Friday, September 29, 2006

43 : எனக்கும் வேண்டாம் தேன்கூடு தரும் பரிசு! (?)

Photobucket - Video and Image Hosting

இந்த முறை மைக் செட்டெல்லாம் வைக்கவில்லை, மூன்று-நான்கு பதிவுகள் ஒரே படைப்பைப் பற்றி பேசி கழுத்தறுக்கவில்லை ஆனாலும் மிகமிக அதிகப் படியாக 62 ஓட்டுக்கள் விழுந்திருக்கின்றன. கிள்ளிப் பார்த்து வலித்த போதும் கூட நம்ப முடியாமல்தான் இருக்கிறது.

இது உண்மையில் வெற்றியா? என யோசிப்பவர்களுடனும் மற்றவர்களுடனும் நான் திட்டமிட்டு செய்த தகிடுதத்தங்களையும், திட்டமிடாமலே அடித்த அதிர்ஷ்டத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

* ஒரே கதை, அதை நீளம் என்று சாக்குச் சொல்லி 5-ஆக பிரித்தளித்திருந்தேன். அவற்றை தனித்தனியாகவே தேன்கூட்டில் சமர்ப்பித்திருந்தேன். அதிகம் பேரை ஈர்க்க என்று செய்த சின்ன சித்து விளையாட்டு அது.

*** அது ஐந்து வெவ்வேறு கதைகளாக புரிந்து கொள்ளப்பட்டது தனி துன்பியல் நிகழ்வு :-(

*** மேலும் வாக்களிக்கும் சமயத்தில்தான் ஓட்டுகள் பிரியும் அபாயத்தை உணர்ந்தேன், தேன்கூடு நிர்வாகிகள் தந்த ஆலோசனையால் அது
ஒரே பதிவாக வாக்குக்காக வைக்கப்பட்டது, என் அதிர்ஷ்டமே. நிறைய ஓட்டுக்களுக்கு மிக முக்கிய காரணியாக இதை கருதுகிறேன்.

* உலகத்திலேயே அதி சுவாரசியமானது காதல் அதுவும் அடுத்தவனது காதல் என்ற உண்மையை மனதில் வைத்து காதல் ரசத்துடன் இரண்டு அத்தியாயங்களை இடையில் சொருகியிருந்தேன் - கதைக்கு தேவைப்படா விட்டாலும்

*** தனிப்பட்ட முறையில் என் நண்பியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்

* வளைகாப்பு விருந்து பற்றிய பதிவில் திட்டமிட்டே போட்டிக்கான என் படைப்பை சுட்டியிருந்தேன். மேலும், பதிவின் தலைப்பு, இட்லி வடையும் போளியும். இட்லிவடை மற்றும் போலி மிக அதிகம் பேரை ஈர்க்கும் வார்த்தைகள் என்பதால் அந்த சதி.

*** நான் எதிர்பார்த்திருந்த வருகை எண்ணிக்கையோ, பின்னூட்டங்களோ இல்லாது போய் என் மூக்கறுத்தது வேறு விஷயம்!

*** சில தினங்கள்(5) முன்கூட்டியே செய்த பதிவென்பதால் ஓட்டுக்களை அது பெற்றுத்தந்திருக்காது என்பதுவும் என் எண்ணம்.

* என் கல்லூரியில் நடந்த பல நிகழ்ச்சிகளின் தொகுப்பே கதையென்பதால் என் கல்லூரி நண்பர்கள்(10-15 பேர்) அனைவருக்கும் இப்படைப்பை பார்க்க சிபாரிசித்திருந்தேன். கதையின் பின்புலத்தை அவர்கள் அறிந்திருந்ததால் அனைவருமே ரசித்தனர்,. தேன்கூட்டில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே பதிவிட்டிருந்ததையும் அவர்களுக்கு தெரியப் படுத்தியிருந்தேன்.

*** ஆனால் எத்தனை பேர் நேரத்தில் படித்திருப்பார்கள், அவற்றில் எத்தனை ஓட்டாக மாறியிருக்கும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

*** ஏனெனில் தங்கள் மடல் முகவரிகளை பதிந்து கொண்டு, அவற்றிற்கு உயிரூட்டி பின் வாக்களிப்பது என்பது நிச்சயம் சில மணித்துளிகளை எதிர்பார்க்கும் விடயங்களே. இந்தக் கதை அவர்களுக்கு பிடித்திருக்காத பட்சத்தில் அதை செய்ய வேண்டிய அவசியமும் அவர்களுக்கில்லை.

*** மற்ற கதைகளை படித்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு குறை அந்த ஓட்டுக்களை, கள்ள ஓட்டுக்களாக மாற்றுமா என்ற கேள்வியை உங்களிடமே கேட்டு வைக்கிறேன்.

* பின்னூட்டங்களில்லாவிடினும்...இன்னும் இருக்கிறது ஆகாயம், என்ற பதிவும் அதில் செந்தழல்ரவி உபயத்தில் எதிர்பாராமல் நடந்த கும்மியும் என் வலைப்பூவுக்கு நிறைய பேரை வர வைத்திருக்கலாம், அது ஒரு காரணியாகவும் இருந்திருக்கலாம், ஏனென்றால் சம்பவம் ஆரம்பித்த தினம் செப். 20, 2006.

என் படைப்பை நிஜமாகவே படித்து ஓட்டுப்போட்ட அனைவருக்கும் என் நன்றிகள்! உள்ளபடியே மிகப் பெருமையுடன், தேன்கூடு தந்த பதக்கத்தை என் சட்டையில் குத்திக்கொள்கிறேன்.

போட்டி நடத்திய தேன்கூடு-தமிழோவியம், மற்றும் இந்த வித்தியாசமான தலைப்பைக் கொடுத்து போட்டியை சுவாரசியப் படுத்திய கொங்கு ராசு, நடுவர்கள் நிலா, ராசு மற்றும் KVR அனைவருக்கும் என் நன்றிகள்.


சொல்லி அடித்த ஆசாத், யோசிக்க வைக்கும் யோசிப்பவருக்கும், நல்ல படைப்புகளால் மிரட்டும் முரட்டுக்காளைக்கும் வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

அப்புறம் எல்லோருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள், இதுபோன்ற சிறு மனக்கிலேசங்களால் எழுதுவதையோ, போட்டிக்கு அனுப்புவதையோ தயவுசெய்து நிறுத்திவிடாதீர்கள்.

என் மன உணர்வுகளையும், வாழ்வின் நிகழ்வுகளையும் எழுத்தில் வடிக்க இயலும் என்ற நம்பிக்கையை எனக்கு தந்ததற்காகவும் அனைவருக்கும் மேலும் ஒரு சிறப்பு நன்றி!

ம்... எல்லாம் சரி அப்புறம் ஏன் தலைப்பு இப்படி...

பின்ன என்னங்க பின்ன, இங்கயே எழுத சரக்கு ஒண்ணுமில்லாமதானே இத்தன கூத்து பண்ணிக்கிட்டு இருக்கோம்; இதுல பரிசு என்னடான்னா? தமிழோவியத்திலும் எழுதணுமாம்!

மேலும் ஜீன்ஸ் அணிவதல்ல இன்றைய ஃபாஷன்!


17 comments:

நாமக்கல் சிபி said...

தலைப்பை பார்த்துட்டு என்னடா இது இப்படி ஆளாளுக்கு போட்டி நடத்துபவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார்களே என்று நினைத்தேன்.

சமர்த்தா மெடலை வாங்கி குத்திகிட்டீங்கல்ல! அது போதும்.

வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

ஏங்க நீங்களும் இப்படி பயமுறுத்துறீங்க... இப்படி எல்லாரும் சொன்னா கடைசியா போட்டில பங்கெடுத்துக்கற ஆர்வமே போயிடும் போலிருக்கு...

இனிமே கொஞ்சம் யோசிக்கனும் போல இருக்கு :-(

நாமக்கல் சிபி said...

உங்க கதைக்கு ஓட்டு போட்டவர்களில் நானும் ஒருவன்

ராசுக்குட்டி said...

சிபி -> ரொம்ப நாள் கழித்து நம்ம பக்கம் வருகிறீர்கள் வாங்க வாங்க. இல்லை போட்டி நடத்துபவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை, அவர்களுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு தவறுகளை ஞாயப் படுத்தியதைத்தான் சுட்டிக் காட்ட விரும்பினேன்!

ஆமா என்ன முருகனருளில் மூழ்கி விட்டீர்களா

ராசுக்குட்டி said...

வெட்டி -> கடைசி பாரா உங்களுக்காகத்தான்... அடுத்த போட்டியில் இன்னும் நல்லா எழுதத்தான் முயற்சிப்பேன்.

ஓட்டுக்கும் நன்றி, அப்புறம் நான் சொல்லத்தேவையில்லையே உங்களுக்கும் நான் ஓட்டுப் போட்டதை!

