Friday, September 15, 2006

39 : இட்லி வடையும் போளியும்!

Photobucket - Video and Image Hosting

ஏவ்...

என்னண்ணே இன்னிக்கு சாப்பாடு ரொம்ப பலமோ

அடடே கோகோ என்னப்பா ரொம்ப நாளா ஆள காங்கலயே... எங்கடே போய்ட்ட

போட்டிக்கு நீங்க எழுதுன தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கதைய படிச்சனா, எங்க நம்மள கூப்ட்டு பிரச்சார பீரங்கின்னு சொல்லி மைக்-க கைல குடுத்துருவீகளோன்னுதான் இந்த பக்கமே வாரதில்ல

உனக்கு அந்த நொம்பளமே வேணாம்ல இந்த தடவ நம்ம படைப்பு சும்மா சம்பிரதாயத்துக்குதான், நம்ம நண்பர்கள் எல்லாம் சூப்பரா எழுதுதாவ அதுனால அவுகளுக்கு ஓட்டப் போட்டுட்டு ஒதுங்கிரணும்னு இருக்கேன்

அடேங்கப்பா... தாராள பிரபு... அது சரி சட்டையெல்லாம் நெய் மணக்குதே என்னவே சாப்ட்டீரு

அட வாசனை புடிச்சிகிட்டேதான் இந்த பக்கம் வந்தியாக்கும்... இன்னிக்கு நம்ம வீட்ல விஷேசம்

வீட்ல விசேஷமா... உங்களுக்கு எப்பண்ணே கல்யாணம் ஆச்சு

அட முந்திரிக் கொட்டைக்கு முந்திப் பொறந்தவனே... ஒரு விஷயத்த முழுசா கேக்குதியா பாரு

சரி சரி கோவிக்காம சொல்லுங்கண்ணே

நம்ம நண்பர்கள் ரெண்டு பேர் சீக்கிரமே அப்பா ஆகப் போறாய்ங்கடே அதுனால அவுகளயும் அவுக வீட்லயும் கூப்ட்டு ஆனந்த் அம்மா இன்னிக்கு விருந்து வச்சாங்க

ஓ நெல்லுக்கு பாயற நீர் அப்படியே புல்லுக்கும் பாயற மாதிரி...

ஆமாண்டே அதிகப் பிரசங்கி... ஏதோ ஏழு வகையான சாதம் செஞ்சு வளைகாப்பு செய்வாகலாம்ல,

Photobucket - Video and Image Hostingஅந்த மாதிரி இவுக பதினோரு வகையான சாதம் செஞ்சு குடுக்கணும்னு ஆசப்பட்டு அசத்திப்புட்டாங்க

பதினோரு வகையா?... இவ்ளோ பெரிய ஏப்பம் வரும்போதே நினைச்சேன்

ஆமாம்டே சொல்தேன் கேளு
சர்க்கரைப் பொங்கல்
கல்கண்டு சாதம்
புளியோதரை
எலுமிச்சை சாதம்
தக்காளி சாதம்
புதினா சாதம்
எள்ளு சாதம்
வெண் பொங்கல்
மாங்காய் சாதம் - அவுக ஸ்பெஷல்
தேங்காய் சாதம்
தயிர் சாதம்

அடேங்கப்பா இவ்வளவுமா...

வாய மூடுடே... உள் நாக்கே தெரியுது... அதுமட்டுமில்லடே தேங்காய் போளி, அப்புறம் உளுந்த வடை இதெல்லாமும் செஞ்சு ஜமாய்ச்சுட்டாங்க

அடா அடா... நீங்க சொல்லும்போதே நாக்கு ஊறுதே...

இதுல எல்லா சாதமுமே தூள், அதுலயும் இந்த மாங்காய் சாதம்லாம் நான் மொதமுறையா சாப்பிடறேன், அப்புறம்டே இந்த போளில சில இடங்கள்ல மாவு அதிகமா இருக்கும், சில இடங்கள்ல பூரணம் அதிகமாகி பிஞ்சு போகும் ஆனா இவங்க பண்ணினதுல அளந்து வச்ச மாதிரி ஒரே சீரா...

