Monday, January 29, 2007

60 : மீண்டும் ராசுக்குட்டி

Photobucket - Video and Image Hosting

வாரான்... வர்றான் வர்றான்ல... வாரான் வர்றான் வர்றான்ல....

என்னவே கோகோ பாட்டும் கூத்தும் பலமா இருக்கு... என்ன விசேஷம்!

வந்துட்டான்... வந்துட்டான்... வந்துட்டான்யா, அட அண்ணாச்சி... நீங்களா? என்ன ஒங்கள பாத்தே பல காலம் ஆச்சுதே எங்க தூர தொல எங்கயும் போயிட்டியளோ

ஏது இல்லாட்டியும் கொண்டுபோயி வுட்டு வந்துருவ போலருக்குதே... வேற வேற வேலைகள்லாம் வந்து சேந்துருச்சு பாத்துக்க, நம்மளால இந்த கட கண்ணிக்கு வந்து உன்ன இன்னும் நம்ம மக்களல்லாம் பாக்க முடியாம போயிட்டு

அது சரி இப்பவாவது வந்திகளே... இங்க பொங்கல் திருவிழா அது இதுன்னு அமர்க்களப்பட்டு போச்சு போங்க...

அதாண்டே நேர ஒன்ன தேடி வந்தேன்... நீதான் எல்லார் கூடயும் சங்காத்தம் வச்சுருப்பியே... என்ன விஷயம், என்ன விசேஷம்னு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்...

ஆமா, ஆச்சு ஆறேழு! அட நீங்க வேற அண்ணாச்சி, எல்லாம் வழமை மாறாமத்தான் போயிக்கிட்டு இருக்கு... நீங்க இப்படியே கதைய கேட்டுக்கிட்டு போயிக்கிட்டிருந்தா என்ன பண்றது... நீரும் ஏதாச்சும் எழுதுமே...

பின்ன அதுக்குத்தாம்ல வந்துருக்கேன்... காதல் மாசம் வேற வருதில்ல அதுனால கவுஜ கத கட்டுரைன்னு எதயாச்சும் எழுதுவோம் காதல பத்தின்னுதான் வந்திருக்கேன்

காதலா... ஹி..ஹி... அண்ணாச்சி என்ன கோட்டி முத்திப் பிடிச்சி போல இருக்கு... காதலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்னேன்!

அடப்போடா பொடிமட்டை.. நம்ம என்ன பா.விஜய், நா.முத்துக்குமார் மாதிரியா ஃபீல் பண்ணப் போறோம் ஏதோ முந்திலாம் மாசத்துக்கு ஒரு தலைப்பு இருக்கும் எதயாச்சும் எழுதணும்னு எழுதுவோம்... இப்பல்லாம் அந்த மாதிரி இல்லல்லா... அதுனால இப்போதைக்கு அதுவும் இந்த மன்மத மாசத்துக்கு ஏத்தா மாதிரி எதயாச்சும் கிறுக்கி வைப்போம்

என்ன மயினிய கியினிய கண்டுட்டீரா, காதல் மாசம்... மன்மத மாசம்னு பேச்செல்லாம் ஒரு சைஸா இருக்கே... எது இந்த பிப்ருவரியத்தான் மன்மத மாசம்னு சொல்லுதீகளா... எதுக்கு இந்த "வாலாட்ன டேய்"னு ஒண்ணு வருதே அதுனாலயா

வாலாட்ன, டேய் ஒட்ட நறுக்கிப் புடுவேன் ஆமாம்... அது "வாலண்டைன்ஸ் டே". அது மட்டுமில்லடே பொதுவா தை மாசில தான் நெறய கல்யாண காரியம் நடக்கும். ஏன்னா கார்த்திகை நெறய விரதமிருக்கிற மாசம் அப்புறம் பொதுவா மார்கழி மாசம் சுண்டல் சாப்டறதயும் பஜன பண்றதயும் தவுத்து ஒண்ணும் நடக்காது. அப்புறம் பங்குனி சித்திரைலயும் அவ்ளோ விரும்பி வைக்க மாட்டாவ... அதுனால இத விட்டா வைகாசிதாண்டான்னு நெருக்கி கிருக்கி தை, மாசில வச்சுருவாவ பொறவும் சம்சாரிக கைல அப்போதான் கொஞ்சமாச்சும் காசு செழிப்பா பொரளும் அதுனால வீட்டாளுக நல்ல செலவு வைக்காட்டி மனுசன் கெட்ட செலவு இழுத்துட்டு வந்துருவாருன்னு... கல்யாணம் காதுகுத்துன்னு... எங்க பாத்தாலும் பொங்கப் பானையா இருக்கும்! இந்த தை, மாசி ரெண்டுமே இருக்ற மாசம் இங்கிலீஸ்ல பிப்ருவரி... பத்தும் பத்தாதக்கு "வாலாட்ன டேய்"-ம் சேந்துகிச்சா அதான் இதுக்குப் பேரு மன்மத மாசம்.

அடேங்கப்பா எனக்கு கண்ண சொழட்டுது... தை மாசம் விசேஷமான மாசம் கேள்விப் பட்டுருக்கேன் மாசியுமா...

சரியாப் போச்சு போ... "மாசி மாசம்தான்... கெட்டி மேள தாளந்தான்னு" தலைவர் பாட்டு ஒண்ணு இருக்கில்லடே

அட ஆமாம், நமக்கு "மாசி மாசம் ஆளான பொண்ணு..."ன்ற தலைவர் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது

ஒஞ்சேட்டைல ஊர ரெண்டாக்கிட்டுத்தாம்ல ஓய்வ நீ... சரி எக்கேடு கெட்டுப் போ... ஆனா நாளைலேர்ந்து பதிவா வந்துரு... தெனேய்க்கும் எதுனா சங்கதிய போட்டு தெளிச்சுப் புடுவோம்

பதிவ பதிவா பதிஞ்சா பதிவா வந்துப்புடுவோம்!

அம்புட்டுதான் இப்பதைக்கு, வ்வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா!

Monday, January 01, 2007

59 : இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Photobucket - Video and Image Hosting

அனைத்துலக வலைப்பூ நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

2007 எல்லா வகையிலும் வெற்றிகரமான, இனிய வருடமாக மலரட்டும்.