிட்ட இப்டிலாம் பேசிப் பழகாத... (அவள் குரல் லேசாக உடைந்து ஒலித்தது)

*****

ஹேய் ராசு என்னடா பைக் புதுசா இருக்கு

புதுசல்லாம் இல்லீடா அய்யன் இன்னிக்கு வேலைக்கு போவல அதான் நான் தூக்கிட்டு வந்துட்டேன்

அப்ப சரி இன்னிக்கு எதுனா படத்துக்கு போயிடலாமா... மத்தியானம் எல்லாம் ப்ராக்டிகல்ஸ்தான் 2 மணிக்கு அப்படியே நழுவிடுவோம் என்ன சொல்ற... ஹேய் வித்யா நம்ம ராசு பைக்-க பார்த்தியா

என்ன சார் புதுசா... கலக்கறீங்க நமக்கு கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா

அதெல்லாம் ஒண்ணும் கிடைக்காது உங்க தேர்லயே வாங்க... போய் ஒரு படத்த பார்த்துட்டு வருவோம்

(பொண்ணுங்கல்லாம் பின்னாடி வர்றாங்கன்ற மிதப்புல, பேருந்து ஒன்றை முந்தலாமென்று முயற்சிக்கையில் எதிர்த்து வந்த வண்டியில் மோதி... வித்யா உட்பட எல்லாரும் ரத்தம் குடுத்து காப்பாத்தி... ஹ்ம்... அது பெரிய கதை)

*****

ராசு இந்தாடா... இந்த புக்-ல இருக்கற எல்லா கணக்கையும் போட்டு பார்த்துரு... இதுல இருந்துதான் எல்லாக் கேள்வியும் வருதாம். மொத சுத்து மட்டும் தாண்டி வந்துருடா அப்புறம் நம்ம நண்பர் ஒருத்தர்தான் இந்த நேர்முகத் தேர்வெல்லாம் நடத்தறாரு... சொல்லி எதுனா பண்ணலாம்

ம்...சரிடா கதிர்... அப்புறம் ஒரு நூறு ருபாய் கேட்டுருந்தனே நாளைக்கு தாம்பரத்துல வேறொரு நேர்முகத் தேர்வு இருக்கு

என் கிட்ட அம்பதுதான் இருக்கு... இந்தா வச்சுக்க சரி நாளைக்கு நல்லதா டிரெஸ் பண்ணிட்டு போ... போன தடவ மாதிரி கருப்பா கட்டம் போட்ட சட்டைலாம் போட்டுட்டு போவாதா

இல்லடா அங்க தேச்சு வச்சுருக்கேன் பாரு வெள்ளை-ல கோடு போட்டு... அப்புறம் சந்துரு கிட்ட 'டை' கேட்ருக்கேன்

ம்... ஓ.கே ஆனா 'ஆப்டிட்யூட் டெஸ்ட்'க்கே 'டை'யோட போய் உக்காராத... மடிச்சு சட்டை பைக்குள்ள வச்சுக்க... நான் தூங்கப் போறேன் அப்புறம் நாளைக்கு 'ஆல் தி பெஸ்ட்'
:
:
:
ஹேய் ராசு வாடா நான் உன்ன தாம்பரத்துல வுட்டர்றேன்

நான் போய்க்குவேண்டா சந்துரு... நீ ஆபீஸ் போ... தாம்பரம் போய்ட்டு போகணும்னா உனக்கு பயங்கர சுத்து

அதெல்லாம் பரவாயில்ல வா வா வந்து உக்காரு சீக்கிரம்... எல்லாம் எடுத்துகிட்டில்ல

ம்...

