Saturday, September 30, 2006

44 : சொர்க்கமே என்றாலும்...

கழுகாசலமூர்த்தி திருக்கோவிலின் தெற்கு நுழைவாயில்

எங்க ஊருக்கு போய்ட்டு வந்திருக்கிறார் ஜான் அண்ணா, எதுக்குப் போனாரா? அட அவர் ஊரும் அதுதானுங்க... அதாவது நம்ம ஊர்ஸ் அவரு.

போனவரு சும்மா வராம எங்க ஊரின் கலைப் பொக்கிஷங்களை கொள்ளையடித்து வந்திருக்காரு, கேமரா பொட்டியிலதான். பார்த்ததுமே நமக்கும் பத்திக்கிச்சு ஊருக்குப் போகின்ற ஆசை.

எங்க ஊரப் பாக்க உங்களுக்கும் ஆசையா இருக்கா, ஒரு நடை
ஜான் வலைப்பூக்கள்-க்கு சென்று வந்து விடுங்கள்.

பார்த்ததும் தெரிகின்ற சில விஷயங்கள்
* தெப்பத்தில் தண்ணீர் குறைஞ்சுருக்கு (போன வருஷம் நல்ல வர்ஷம்! என்று சொன்னார்கள்)
* கோவிலின் முன் பாகத்தில் அமைந்துள்ள, அரண்மனைத் தெருவை நன்கு அகலப் படுத்தி உள்ளார்கள்
* கைவைக்க முடியாத அந்த தேன்கூடு இன்னும் அப்படியே உள்ளது
* ஆம்பூரணி நிலை அழுகை வர வைப்பதாக உள்ளது


எல்லாம்வல்ல கழுகாசலமூர்த்தியிடம் ஊரில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை மட்டுமாவது தீர்க்கறதுக்கு ஒரு கோரிக்கை வைக்கனும், அதுக்காகவாவது ஊருக்கு போகணும் சீக்கிரமா!

ஊரைப் பற்றிய எனது பிறபதிவுகள்
கழுகுமலைக் கள்ளன்
வெட்டுவான் கோவில் கதை
வெட்டுவான் கோவில் கதை - தொடர்ச்சி

8 comments:

Anonymous said...

Rasukutti kathi ellam nallaeruku,
I felt my days @ kalukumali.bala

Anonymous said...

ராசு, படத்த பார்த்ததுமே இவ்வள சொல்றீங்களே நேர்ல போய் வந்தா எவ்வள சொல்வீங்களோ..

ராசுக்குட்டி said...

பாலா இப்படியா தொலைபேசி நம்பரை பின்னூட்டத்தில் கொடுப்பது. இப்போதைக்கு அழித்துவிட்டேன், பின்னொரு நாள் பேசுகிறேன்

வருகைக்கு நன்றி... தொடர்ந்து வரவும்

ராசுக்குட்டி said...

ஜான் -> போய்வர வாய்ப்புக்கிடைத்தாலே பெரிய விஷயம். நான் சொல்றது இருக்கட்டும் நீங்க போய் வந்த கதையை அவுத்து விடுங்க

கோவி.கண்ணன் [GK] said...

ராசு,

மேலே உள்ள படம் சிங்கை முருகன் கோவில் தானே !

ராசுக்குட்டி said...

இல்லை கோவி.கண்ணன், ஆனால் இதுவும் முருகன் கோவில் மேற்கூரைதான்... நான் பிறந்த ஊரில் உள்ள கோவில் கழுகுமலை கழுகாசல மூர்த்தி (முருகன்) கோவில் மேற்கூரைதான் இது!

கோவி.கண்ணன் [GK] said...

//ராசுக்குட்டி said...
இல்லை கோவி.கண்ணன், ஆனால் இதுவும் முருகன் கோவில் மேற்கூரைதான்... நான் பிறந்த ஊரில் உள்ள கோவில் கழுகுமலை கழுகாசல மூர்த்தி (முருகன்) கோவில் மேற்கூரைதான் இது!
//

அதுபோல் இருந்தது !
விளக்கத்துக்கு நன்றி ராசு...!

ராசுக்குட்டி said...

ஓ சரி!

சிங்கை முருகன் கோவிலை பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.