Tuesday, September 19, 2006

40 : இன்னும் இருக்கிறது ஆகாயம்!

Photobucket - Video and Image Hosting

விண்ணிருந்து நட்சத்திரமொன்று உதிர்ந்த கணத்தில்
கண் மூடி நானுன்னை யாசித்தேன்

மேகமிடித்து மழை பொழிந்த தினத்தில்
மின்னல் வெட்ட, உன்னை நான் சந்தித்தேன்

மெரீனா... ஒண்ணு வாங்குங்க"
என் வாழ்வின் பௌர்ணமி அன்றுதான்

கடலலை கால் தொட கதையளக்கையில்
என் வானெங்கும் நீந்திக் கொண்டிருந்தன
அன்னப் பட்சிகள்

"என்னைப் பிடிச்சிருக்கா" நீ கேட்ட விநாடி
வானவில்லொன்று வெடித்துச் சிதறி
விண்ணெங்கும் ரங்கோலி!

தயங்கியவாறே நானுன்னை தீண்ட
முத்தமிட்டுக் கொண்டிருந்தன
வானும் கடலும், தூரத்தில்

"அருந்ததி தெரியறதா பாருங்கோ"
உன் விரலழுத்தி சிரித்தேன், சிரித்தோம்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
நமக்கான தேனிலவை சுமந்துகொண்டு!

- நன்றி தமிழ்ச்சங்கம்

9 comments:

ILA (a) இளா said...

//மெரீனா... ஒண்ணு வாங்குங்க//
//அருந்ததி தெரியறதா பாருங்கோ"//

இந்த கவிதையில் எனக்கு பிடித்தவை!

போட்டிக்கான வாழ்த்துக்கள்.

ராசுக்குட்டி said...

நன்றி அபி -> அங்கேயே அலசி காயப் போட்டிருந்தீர்கள், வாழ்த்துக்களுக்கும் நன்றி

வாழ்த்துக்களுக்கு நன்றி இளா -> ஆனா நீங்க தேர்ந்தெடுத்த வரிகள் வேறேதோ சொல்லுதே... போற போக்கு சரியில்லையே... சங்கத்துல கவனிக்க சொல்றேன்!

Anonymous said...

I think I read it some where in tamizsangam!

ராசுக்குட்டி said...

ஓ இப்படி வேற கிளம்பிருக்காய்ங்களா?

Anony, I had submitted for a competition, and it was published in tamizsangam, now that its over I have re-published it here so that ppl who regularly vist (?!) my page can read it!

Anonymous said...

// இன்னும் இருக்கிறது ஆகாயம்
நமக்கான தேனிலவை சுமந்துகொண்டு!
//
மணம் முடித்து புதியதாய் வாழ்வைத் தொடங்கும் இள உள்ளங்களின் இனிய மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும் இந்த கவிதை வரிகள் அருமை.

அந்த இனிமை சற்றும் குறையாமல் கொண்டு செல்வதிலேயே இருக்கிறது வாழ்வின் இரகசியம். சரியா?

Prasanna Parameswaran said...

arumaiyaan kavidhai raasu! nalla ezhudiyirukeenga vetri pera vaazthukkal!

ராசுக்குட்டி said...

காளை -> //அந்த இனிமை சற்றும் குறையாமல் கொண்டு செல்வதிலேயே இருக்கிறது வாழ்வின் இரகசியம். சரியா? // புரியலயே ;-)

இந்தியதேவதையே -> நன்றி, சங்கத்திலும் பின்னூட்டமிட்டிருந்தீர்கள்தானே

Anonymous said...

Mr. Rasukuti,
I felt very happy to see our oor kalugumalai and your language. keep it up.
bala
(சற்றே மாற்றப்பட்டது)

ராசுக்குட்டி said...

வருகைக்கு நன்றி பாலா -> அடிக்கடி வாருங்கள், உங்கள் மடல் முகவரியை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாமே