Tuesday, September 26, 2006

42 : எங்ககிட்ட மட்டும் ஏண்டா? - சிங்கை பாண்டி!

Photobucket - Video and Image Hosting
(ஆனந்த விகடனில் 'பராக் பாண்டி' படிப்பீர்களா? எனக்கு ரொம்ப பிடித்த பகுதி அது. சும்மாகாச்சுக்கு அதை பின்பற்றி...
சிங்கப்பூர பத்தி நல்ல விஷயமா நானூறு கூட சொல்லலாம் இப்போதைக்கு நக்கலா ஒரு நாலு!)


ஜிம்-ல போய் வெயிட்டடிச்சுகிட்டு இருக்கும்போது, அதிசயமா நம்மள பாத்து ஒரு ஃபிகர் சிரிச்சு வைக்கும், ஒரு 10 கிலோ வெயிட் அதிகமா போட்டு இன்னோருக்கா எக்ஸர்சைஸ் பண்ணிட்டு கெத்தா ஒரு பார்வை பாக்ற நேரத்துல, எக்ஸ்கியூஸ் மி-ன்னுட்டு அசால்ட்டா ஒரு 50-கிலோ போட்டு ஏண்டா எங்க பர்ஸனாலிட்டில புல்டோசர் ஏத்தறீங்க தண்டால் கையனுங்களா?

ரயில்லயோ பஸ்லயோ, பக்கத்துல உக்காந்துருக்காங்களேன்னு சினேகமா ஒரு சிரிப்பு சிரிச்சு வைச்சா, ஏதோ தீவிரவாதி கஞ்சாவுக்கு கங்கு கேட்டா மாதிரி ஏண்டாப்பா அப்படி ஒரு
ஜெர்க் ஆகறீங்க தனிக்காட்டு தண்டப் பசங்களா?

வேகாத வெயில்ல, இன்னும் கொஞ்சம் கறுத்துருவமோன்னு நொந்துகிட்டே சிக்னல்ல நிக்ற பத்து செகண்ட் கேப்-ல பச்சாக்-னு முத்தம் குடுத்துக்கிட்டிருக்கிங்களே... அப்படியென்னடா அவசரம் பபிள்-கம் வாயனுங்களா?

காலியா வர்ற லிப்ட்-ல நாங்க ஏறிட்டா, அவசரமாவே இருந்தாலும் அடுத்த லிப்ட்-க்காக காத்துகிட்டு இருக்கிங்களே? சிங்கை வாழ் குட்டி,ஆண்ட்டி,பாட்டிங்களே... பத்திரிக்கை-ல மட்டும் வந்தா போதுமா சீன-இந்திய நல்லுறவு!


(நமக்கு தெரிஞ்சவங்க நெறய பேரு நம்ம பக்கத்துக்கு வர்றதுனால இப்போதைக்கு ஜூட்... மிச்சத்த அனானியா பின்னூட்டம் போட்டுக்கலாம் ?! வாட் சே யூ!)

15 comments:

Anonymous said...

அனானியா எல்லாம் வேண்டாம் ராசு, நீயே சிரமத்தைப் பார்க்காம உள்ளே ஆஜராகிடு...

மேற்கத்தியம் தான் நாகரீகம் எனத் திரியும் இவர்களிடம் (வேலை தேடி வெளிநாடு வரும் ) நம் இந்தியர்கள் படும் பாடு தான் மோசம்.

இவர்கள் எல்லாம் காதில் iPodம் மனதில் தேவையற்ற ஐயப்பாடும் கொன்டவர்கள்...

கதிர் said...

ஜொள்ளுப்பாண்டி லெவல்ல ஓவரா காதுல புகை வருது போல!!

எல்லா ஊர்லயும் பொண்ணுங்க ஒரே மாதிரிதானா பாஸ்??!!

Anonymous said...

ஏன் சீன மக்களைச் சுட்டுகிறீர்கள். சிங்கப்பூர் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டும் கெட்டான்களைப் பார்த்தீர்களா. இந்தியக் கலாச்சாரத்திலும் ஒட்ட முடியாமல், சீனக் கலாச்சாரத்திலும் ஒட்ட முடியாமல் அவர்கள் அடிக்கும் கூத்து அநியாயமோ அநியாயம். சேலை கட்டத்தெரியாமல் கட்டிக்கொண்டு தமிழ் பேச தெரியாமல் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு கோயிலில் இவர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும்.

இருக்கிற இந்தியனையெல்லாம் வெளியேற்றிவிட்டால் இவர்கள் படப்போகும் அவஸ்தையை கற்பனை செய்து பார்ப்பதில் இருக்கிற சுகமே அலாதி தான்.

ராசுக்குட்டி said...

முரட்டுக்காளை, உண்மைதான்! ஆனா முரட்டுக்காளையான உங்ககிட்ட பாச்சா பலிச்சிருக்காதே?!

ராசுக்குட்டி said...

பாஸ்-ன்னு பாசமா கூப்படறயே தம்ப்பி! புகையான்னா கேக்கற நல்லா கன்னாபின்னான்னு பேசிறப் போறேன், எல்லா ஊர் பொண்ணுங்களயும் பத்தி சொல்ற அளவுக்கு அனுபவம் இல்லியப்பா தம்பி!

அனானி அண்ணா, நம்மள சிக்கல்ல மாட்டி விட்ருவிங்க போல இருக்கே, ஆனா நீவீர் சொல்வது சற்றேறக்குறைய உண்மைதான்!

Anonymous said...

//முரட்டுக்காளையான உங்ககிட்ட பாச்சா பலிச்சிருக்காதே?!

நீங்க வேற..

//ஏண்டாப்பா அப்படி ஒரு
ஜெர்க் ஆகறீங்க //
//அவசரமாவே இருந்தாலும் அடுத்த லிப்ட்-க்காக காத்துகிட்டு இருக்கிங்களே?//

ஒரு விஷயத்தை கவனிச்சிங்கன்னா தெரியும்.. இது எல்லாமே பய உணர்ச்சிதான்னு.. தெரியாத மக்கள் கிட்டே எதைப்பார்த்தாலும் பயம்.. அதனாலேயே பழக பயப்படுறாங்க.

ராசுக்குட்டி said...

//தெரியாத மக்கள் கிட்டே எதைப்பார்த்தாலும் பயம்.. அதனாலேயே பழக பயப்படுறாங்க. //
இருக்கலாம், ஆனால் இதை நான் சீனாவில் கூட உணர்ந்ததில்லை... அங்கேயும் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம்தான் உள்ளது. மேலும் இங்கேயாவது மொழி என்பது ஒரு பெரிய பிரச்சனை இல்லை... அங்கே??
எனவேதான் நான் இதை இங்கே குறிப்பிட்டேன்.

வடுவூர் குமார் said...

அதான் ரயில் நிலையத்திலேயே போட்டிருக்காங்களே!!புதியவர்களுடன் லிப்டில் ஏற வேண்டாம் என்று.(அது குழந்தைகளுக்கு)
என்ன பண்ணுவது??யாரும் யாரையும் மாற்றமுடியாது.
ஏன்? நேற்று ரயிலில் செம ஷோ தான்,இத்தனக்கும் மாலை 6 மணிதான்.

ராசுக்குட்டி said...

//யாரும் யாரையும் மாற்றமுடியாது.//
சிங்கப்பூர்-ல இருந்துகிட்டு இத சொல்லலாமா குமார்... எப்படி இருந்த சிங்கை இப்போ எப்படி இருக்கு!

மற்றபடி ensoy!

நாமக்கல் சிபி said...

இங்க ஓரளவுக்கு அந்த பிரச்சனையெல்லாம் இல்லை...

நாமதான் கூட்டமா இருந்தா லிப்ட்ல ஏறாம அடுத்த லிப்ட்க்காக வெயிட் பண்ணிட்டு இருப்போம் ;)

ராசுக்குட்டி said...

வெட்டி -> அந்த அளவுக்கு அங்க படைபலம் ஜாஸ்தியா...ம் கலக்குங்க!

Anonymous said...

தமிழ்நாட்டைவிட சிங்கப்பூர் எவ்வளவோ மேல்.தமிழ்நாட்டில் மக்கள் கண்ட கண்ட இடங்களில் ஒன்னுக்கு போகிறார்களாமே!
அங்கு சென்று வந்த என் உறவினர் ஒருவர் நொந்துக்கிட்டு சொன்னார்.

ராசுக்குட்டி said...

//தமிழ்நாட்டில் மக்கள் கண்ட கண்ட இடங்களில் ஒன்னுக்கு போகிறார்களாமே!// என்னது எங்க கலாச்சாரத்தயே தப்பா பேசிட்டாங்களா?

அனானி-> சிக்-குன் குனியா, டெங்கு காய்ச்சலுக்கு அப்புறம் கொஞ்சம் சுத்த உணர்வு வந்திருக்கிறது... அத அப்படியே மெய்ண்டெயின் பண்ணிடுவோம்

Anonymous said...

sila Singapore India-yarkal undu.. anna enge ennaku kitaitha intha anupavam..Nan vandhu 1 mathathil velai kitaithu vittathu.. enkalukku 3 years -l 1 child..child care center-l serthu vittom.. 4 natkalil avan sapitamal, aluthu.. pavam .. enna seivathu theriyavillai.. en pakkathu family.. singapore indian.. vittil 6 per.. antha vittu amma sonnaga.. nanga unga kolanthai parthu kolkirom.. neenga vellaikku ponga.. oru 2 mathathil en ammavaim singapore alaithu kotten.. nan vandhu 1year mudithu vittathu..eppavum en child ange than irrupan.. entha ethir parppum illamal engaluku help panninaga.. nan rent kku irrukum vittil en child -n b'day celebrate panna kottathunnu sollittanga..(Singapore Indian) anna enga neighbour neenga enga vittil b'day celebrate pannunga.. eppadi nandri solvathu atha ullangalukku.. en kolanthai mel avarkaluku romba priyam..

Anonymous said...

We are thankful to her family romba kadamai pattu irrukom...