Thursday, September 07, 2006

34 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2

Photobucket - Video and Image Hosting

முந்தைய பாகத்திற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1

ஏய்...ஏய் வித்யா... நிறுத்து நிறுத்து...

ஹேய் வண்டிக்குள்ளாற விழுந்துடாதடா என்ன விஷயம்

வீட்டுக்குதான போற... நானும் வர்றேன் என்ன ஹோப்ஸ்-ல இறக்கி விட்டுரு

சரி உக்காரு

இல்ல வண்டிய என்கிட்ட கொடு... நீ பின்னாடி உக்காரு

ஏய் இது என் வண்டிடா

பெரிய வண்டி...ஒன்ரயணாவுக்கு ஒரு கைனடிக் ஹோண்டா... ஹட்... பின்னாடி போய் உக்காரு

ஒரு பொண்ணுக்கு பின்னாடி உக்காந்துகிட்டு வரக்கூடாதோ... எல்லாம் ஈகோ... ஆம்பளைங்க எல்லாம் MCPsதானே இந்தா புடி

உன் ஓட்ட வண்டில பின்னாடி உக்காந்துகிட்டு எங்க பிடிச்சுக்கறது... உன்ன புடிச்சிக்கலாம்னா கோவப்படுவ

கஷ்டகாலம்...ஏண்டா நீ இப்டி இருக்க.. அப்புறம் எங்க வண்டி தேர் மாதிரி தெரிஞ்சுக்கோ

தேரா அடேங்கப்பா, அது சரி அதென்ன MCP... எங்களுக்கெல்லாம் McD தான் தெரியும்...

நீ திருந்தவே மாட்டடா.. சரி எங்க போற

ராகம்-ல காமசூத்ரா பாக்க போறோம் நீயும் வர்றியா

வேணாண்டா ராசு ஏங்கிட்ட இப்டிலாம் பேசிப் பழகாத... (அவள் குரல் லேசாக உடைந்து ஒலித்தது)

*****

ஹேய் ராசு என்னடா பைக் புதுசா இருக்கு

புதுசல்லாம் இல்லீடா அய்யன் இன்னிக்கு வேலைக்கு போவல அதான் நான் தூக்கிட்டு வந்துட்டேன்

அப்ப சரி இன்னிக்கு எதுனா படத்துக்கு போயிடலாமா... மத்தியானம் எல்லாம் ப்ராக்டிகல்ஸ்தான் 2 மணிக்கு அப்படியே நழுவிடுவோம் என்ன சொல்ற... ஹேய் வித்யா நம்ம ராசு பைக்-க பார்த்தியா

என்ன சார் புதுசா... கலக்கறீங்க நமக்கு கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா

அதெல்லாம் ஒண்ணும் கிடைக்காது உங்க தேர்லயே வாங்க... போய் ஒரு படத்த பார்த்துட்டு வருவோம்

(பொண்ணுங்கல்லாம் பின்னாடி வர்றாங்கன்ற மிதப்புல, பேருந்து ஒன்றை முந்தலாமென்று முயற்சிக்கையில் எதிர்த்து வந்த வண்டியில் மோதி... வித்யா உட்பட எல்லாரும் ரத்தம் குடுத்து காப்பாத்தி... உடம்பு சரியாகட்டும் மிச்சத்த வந்து சொல்றேன்!)

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3

7 comments:

Anu said...

idhukkuthan..class cut adikka koodhadungradhu..

ILA (a) இளா said...

நல்லா இருக்குங்க. தெலுங்குபாளையத்துக்காரர் மாதிரி சொல்லனும்னா "ஜாலியாவும் இருந்துக்கோ, சாக்கிரதையாவும் இருந்துக்கோ"

ராசுக்குட்டி said...

அனிதா -> க்ளாஸ் கட் பண்ணக்கூடாது சரி... ஆபீஸ்???

இளா -> மிகச்சரி... ஆனா அந்த ஃஜூவுல ஒண்ணும் தெரியாது!

Anonymous said...

ராசு... சீக்கிரமே நலமுடன் திரும்புங்கள், அடுத்த பாகத்திற்கு ஆவலாய் உள்ளோம்

Anonymous said...

முதல் பாகத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா

அடுத்தடுத்த பாகங்களில் விளக்குவீகளாயிருக்கும்!... தொடர்ந்து வருகிறேன்!

நாமக்கல் சிபி said...

முதல் பாகத்தைவிட இது அருமையாக இருக்கிறது. போட்டிக்கு இன்னும் வெயிட்டா வரும்னு எதிர்பார்க்கிறேன் ;)

அனிதா பவன்குமார்,
உங்கள் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ;)

கிளாஸ் கட்டடித்து படத்திற்கு செல்லவில்லை என்றால் காலேஜ் படிப்பதே வேஸ்ட்

ராசுக்குட்டி said...

வேணாம்... அழுதுருவேன்!

ஒரே கதைதான்... ரொம்ப பெருசா இருக்கேன்னு 4/5 பாகமா பிரிச்சா இப்டியா சோதிக்கறது...

சுதாகர், நிலவு நண்பி, வெட்டிப்பயல் தொடர்ந்து படியுங்கள்... நன்றி!