Anonymous said...

ராசு, இப்பொ எல்லாம் நெறய (உண்மை) பேசற....
வாழ்த்துக்கள்...

Anu said...

Hi Rasu
I voted for you not because you are my friend but because
I really liked your story.
(I voted for myself not because I liked it but because I thought atleast oru voteavadhu venumennu ;) )

பொன்ஸ்~~Poorna said...

ராசுக் குட்டி, அது சரி.. என்னவோ போங்க.. :)))

தேன்கூடு நிர்வாகிகளுக்கு என் முக்க்க்க்க்கிய பரிந்துரை ஒன்று.. இது போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை அடக்கிய தொடர்கதைகளை இனிமேல் போட்டியில் அனுமதிக்கக் கூடாது. எத்தனை புதுப் பதிவுகள் உருவாக்குகிறோமோ, அத்தனைக்கத்தனை பரிசுக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன்.

மற்றபடி உங்கள் கதையை நான் இன்னும் படிக்கவில்லை.. அதில் அடுத்தவன் காதலைப் பயன்படுத்தி இருந்தாலும் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. உங்கள் கதையை மட்டுமே படித்துவிட்டு ஓட்டு போட்டதைக் கள்ள ஓட்டு என்று கூற முடியாது. - யோசிப்பவர் செய்ததைக் கூட என்னால் கள்ள ஓட்டு என்று முத்திரை குத்த முடியவில்லை..

Unknown said...

:)

ராசுக்குட்டி said...

சச்சுக் கண்ணா... பேசறத குறைக்கனும்னுதான் எழுதிப் பார்க்கிறேன்...பட் முடிய மாட்டேங்குது!

அனிதா -> என்னவொரு தன்னடக்கம் உங்களுக்கு. உங்க கதை ரொம்பவே நல்லா இருந்துச்சு கொஞ்சமே கொஞ்சம் ஜிகினா வேலை மட்டும் மிஸ்ஸிங்!

பொன்ஸ் -> மூன்றாவது பதிவு போடறப்பவே அந்த ஞானோதயம் வந்தது, தேன்கூடு நிர்வாகிகளிடம் கேட்ட போது, இந்த முறை நன்றாகவே இருப்பதாகவும், கடைசியில் மாற்றிக் கொள்ளலாம் என்று அவர்கள் கொடுத்த யோசனைதான் அது.

//கள்ள ஓட்டு என்று கூற முடியாது. - யோசிப்பவர் செய்ததைக் கூட என்னால் கள்ள ஓட்டு என்று முத்திரை குத்த முடியவில்லை.. //
வருத்தம்தான் இல்லையே அப்புறமென்ன நீங்களும் உங்கள் கதைகளை போட்டிக்கு அளிக்கலாமே, நிறுத்தவேண்டாமே

தேவ் -> :))) தெய்வீகச் சிரிப்பய்யா...

யோசிப்பவர் said...

ராசு,
//போட்டி நடத்துபவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கவில்லை, அவர்களுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு தவறுகளை ஞாயப் படுத்தியதைத்தான் சுட்டிக் காட்ட விரும்பினேன்!
//
நான் பாடமெல்லாம் சொல்லி கொடுக்க முயலவில்லை;). தேர்வு முறையில் உள்ள குறைகளை சம்பந்தபட்ட நிர்வாகிகளுக்கு சுட்டிகாட்ட விரும்பினேன். அவ்வளவுதான்.

வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள்!!!:)

Anonymous said...

//நான் பாடமெல்லாம் சொல்லி கொடுக்க முயலவில்லை;). தேர்வு முறையில் உள்ள குறைகளை சம்பந்தபட்ட நிர்வாகிகளுக்கு சுட்டிகாட்ட விரும்பினேன். அவ்வளவுதான்.//

நிர்வாகிகளுக்குத் தெரியாததையா நீங்கள் சுட்டிக்காட்டப்போகிறீர்கள்? ஓட்டெடுப்பில் உள்ள குறைதான் உலகத்திற்கே தெரியுமே. அவசியம் சொல்ல வேண்டுமென்றிருந்தால், நீங்கள் மடல் அனுப்பியிருக்கலாமே. தேன்கூட்டினை விடுங்க, இந்த மாதிரி பொது பணியில இருக்கறவங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம இருக்கறாங்கண்ணு நினைச்சீங்களா? இப்படிச் செய்தால்தான் அவர்களுக்கு சரியாகப் போய் சேரும் என்று (உங்கள் வலைப்பதிவில் பின்னூட்டத்தில்) உங்கள் குறுக்கு புத்தியை பெருமைப் படுத்தி சொல்லிவிட்டு, சப்பை கட்டு கட்டுகிறீர்களே!யோசிப்பவரே கொஞ்சமாவது யோசியுங்கள்.