ஓ.கே டா... டெஸ்ட் முடிச்சிட்டு என்ன ஃபோன்ல கூப்பிடு... ஆல் த பெஸ்ட்...ஹே ஏண்டா ஒரு மாதிரி இருக்க

இல்லடா அபீஸ பாத்தாலே பயமா இருக்கு... சரி சரி நீ கெளம்பு நான் பாத்துக்கறேன்
:
:
:
ராசு...இங்க...ம்... டெஸ்ட் எப்படி பண்ணின

சந்துரு இன்னும் என்ன இங்க இருக்க... ஆபீஸ் போகலயா

இல்லடா ஃபோன் பண்ணி லீவ் சொல்லிட்டேன்... நீ வேற ஒரு மாதிரியா போனியா உள்ளாற... சரி டெஸ்ட் எப்படி பண்ணின

(நன்றாக செய்திருக்கிறேன் என்று தலையாட்டத்தான் முடிந்தது... உணர்ச்சிவயப்படும்பொழுது வார்த்தைகள் கரைந்து போய் விடுகின்றன... அன்று முழுவதும் என்னுடன் இருந்தான் சந்துரு. தொழில்நுட்பத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று கடைசி கட்டம் வரை உடனிருந்து உற்சாகமூட்டினான். பொது அறிவு வினாக்கள், பல்வேறு தேர்வுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சம்பளமாக எவ்வளவு கேட்பதென்பது வரை பல விஷய நுணுக்கங்கள் சொல்லித்தந்தான்.

நான் தேர்வானதிற்கு அவர்களிருவரும் எனக்கு விருந்தளித்து கொண்டாடினார்கள்... கைதூக்கி விட நண்பர்களிருக்கையில் எனக்கென்ன மனக்கவலை)


*****

ஹலோ வித்யா-வா...
ஆமா நேத்துதான் சென்னையில இருந்து வந்தேன்...
ம் தேங்க்ஸ்...
நாலு மாசம் ஆச்சு...
எல்லாம் சந்துருக்கும் கதிருக்கும்தான் நன்றி சொல்லணும்...
ட்ரீட் தானே... இன்னிக்கு சாயங்காலம் தந்தா போச்சு...
இல்லல்ல சனி ஞாயிறு ரெண்டு நாள்தான் லீவு..
5 மணிக்கு 'க்ளேசியர்ஸ்' போலாம் அங்க இருந்து கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு நான் அப்படியே சென்னை கிளம்பிக்கறேன்
:
:
:
ஹேய் ராஜ்... எப்படி இருக்க... என்னடா சென்னை போனதும் பயங்கர ஸ்மார்ட் ஆயிட்ட

போதும் போதும் ஓவரா புகழாத... ஆனா நீ இன்னும் அப்படியே உவ்வேக்-ன்னுதான் இருக்க

அய்யே...நெனப்புதான் சரி எங்க பேக் எதுவும் காணோம்

ஏறுனா காந்திபுரம்...இறங்குனா தாம்பரம் ரெண்டு நாள் வந்துட்டு போறதுல பொட்டி படுக்கை எல்லாம் எதுக்கு... நம்மள்லாம் சுதந்திரப் பறவை

ரொம்ப பேசற நீ சரி சரி எனக்கு ஒரு வெனிலா சொல்லிடு...
:
:
நீ என்ன சொன்ன...


அல்மண்ட் சாக்கோலேட்

நீ எப்பவும் பட்டர்ஸ்காட்ச் தானே சொல்வ...

சொல்வேன், அப்புறம் நீ, ஒரு பொண்ண பக்கத்துல வச்சுகிட்டு ஸ்காட்ச் சாப்பிடலாமான்னு கலாசுவ எதுக்கு வம்பு

அடேங்கப்பா எங்க பேச்சுக்கெல்லாம் எப்ப நீ பயப்பட ஆரம்பிச்ச... சரி நீ வேலை செய்யற இடத்துல பொண்ணுங்கள்லாம் எப்படி...

அப்படியே இருந்துட்டாலும்... நம்ம ராசி எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதானே இருக்கும்...
:
:
:
சரி போலாமா

சார் கொஞ்சம் இங்க வாங்க...

வித்யா நீ முன்னாடி போய்ட்டு இரு... என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன்

சார் உங்க ஃஜிப் போடல

(ஆ... கொஞ்சம் மறைவான இடத்தில் நின்று கொஞ்ச நேரம் போராடினேன்... 500க்கு 3 ன்னு மட்டமான பேண்ட் வாங்கினா இதுதான் தொல்லை... காதல் கோட்டை கரண் வசனமெல்லாம் வேறு நினைவிற்கு வந்தது... மேலே இழுக்க இழுக்க பிரிந்தபடியேதான் இருந்தது இன்னிக்குன்னு பார்த்து ஷார்ட் ஷர்ட் வேறு... ஒருவாறு சமாளித்து... வித்யா பாத்துருக்க மாட்டாளே... கடவுளே!)