போதும்ணே போதும்... வாங்க உங்க வீட்டுக்கு ஒரு நடை போய்ட்டு வந்துருவோம்

ம்... ஆசதோச அப்பள வடை... ஆங் வடைன்னதும் ஞாபகத்துக்கு வருது... இந்த இட்லி கூடெல்லாம் வைப்பாங்கல்லடே, அந்த உளுந்த வடைக்கு மிளகல்லாம் அரச்சு போட்டு அவ்வளவு முருகலா... அடடா அது ஒரு தனி சுவையா இருந்துச்சு... உளுந்த வடைல ஏண்டா நடுவுல ஓட்ட போடுறாங்கன்னு வருத்தப் பட வச்சுருச்சுன்னா பாத்துக்கயேன்

வேணாம்ணே என்ன ஏங்க வைக்கிறதுக்கே உங்களுக்கு வயித்த வலிக்க போகுது

போடா போடா இவரு பெரிய கடோத்கஜன் சொல்ற சாபம் பலிக்க போகுது... சரி உனக்காக ஒரு வாய்ப்பு, நம்ம பயலா போயிட்டியேன்றதுக்காக குடுக்கறேன். ரெண்டு கேள்வி, சரியா

கேளுங்க, கேட்டுப்பாருங்க... சொல்லி எப்படி கில்லி மாதிரி ஜெயிக்கிறேன்னு

ஒண்ணு, வளைகாப்பு எதுக்கு வைக்கிறாங்க
Photobucket - Video and Image Hosting
ப்பூ... இவ்ளோதானா, சொல்றேன்... அதுக்கு முன்னாடி ரெண்டாவது கேள்வியவும் கேட்ருங்க

சர்க்கரைப் பொங்கல்ல தட்டுப்படற முந்திரி பருப்புக்கும் தேங்காய் சாதத்துல தட்டுப்படற முந்திரி பருப்புக்கும் இடைல இருக்ற ஆறு வித்தியாசங்கள சரியாச் சொல்லு உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்

ஆறு வித்தியாசம் நெசமா இருக்கு?... சொல்லிபுட்டா கூட்டிட்டு போகணும்னே
எல்லாம் கூட்டிட்டு போறண்டா... போ போய் கொஞ்சம் தள்ளி நின்னு
யோசனை பண்ணு... உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டும்பாய்ங்க, அண்ணன் அப்படியே ஒரு பலத்த தூக்கத்த போட்டுட்டு வந்தர்றேன்

அதுவரைக்கும் வ்வ்வ்வர்ர்ட்ட்ட்டா!

14 comments:

Anonymous said...

யோவ் இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல... சாப்ட்டு வந்ததும் அதுவுமா மெஸ் சாப்பாட சபிக்க வச்சுட்டியேய்யா!

துளசி கோபால் said...

இன்னிக்குப் பார்த்த மொதப் பதிவு.
சோத்து மூஞ்சுலே முழிச்சிருக்கேன்:-))))

படிக்கவே ஜோராய் இருந்துச்சு. அப்ப தின்னவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

வளைக்காப்பு ஏன் வைக்கிறாங்களா?

இப்படி 'புல்லுகள்' வந்து திங்கத்தான்:-)))))

நாமக்கல் சிபி said...

அநியாயத்துக்கு இப்படி ஆசைய கிளப்பிட்டீங்களே!!!

போளி நம்ம ஃபேவரைட் ஸ்வீட்...
ஆமாம் கோவைல ஒப்புட்டுனு தான சொல்லுவாங்க ;)

(சிபி இப்படித்தான் கறி கொழம்பை பத்தி ஒரு பதிவு போட்டாரு. இந்த மாதிரியே போட்டுட்டு இருந்தீங்கனா நான் ஊருக்கு புறப்பட்டு வந்துடுவன்னு நினைக்கிறேன்)

Anonymous said...

// கல்கண்டு சாதம்
// மாங்காய் சாதம் - அவுக ஸ்பெஷல்

// உளுந்த வடைல ஏண்டா நடுவுல ஓட்ட போடுறாங்கன்னு வருத்தப் பட வச்சுருச்சுன்னா பாத்துக்கயேன்
//

ராசுகுட்டி, நல்லா சாப்பிட்டுருக்கிங்க போல, ரசிச்சு எழுதியிருக்கீங்க.. :-)

இந்த கல்கண்டு சாதம், மாங்காய் சாதம் எல்லாம் எப்படி செய்யனும்? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..

ஆவி அம்மணி said...

