Friday, September 08, 2006

35 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3

Photobucket - Video and Image Hosting

முந்தைய பாகத்திற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2

ராசு இந்தாடா... இந்த புக்-ல இருக்கற எல்லா கணக்கையும் போட்டு பார்த்துரு... இதுல இருந்துதான் எல்லாக் கேள்வியும் வருதாம். மொத சுத்து மட்டும் தாண்டி வந்துருடா அப்புறம் நம்ம நண்பர் ஒருத்தர்தான் இந்த நேர்முகத் தேர்வெல்லாம் நடத்தறாரு... சொல்லி எதுனா பண்ணலாம்

ம்...சரிடா கதிர்... அப்புறம் ஒரு நூறு ருபாய் கேட்டுருந்தனே நாளைக்கு தாம்பரத்துல வேறொரு நேர்முகத் தேர்வு இருக்கு

என் கிட்ட அம்பதுதான் இருக்கு... இந்தா வச்சுக்க சரி நாளைக்கு நல்லதா டிரெஸ் பண்ணிட்டு போ... போன தடவ மாதிரி கருப்பா கட்டம் போட்ட சட்டைலாம் போட்டுட்டு போவாதா

இல்லடா அங்க தேச்சு வச்சுருக்கேன் பாரு வெள்ளை-ல கோடு போட்டு... அப்புறம் சந்துரு கிட்ட 'டை' கேட்ருக்கேன்

ம்... ஓ.கே ஆனா 'ஆப்டிட்யூட் டெஸ்ட்'க்கே 'டை'யோட போய் உக்காராத... மடிச்சு சட்டை பைக்குள்ள வச்சுக்க... நான் தூங்கப் போறேன் அப்புறம் நாளைக்கு 'ஆல் தி பெஸ்ட்'
:
:
:
ஹேய் ராசு வாடா நான் உன்ன தாம்பரத்துல வுட்டர்றேன்

நான் போய்க்குவேண்டா சந்துரு... நீ ஆபீஸ் போ... தாம்பரம் போய்ட்டு போகணும்னா உனக்கு பயங்கர சுத்து

அதெல்லாம் பரவாயில்ல வா வா வந்து உக்காரு சீக்கிரம்... எல்லாம் எடுத்துகிட்டில்ல

ம்...

ஓ.கே டா... டெஸ்ட் முடிச்சிட்டு என்ன ஃபோன்ல கூப்பிடு... ஆல் த பெஸ்ட்...ஹே ஏண்டா ஒரு மாதிரி இருக்க

இல்லடா அபீஸ பாத்தாலே பயமா இருக்கு... சரி சரி நீ கெளம்பு நான் பாத்துக்கறேன்
:
:
:
ராசு...இங்க...ம்... டெஸ்ட் எப்படி பண்ணின

சந்துரு இன்னும் என்ன இங்க இருக்க... ஆபீஸ் போகலயா

இல்லடா ஃபோன் பண்ணி லீவ் சொல்லிட்டேன்... நீ வேற ஒரு மாதிரியா போனியா உள்ளாற... சரி டெஸ்ட் எப்படி பண்ணின

(நன்றாக செய்திருக்கிறேன் என்று தலையாட்டத்தான் முடிந்தது... உணர்ச்சிவயப்படும்பொழுது வார்த்தைகள் கரைந்து போய் விடுகின்றன... அன்று முழுவதும் என்னுடன் இருந்தான் சந்துரு. தொழில்நுட்பத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று கடைசி கட்டம் வரை உடனிருந்து உற்சாகமூட்டினான். பொது அறிவு வினாக்கள், பல்வேறு தேர்வுகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சம்பளமாக எவ்வளவு கேட்பதென்பது வரை பல விஷய நுணுக்கங்கள் சொல்லித்தந்தான்.

நான் தேர்வானதிற்கு அவர்களிருவரும் எனக்கு விருந்தளித்து கொண்டாடினார்கள்... கைதூக்கி விட நண்பர்களிருக்கையில் எனக்கென்ன மனக்கவலை)


கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4

4 comments:

Anonymous said...

என்னது மூன்றுமே ஒரே கதையா... அடுத்த பாகத்தை சீக்கிரமே வெளியிடுங்கள்...
ரௌடி மாணவன்
ரஃப் & டஃப் காதலன்
நல்ல நட்பு

அடுத்து என்ன... நான் எதிர்பார்த்திருப்பதை தனியே மடலிடுகிறேன்! பார்க்கலாம் பக்கத்தில் வருகிறேனா என்று

ராசுக்குட்டி said...

நிலவு நண்பி... நன்றி தொடர்ந்து வாசிப்பதற்கு
நீங்கள் மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்...

இன்று மாலையே அடுத்த பாகத்தை வெளியிட முயற்சிக்கிறேன்!

Anu said...

ELLAME okay..
ana andha hero peru why raasu..?

ராசுக்குட்டி said...

ஏன்னா அவுரு ஈரோ... அதான்!
hi hi...