வா வித்யா போலாம்...

சரி நான் உன்ன பஸ் ஏத்திவிட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போயிக்கறேன்

இதுவேறயா... சரி சரி வா சீக்கிரம் லேட் ஆய்டுச்சு

இந்தா சாவி... நீ ஓட்டு... என் பின்னாடிதான் உட்கார மாட்டியே நீ

(இருட்டுதான் ஆனாலும் எவனாவது சிக்னல் கிட்ட வெளிச்சத்துல பாத்துட்டான்னா வம்பா போயிரும்... ஜிப் தான் இன்னும் சரியாகலையே)

இல்லல்ல நீயே ஓட்டு... நான் ஒண்ணும் MCP இல்லண்ணு நீ புரிஞ்சிக்கணுமே

சரிங்க சார்...(நக்கலா சொன்னாலா நார்மலா சொன்னாளான்னே தெரியலயே) பின்னால உக்காரு ஆனா கொஞ்சம் தள்ளியே உக்காரு (தெரிஞ்சிருச்சோ)
:
:
:
ஏய் ஏய் இங்க ஏன் நிறுத்தற...பெட்ரோல் தீர்ந்து போச்சா என்ன

முதல்ல இறங்கு, போ உள்ள போய் நல்லதா ஒரு பேண்ட் எடுத்துட்டு வா... இப்டியே சென்னை வரை எப்படி போவ
(அடிப்பாவி தெரிஞ்சேதானா?)


*****


ஹலோ சந்துரு இருக்கானுங்களா...
ஹே நீதானாடா... குரல் வித்தியாசமா இருந்துச்சு
ம்ம் ஆமாம் நேத்துதான் வந்தேன்
அமெரிக்காவுக்கு என்னடா நல்லாத்தான் இருக்கு
சரி இன்னிக்கு 3 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துரு
என்ன விஷயமா... நம்ம காலேஜ் வரைக்கும் போய்ட்டு வரணும்... சொல்லியிருந்தேன்ல ஏற்கனவே
ஆமாமாம்... ஒரு வாரம்தான இருக்கு
:
:

வாப்பா சந்துரு... ராசு வந்தாதான் எங்க வீட்டுக்கெல்லாம் வழி தெரியும் உனக்கு இல்ல

எங்கம்மா நானே எங்க வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வர்றேன்... நேரமே கிடைக்கிறது இல்ல... அப்புறம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு

அதுக்கென்ன தீராம வந்துகிட்டே இருக்கு... சரி நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற

பாத்துகிட்டு இருக்காங்கம்மா... ராசுவுக்கு அமஞ்ச மாதிரி நல்ல பொண்ணா அமஞ்சா உடனே கல்யாணந்தான்

எம்மா அவனுக்கு ஒரு காஃபி குடுங்க... நான் 'தோ வந்தர்றேன் (மேலிருந்து என் குரல்)

டேய் ராசு எப்பப்பாரு தாமசமாத்தான் கிளம்புவியே... சீக்கிரம் வாடா மாப்ள பையா

வந்தாச்சு வந்தாச்சு... டேய் குடிச்ச வரைக்கும் போதும் வா... அம்மா நானும் சந்துருவும் ராத்திரி சாப்பிட வந்துருவோம் சேத்தே செஞ்சுருங்க
:
:
(கற்க கற்க... லேசாக அதிர கல்லூரி நோக்கி பயணித்தோம் நானும் சந்துருவும்)


கதிர் எப்படிடா இருக்கான்... நீயும் அவனும் அடிக்கடி பார்த்துப்பீங்களா

நான் விஸ்கான்ஸின்ல இருக்கேன், அவன் நியூயார்க்ல, நெறய பாத்துக்க முடியாது... ஆனா ஃபோன்ல பேசிக்குவோம் தினமும்...உனக்கு எப்படி போய்ட்டு இருக்கு வேலையெல்லாம்

வேலையெல்லாம் ஓ.கே தான் என்ன ஒரு on-siteதான் கிடைக்க மாட்டேங்குது

வரும்டா கவலைப்படாத எங்க போயிரப்போகுது... ஓ.கே ஒன்னு செய் உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்

ம்... சரிடா மண்டபம் எல்லாம் சொல்லியாச்சா...