//இந்த கல்கண்டு சாதம், மாங்காய் சாதம் எல்லாம் எப்படி செய்யனும்? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..//

முரட்டுக் காளை,
அறுசுவைக்குன்னே தளம்ஒண்ணு இருக்கு. இங்கே போய்ப் பாருங்க!

Anonymous said...

//அறுசுவைக்குன்னே தளம் ஒண்ணு இருக்கு. இங்கே போய்ப் பாருங்க!
//

நன்றி ஆவி அவர்களே.. நீங்க கொடுத்த தளம் அருமை. ஆமா, நீங்க எங்க அந்தப் பக்கமெல்லாம் போய்ட்டு இருக்கீங்க? சரியான சாப்பாட்டு ஆவியா இருப்பீங்களோ?

கதிர் said...

ராஸ்குட்டி,

மோட்டா சோறு தின்னுட்டு காய்ஞ்சி கிடக்கேன்!

ஏய்யா இந்த மாதிரி பதிவு போட்டு வெறுப்பேத்தறிங்க! சாப்பிட்ட ருசிய விட சொல்றத ருசியா சொல்லணும்னு ஒரு எண்ணம்?

ராசுக்குட்டி said...

அனானி -> சீக்கிரமே நாங்களே சமச்சு சாப்புடுற நிலை வரும்போது அதப் பத்தி ஒரு பதிவு போடறேன்...மெஸ் சாப்பாட புகழ்ந்துக்கலாம் அப்போ!

அ.ஆ -> (அன்பே ஆருயிரே அல்ல!) சின்னப்புள்ளைங்கெல்லாம் வர்ற இடம்... கொஞ்சம் முகத்துக்கு மேக்கப் போட்டுட்டு வரக் கூடாதா?

ராசுக்குட்டி said...

துளசியக்கா, தப்பில்லை! சாப்ட்ட எங்களுக்கும் ஜோராத்தான் இருந்துச்சு

ஆமா பாலாஜி, கோவையில் ஒப்புட்டுன்னுதான் சொல்வோம், ஆனா இவங்க போளின்னுதான் சொல்லிக் குடுத்தாங்க

முரட்டுக்காளைன்னு பேர் வச்சுட்டு என்னய்யா ரெசிப்பிலாம் கேட்டுகிட்டு.. கல்யாண ஆசை வந்துருச்சா?

ராசுக்குட்டி said...

சரிதான் தம்பி...நெறயப் பேரு நல்லா சாப்பிடுவாங்க ஆனா செஞ்சவங்கள பாராட்டி ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க... அவ்ளோ கஷ்டப்பட்டு செய்றப்ப ஒரு வார்த்தை பாராட்டி சொல்வோம்னுதான்!

மோட்டா சாதம் சாப்டா உடம்புக்கு நல்லதுதான்!

வல்லிசிம்ஹன் said...

வாலைகாப்பு எதுக்கு செய்யறாங்க?
சூல் காப்புனு பேர் வச்சு வரப்போற பாப்பாவுக்கும் அம்மாவுக்கும் வெள்ளி ,தங்கம்னு ஒரு கம்பியாலே வளவாப் போடுவாங்க. இரும்பும் கலந்து இருக்கும். கண்ணாடி வளையல் போடறது கர்ப்பிணிப் பெண் மேல் கவனம் போகாமல் கைமேல் கவனம் திருப்பவதற்கும், அவங்க வராங்கனு தெரியறத்துக்கு, மத்தவங்க அவங்க மேல இடிக்காம இருக்கறதுக்கும் தான்.
12 படம் காணோமெ?

ராசுக்குட்டி said...

தேசிபண்டிட் எனக்கு புதிது! நன்றி துளசி என்னை தேசிபண்டிட்டுக்கும் எனக்கு தேசிபண்டிட்டையும் அறிமுகப்படுத்தியதற்கு!

ராசுக்குட்டி said...

கூகுளாண்டவரிடம் அப்போதைக்கு 12 படமில்ல, மேலும் மக்கள ரொம்ப வெறுப்பேத்த வேணாமேன்னுதான். வளைகாப்பை பற்றி நல்ல தகவல்கள் நிறைய சொல்லியிருக்கிறீர்கள் நன்றி... சம்பந்தப்பட்டவங்க கிட்ட சொல்லிடறேன்!

வருகைக்கும் நல்ல தகவல்களுக்கும் நன்றி வள்ளி!

ILA (a) இளா said...
This comment has been removed by a blog administrator.