ராசுக்குட்டி said...

யோசிப்பவரே -> நீங்கள் தேன்கூடு நிர்வாகிகளிடம் இதுபற்றி பேசிவிட்டு, அவர்கள் கருத்தைக் கேட்டிருக்கலாமே, அவர்கள் கேட்க மாட்டார்கள் என்பது முன்முடிவா, அல்லது நிஜமாகவே கேட்டு அதன் முடிவா என்பதையும் சொல்லலாம் தாங்கள்.

நிவேதா -> என்னுடைய கருத்தும் அதே! வருகைக்கு நன்றி தொடர்ந்து வருக என் பக்கத்திற்கு, உங்கள் வலைப்பூ முகவரி தந்தால் மகிழ்வேன்!

Anonymous said...

நீங்க பரிசைத் எடுத்துக் குடுத்தால் வாங்கிட்டுப் போக பெரிய மஞ்சப்பை கையில கொண்டு வந்திட்டு பார்த்தா என்னங்க நீங்க இப்படிப் பண்ணிட்டிங்க? இப்ப நான் எப்படிங்க திரும்பிப் போறது?

சந்தைக்குப் போகனும்; ஆத்தா வையும்; பரிசைக் கொடுத்திடுங்க... ப்ளீஸ்...

சரி சரி.., கலாட்டாவெல்லாம் பண்ணலை. ;-)

தங்கள் கதையை எழுதியவுடன் பலரும் வந்து படித்து, பாராட்டி, வாக்கும் அளித்துவிடுவார்கள் என பலரும் நம்மியுள்ளார்கள். நானும் தான் முதலில்...

ஒருவித அலைபாயும் மன நிலையிலேயே (Surfing mentality-யிலேயே) பலரும் இங்கே படிக்க வருவது குறிப்பிடத்தக்கது. தேடி எடுத்து படிக்கும் பொறுமையெல்லாம் பலருக்கும் இருக்காது. வரிசைப்படுத்தி வைத்திருந்தாலும் தெரிந்தவர்கள் எப்படி எழுதினார்கள் என ஒரு சாம்பிள் படித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

போட்டிக்கான ஆக்கங்களை பலருக்கும் தெரிவிக்க அதை தனித்து தெரியவைக்க வேண்டும். குறைந்தபட்சம் போட்டிக்கான தலைப்பே ஈர்க்கவேண்டும். படிக்கும் போதே எதாவது ஒன்று மனதைத் தொட வேண்டும். இவையாவையும் கொடுத்து, சரியான முறையில் கதையை பலரும் அறியச்செய்து வெற்றியும் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

//அடுத்த போட்டியில் இன்னும் நல்லா எழுதத்தான் முயற்சிப்பேன் //

சபாஷ் ! தொடரட்டும் வெற்றிக்கான உழைப்பு !

கதிர் said...

தலைப்ப பாத்துட்டு ஆஹா இன்னிக்கு நம்ம அட்வைச அள்ளி தெளிக்க ஒரு ஆள் சிக்கிருச்சின்னு நெனச்சி வந்தேன் கடைசில எல்லாத்தையும் பல்பு வாங்க வச்சிட்டிங்களே :(

மூணு, ரெண்டு, அடுத்தது ஒண்ணா?

நடத்துங்க நடத்துங்க!!

வாழ்த்துக்கள்

ராசுக்குட்டி said...

//ஒருவித அலைபாயும் மன நிலையிலேயே (Surfing mentality-யிலேயே) பலரும் இங்கே படிக்க வருவது குறிப்பிடத்தக்கது//

உண்மைதான் முரட்டுக்காளை, சுஜாதா சொன்னது போல் நமக்கு கிடைக்கப் போவது 15 விநாடி புகழ்தான் அதுவும் இங்கே மைக்ரோ விநாடிகளில் பிரித்தளிக்கப் படுகிறது

ராசுக்குட்டி said...

வாழ்த்திக்களுக்கு நன்றி தம்பி -> இல்லாங்காட்டியும் அட்வைச அள்ளித் தெளிக்க வேண்டியதுதான நான்லாம் சொல்றத கேட்டுக்கற பய

3-2-1 ஆ அப்போ அடுத்து என்ன 0-ஆ? நோ நோ