அதெல்லாம் தம்பி ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான்... நம்ம மக்களுக்கு பத்திரிக்கை வைக்கிற வேலை ஒண்ணுதான் பாக்கி

உனக்கும் வித்யாவுக்கும் கல்யாணம்னா நம்ம செட்-ல பாதி பேரு நம்ப மாட்டேய்ன்றாய்ங்க

அது சரி எப்ப பாத்தாலும் அவள சீண்டி சண்டை போட்டுகிட்டே இருப்போம்... எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கும் சில சமயம் நினைக்கும் போது

க்ரீச்...

என்னடா நிறுத்திட்ட

இங்க ஓரமா நிக்றது... சார் வணக்கம்... நல்லாருக்கிங்களா

வணக்கம் நீங்க....

சார் நான் ராஜ்... 7 வருஷத்துக்கு முன்னாடி உங்க காலேஜ்-லதான் படிச்சேன்

வணக்கம் சார் நான் சந்துரு... இந்த காலேஜ் பர்ஸ்ட் செட்

ம் ஞாபகம் இருக்கு மறக்க முடியுமாப்பா... எல்லாம் நல்லா இருக்கீங்கள்ள

ம் இருக்கோம் சார்... எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கு... உங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும்னுதான் காலேஜ் போய்ட்டு இருக்கறேன்... வழியிலேயே உங்கள பாத்துட்டேன்

ரொம்ப சந்தோஷம்பா... எப்ப கல்யாணம்... எங்க வச்சு...

இங்க கோயமுத்தூர்லதான் சார்... நீங்க கண்டிப்பா வரணும்

ம்... அதுக்கென்னப்பா வந்துட்டா போச்சு

சரி சார் வர்றோம், அப்புறம் இங்க நின்னுகிட்டு இருக்கிங்களே... யாருக்காகவாவது காத்துகிட்டு இருக்கிங்களா

இல்லப்பா என் வண்டி திடீர்னு மக்கர் பண்ணி நின்னுருச்சு... என்ன பண்றதுன்னு யோசனையா நின்னுகிட்டு இருக்கேன்

நம்ம வண்டில ஏறிக்கோங்க சார்... காலேஜ்-ல விட்டர்றேன்!

(சந்துரு ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்து குறும்பாக புன்னகைக்கிறான் என்று யாராவது சொல்லுங்களேன்!)


கவனிக்க: உரையாடுவோர்

ராசு

சந்துரு

வித்யா

கதிர், ஐஸ்கிரீம் கடைக்காரன், ராசுவின் அம்மா, பிரின்சி என்று இடம் பொருளறிந்து ஊகித்துக் கொள்ளவும்!

Monday, September 11, 2006

37 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 5

Photobucket - Video and Image Hosting
முந்தைய பாகங்களிற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4

ஹலோ சந்துரு இருக்கானுங்களா...
ஹே நீதானாடா... குரல் வித்தியாசமா இருந்துச்சு
ம்ம் ஆமாம் நேத்துதான் வந்தேன்
அமெரிக்காவுக்கு என்னடா நல்லாத்தான் இருக்கு
சரி இன்னிக்கு 3 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துரு
என்ன விஷயமா... நம்ம காலேஜ் வரைக்கும் போய்ட்டு வரணும்... சொல்லியிருந்தேன்ல ஏற்கனவே
ஆமாமாம்... ஒரு வாரம்தான இருக்கு
:
:

வாப்பா சந்துரு... ராசு வந்தாதான் எங்க வீட்டுக்கெல்லாம் வழி தெரியும் உனக்கு இல்ல

எங்கம்மா நானே எங்க வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வர்றேன்... நேரமே கிடைக்கிறது இல்ல... அப்புறம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு

அதுக்கென்ன தீராம வந்துகிட்டே இருக்கு... சரி நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற

பாத்துகிட்டு இருக்காங்கம்மா... ராசுவுக்கு அமஞ்ச மாதிரி நல்ல பொண்ணா அமஞ்சா உடனே கல்யாணந்தான்

