Friday, September 08, 2006

36 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4

Photobucket - Video and Image Hosting

முந்தைய பாகங்களிற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3



ஹலோ வித்யா-வா...
ஆமா நேத்துதான் சென்னையில இருந்து வந்தேன்...
ம் தேங்க்ஸ்...
நாலு மாசம் ஆச்சு...
எல்லாம் சந்துருக்கும் கதிருக்கும்தான் நன்றி சொல்லணும்...
ட்ரீட் தானே... இன்னிக்கு சாயங்காலம் தந்தா போச்சு...
இல்லல்ல சனி ஞாயிறு ரெண்டு நாள்தான் லீவு..
5 மணிக்கு 'க்ளேசியர்ஸ்' போலாம் அங்க இருந்து கொஞ்ச நேரம் பேசி இருந்துட்டு நான் அப்படியே சென்னை கிளம்பிக்கறேன்
:
:
:
ஹேய் ராஜ்... எப்படி இருக்க... என்னடா சென்னை போனதும் பயங்கர ஸ்மார்ட் ஆயிட்ட

போதும் போதும் ஓவரா புகழாத... ஆனா நீ இன்னும் அப்படியே உவ்வேக்-ன்னுதான் இருக்க

அய்யே...நெனப்புதான் சரி எங்க பேக் எதுவும் காணோம்

ஏறுனா காந்திபுரம்...இறங்குனா தாம்பரம் ரெண்டு நாள் வந்துட்டு போறதுல பொட்டி படுக்கை எல்லாம் எதுக்கு... நம்மள்லாம் சுதந்திரப் பறவை

ரொம்ப பேசற நீ சரி சரி எனக்கு ஒரு வெனிலா சொல்லிடு...
:
:
நீ என்ன சொன்ன...


அல்மண்ட் சாக்கோலேட்

நீ எப்பவும் பட்டர்ஸ்காட்ச் தானே சொல்வ...

சொல்வேன், அப்புறம் நீ, ஒரு பொண்ண பக்கத்துல வச்சுகிட்டு ஸ்காட்ச் சாப்பிடலாமான்னு கலாசுவ எதுக்கு வம்பு

அடேங்கப்பா எங்க பேச்சுக்கெல்லாம் எப்ப நீ பயப்பட ஆரம்பிச்ச... சரி நீ வேலை செய்யற இடத்துல பொண்ணுங்கள்லாம் எப்படி...

அப்படியே இருந்துட்டாலும்... நம்ம ராசி எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதானே இருக்கும்...
:
:
:
சரி போலாமா

சார் கொஞ்சம் இங்க வாங்க...

வித்யா நீ முன்னாடி போய்ட்டு இரு... என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன்

சார் உங்க ஃஜிப் போடல

(ஆ... கொஞ்சம் மறைவான இடத்தில் நின்று கொஞ்ச நேரம் போராடினேன்... 500க்கு 3 ன்னு மட்டமான பேண்ட் வாங்கினா இதுதான் தொல்லை... காதல் கோட்டை கரண் வசனமெல்லாம் வேறு நினைவிற்கு வந்தது... மேலே இழுக்க இழுக்க பிரிந்தபடியேதான் இருந்தது இன்னிக்குன்னு பார்த்து ஷார்ட் ஷர்ட் வேறு... ஒருவாறு சமாளித்து... வித்யா பாத்துருக்க மாட்டாளே... கடவுளே!)

வா வித்யா போலாம்...

சரி நான் உன்ன பஸ் ஏத்திவிட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போயிக்கறேன்

இதுவேறயா... சரி சரி வா சீக்கிரம் லேட் ஆய்டுச்சு

இந்தா சாவி... நீ ஓட்டு... என் பின்னாடிதான் உட்கார மாட்டியே நீ

(இருட்டுதான் ஆனாலும் எவனாவது சிக்னல் கிட்ட வெளிச்சத்துல பாத்துட்டான்னா வம்பா போயிரும்... ஜிப் தான் இன்னும் சரியாகலையே)

இல்லல்ல நீயே ஓட்டு... நான் ஒண்ணும் MCP இல்லண்ணு நீ புரிஞ்சிக்கணுமே

சரிங்க சார்...(நக்கலா சொன்னாலா நார்மலா சொன்னாளான்னே தெரியலயே) பின்னால உக்காரு ஆனா கொஞ்சம் தள்ளியே உக்காரு (தெரிஞ்சிருச்சோ)
:
:
:
ஏய் ஏய் இங்க ஏன் நிறுத்தற...பெட்ரோல் தீர்ந்து போச்சா என்ன

முதல்ல இறங்கு, போ உள்ள போய் நல்லதா ஒரு பேண்ட் எடுத்துட்டு வா... இப்டியே சென்னை வரை எப்படி போவ
(அடிப்பாவி தெரிஞ்சேதானா?)



கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 5

6 comments:

பழூர் கார்த்தி said...

வித்தியாசமாக தொடர்கதையுடன் வந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் !!

***

மெல்லிய கிண்டல் தொணி கதை முழுவதும் கூடவே பயணிப்பதை ரசித்தேன் !!

***

"கைதூக்கி விட நண்பர்களிருக்கையில் எனக்கென்ன மனக்கவலை" - என்ன செண்டிமெண்டா :-))

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
இங்கே பாருங்கள் !!

***

இந்த தொடர்கதைக்கும் விமர்சனம் எழுதுகிறேன், கதை இத்தோடு முடிந்து விட்டதா (அ) இன்னும் இருக்கிறதா ??

நாமக்கல் சிபி said...

சூப்பர்....

இதெல்லாம் உண்மைலே நடந்ததா... இல்ல கதையா???

ராசுக்குட்டி said...

சோம்பேறி பையன் -> வருகைக்கு நன்றி... உங்கள் விமர்சனங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

செண்டிமெண்ட்... வாழ்க்கையில் இருக்கும் அளவுக்கே வந்திருக்கிறது கதையில்

பாலாஜி -> நன்றி...உண்மை பாதி கற்பனை பாதி கலந்து செய்த கலவை!

கார்த்திக் பிரபு said...

ellathaiyum vida idhu nalla iruku

ராசுக்குட்டி said...

நன்றி கார்த்திக்!

Anonymous said...

Karumam