எம்மா அவனுக்கு ஒரு காஃபி குடுங்க... நான் 'தோ வந்தர்றேன் (மேலிருந்து என் குரல்)

டேய் ராசு எப்பப்பாரு தாமசமாத்தான் கிளம்புவியே... சீக்கிரம் வாடா மாப்ள பையா

வந்தாச்சு வந்தாச்சு... டேய் குடிச்ச வரைக்கும் போதும் வா... அம்மா நானும் சந்துருவும் ராத்திரி சாப்பிட வந்துருவோம் சேத்தே செஞ்சுருங்க
:
:
(கற்க கற்க... லேசாக அதிர கல்லூரி நோக்கி பயணித்தோம் நானும் சந்துருவும்)


கதிர் எப்படிடா இருக்கான்... நீயும் அவனும் அடிக்கடி பார்த்துப்பீங்களா

நான் விஸ்கான்ஸின்ல இருக்கேன், அவன் நியூயார்க்ல, நெறய பாத்துக்க முடியாது... ஆனா ஃபோன்ல பேசிக்குவோம் தினமும்...உனக்கு எப்படி போய்ட்டு இருக்கு வேலையெல்லாம்

வேலையெல்லாம் ஓ.கே தான் என்ன ஒரு on-siteதான் கிடைக்க மாட்டேங்குது

வரும்டா கவலைப்படாத எங்க போயிரப்போகுது... ஓ.கே ஒன்னு செய் உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்

ம்... சரிடா மண்டபம் எல்லாம் சொல்லியாச்சா...

அதெல்லாம் தம்பி ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான்... நம்ம மக்களுக்கு பத்திரிக்கை வைக்கிற வேலை ஒண்ணுதான் பாக்கி

உனக்கும் வித்யாவுக்கும் கல்யாணம்னா நம்ம செட்-ல பாதி பேரு நம்ப மாட்டேய்ன்றாய்ங்க

அது சரி எப்ப பாத்தாலும் அவள சீண்டி சண்டை போட்டுகிட்டே இருப்போம்... எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கும் சில சமயம் நினைக்கும் போது

க்ரீச்...

என்னடா நிறுத்திட்ட

இங்க ஓரமா நிக்றது... சார் வணக்கம்... நல்லாருக்கிங்களா

வணக்கம் நீங்க....

சார் நான் ராஜ்... 7 வருஷத்துக்கு முன்னாடி உங்க காலேஜ்-லதான் படிச்சேன்

வணக்கம் சார் நான் சந்துரு... இந்த காலேஜ் பர்ஸ்ட் செட்

ம் ஞாபகம் இருக்கு மறக்க முடியுமாப்பா... எல்லாம் நல்லா இருக்கீங்கள்ள

ம் இருக்கோம் சார்... எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கு... உங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும்னுதான் காலேஜ் போய்ட்டு இருக்கறேன்... வழியிலேயே உங்கள பாத்துட்டேன்

ரொம்ப சந்தோஷம்பா... எப்ப கல்யாணம்... எங்க வச்சு...

இங்க கோயமுத்தூர்லதான் சார்... நீங்க கண்டிப்பா வரணும்

ம்... அதுக்கென்னப்பா வந்துட்டா போச்சு

சரி சார் வர்றோம், அப்புறம் இங்க நின்னுகிட்டு இருக்கிங்களே... யாருக்காகவாவது காத்துகிட்டு இருக்கிங்களா

இல்லப்பா என் வண்டி திடீர்னு மக்கர் பண்ணி நின்னுருச்சு... என்ன பண்றதுன்னு யோசனையா நின்னுகிட்டு இருக்கேன்

நம்ம வண்டில ஏறிக்கோங்க சார்... காலேஜ்-ல விட்டர்றேன்!

(சந்துரு ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்து குறும்பாக புன்னகைக்கிறான் என்று யாராவது சொல்லுங்களேன்!)

Friday, September 08, 2006

36 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4

Photobucket - Video and Image Hosting

முந்தைய பாகங்களிற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3



ஹலோ வித்யா-வா...
ஆமா நேத்துதான் சென்னையில இருந்து வந்தேன்...
ம் தேங்க்ஸ்...
நாலு மாசம் ஆச்சு...
எல்லாம் சந்துருக்கும் கதிருக்கும்தான் நன்றி சொல்லணும்...
ட்ரீட் தானே... இன்னிக்கு சாயங்காலம் தந்தா போச்சு...
இல்லல்ல சனி ஞாயிறு ரெண்டு நாள்தான் லீவு..
5 மணிக்கு 'க்ளேசியர்ஸ்' போலாம் அங்க இருந்து கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு நான் அப்படியே சென்னை கிளம்பிக்கறேன்
:
:
:
ஹேய் ராஜ்... எப்படி இருக்க... என்னடா சென்னை போனதும் பயங்கர ஸ்மார்ட் ஆயிட்ட

போதும் போதும் ஓவரா புகழாத... ஆனா நீ இன்னும் அப்படியே உவ்வேக்-ன்னுதான் இருக்க

அய்யே...நெனப்புதான் சரி எங்க பேக் எதுவும் காணோம்

ஏறுனா காந்திபுரம்...இறங்குனா தாம்பரம் ரெண்டு நாள் வந்துட்டு போறதுல பொட்டி படுக்கை எல்லாம் எதுக்கு... நம்மள்லாம் சுதந்திரப் பறவை

ரொம்ப பேசற நீ சரி சரி எனக்கு ஒரு வெனிலா சொல்லிடு...
:
:
நீ என்ன சொன்ன...


அல்மண்ட் சாக்கோலேட்

நீ எப்பவும் பட்டர்ஸ்காட்ச் தானே சொல்வ...

சொல்வேன், அப்புறம் நீ, ஒரு பொண்ண பக்கத்துல வச்சுகிட்டு ஸ்காட்ச் சாப்பிடலாமான்னு கலாசுவ எதுக்கு வம்பு

அடேங்கப்பா எங்க பேச்சுக்கெல்லாம் எப்ப நீ பயப்பட ஆரம்பிச்ச... சரி நீ வேலை செய்யற இடத்துல பொண்ணுங்கள்லாம் எப்படி...

அப்படியே இருந்துட்டாலும்... நம்ம ராசி எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதானே இருக்கும்...
:
:
:
சரி போலாமா

சார் கொஞ்சம் இங்க வாங்க...

வித்யா நீ முன்னாடி போய்ட்டு இரு... என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன்

சார் உங்க ஃஜிப் போடல

(ஆ... கொஞ்சம் மறைவான இடத்தில் நின்று கொஞ்ச நேரம் போராடினேன்... 500க்கு 3 ன்னு மட்டமான பேண்ட் வாங்கினா இதுதான் தொல்லை... காதல் கோட்டை கரண் வசனமெல்லாம் வேறு நினைவிற்கு வந்தது... மேலே இழுக்க இழுக்க பிரிந்தபடியேதான் இருந்தது இன்னிக்குன்னு பார்த்து ஷார்ட் ஷர்ட் வேறு... ஒருவாறு சமாளித்து... வித்யா பாத்துருக்க மாட்டாளே... கடவுளே!)

வா வித்யா போலாம்...

சரி நான் உன்ன பஸ் ஏத்திவிட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போயிக்கறேன்

இதுவேறயா... சரி சரி வா சீக்கிரம் லேட் ஆய்டுச்சு

இந்தா சாவி... நீ ஓட்டு... என் பின்னாடிதான் உட்கார மாட்டியே நீ

(இருட்டுதான் ஆனாலும் எவனாவது சிக்னல் கிட்ட வெளிச்சத்துல பாத்துட்டான்னா வம்பா போயிரும்... ஜிப் தான் இன்னும் சரியாகலையே)

இல்லல்ல நீயே ஓட்டு... நான் ஒண்ணும் MCP இல்லண்ணு நீ புரிஞ்சிக்கணுமே

சரிங்க சார்...(நக்கலா சொன்னாலா நார்மலா சொன்னாளான்னே தெரியலயே) பின்னால உக்காரு ஆனா கொஞ்சம் தள்ளியே உக்காரு (தெரிஞ்சிருச்சோ)
:
:
:
ஏய் ஏய் இங்க ஏன் நிறுத்தற...பெட்ரோல் தீர்ந்து போச்சா என்ன

முதல்ல இறங்கு, போ உள்ள போய் நல்லதா ஒரு பேண்ட் எடுத்துட்டு வா... இப்டியே சென்னை வரை எப்படி போவ
(அடிப்பாவி தெரிஞ்சேதானா?)



கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 5

35 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3

Photobucket - Video and Image Hosting

முந்தைய பாகத்திற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2

ராசு இந்தாடா... இந்த புக்-ல இருக்கற எல்லா கணக்கையும் போட்டு பார்த்துரு... இதுல இருந்துதான் எல்லாக் கேள்வியும் வருதாம். மொத சுத்து மட்டும் தாண்டி வந்துருடா அப்புறம் நம்ம நண்பர் ஒருத்தர்தான் இந்த நேர்முகத் தேர்வெல்லாம் நடத்தறாரு... சொல்லி எதுனா பண்ணலாம்

ம்...சரிடா கதிர்... அப்புறம் ஒரு நூறு ருபாய் கேட்டுருந்தனே நாளைக்கு தாம்பரத்துல வேறொரு நேர்முகத் தேர்வு இருக்கு

என் கிட்ட அம்பதுதான் இருக்கு... இந்தா வச்சுக்க சரி நாளைக்கு நல்லதா டிரெஸ் பண்ணிட்டு போ... போன தடவ மாதிரி கருப்பா கட்டம் போட்ட சட்டைலாம் போட்டுட்டு போவாதா

இல்லடா அங்க தேச்சு வச்சுருக்கேன் பாரு வெள்ளை-ல கோடு போட்டு... அப்புறம் சந்துரு கிட்ட 'டை' கேட்ருக்கேன்

ம்... ஓ.கே ஆனா 'ஆப்டிட்யூட் டெஸ்ட்'க்கே 'டை'யோட போய் உக்காராத... மடிச்சு சட்டை பைக்குள்ள வச்சுக்க... நான் தூங்கப் போறேன் அப்புறம் நாளைக்கு 'ஆல் தி பெஸ்ட்'
:
:
:
ஹேய் ராசு வாடா நான் உன்ன தாம்பரத்துல வுட்டர்றேன்

நான் போய்க்குவேண்டா சந்துரு... நீ ஆபீஸ் போ... தாம்பரம் போய்ட்டு போகணும்னா உனக்கு பயங்கர சுத்து

அதெல்லாம் பரவாயில்ல வா வா வந்து உக்காரு சீக்கிரம்... எல்லாம் எடுத்துகிட்டில்ல

ம்...

ஓ.கே டா... டெஸ்ட் முடிச்சிட்டு என்ன ஃபோன்ல கூப்பிடு... ஆல் த பெஸ்ட்...ஹே ஏண்டா ஒரு மாதிரி இருக்க

இல்லடா அபீஸ பாத்தாலே பயமா இருக்கு... சரி சரி நீ கெளம்பு நான் பாத்துக்கறேன்
:
:
:
ராசு...இங்க...ம்... டெஸ்ட் எப்படி பண்ணின

சந்துரு இன்னும் என்ன இங்க இருக்க... ஆபீஸ் போகலயா

இல்லடா ஃபோன் பண்ணி லீவ் சொல்லிட்டேன்... நீ வேற ஒரு மாதிரியா போனியா உள்ளாற... சரி டெஸ்ட் எப்படி பண்ணின

(நன்றாக செய்திருக்கிறேன் என்று தலையாட்டத்தான் முடிந்தது... உணர்ச்சிவயப்படும்பொழுது வார்த்தைகள் கரைந்து போய் விடுகின்றன... அன்று முழுவதும் என்னுடன் இருந்தான் சந்துரு. தொழில்நுட்பத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று கடைசி கட்டம் வரை உடனிருந்து உற்சாகமூட்டினான். பொது அறிவு வினாக்கள், பல்வேறு தேர்வுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சம்பளமாக எவ்வளவு கேட்பதென்பது வரை பல விஷய நுணுக்கங்கள் சொல்லித்தந்தான்.

நான் தேர்வானதிற்கு அவர்களிருவரும் எனக்கு விருந்தளித்து கொண்டாடினார்கள்... கைதூக்கி விட நண்பர்களிருக்கையில் எனக்கென்ன மனக்கவலை)


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4