Wednesday, September 06, 2006

33 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1


Photobucket - Video and Image Hosting


மச்சான் இந்த பிரின்சி ஓவர் ஆட்டம்டா

ஏன்டா என்னாச்சு

காட்டுக்குள்ளாற கொண்டு போய் காலேஜ கட்டிருவானுங்க, பஸ் பாஸ்லயும் கொள்ளை அடிப்பானுங்க, 5 நிமிஷம் வெயிட் பண்ணவும் மாட்டாரு இந்த டிரைவரு

ஏய் விஷயத்த சொல்லுடான்னா...இன்னாடா பஜன பண்ற

அதில்லட நம்ம இந்த பாலத்துல இருந்து காலேஜ் போறதுக்கு லிஃப்ட் எடுத்துதானே போவோம்... இனிமே அப்டிலாம் போகக்கூடாதாம்.

யார் சொன்னா...

பிரின்சிதான்... போயி பயோ-டெக் க்ளாஸ்-ல சொல்லிருக்கான்... நம்ம க்ளாஸ்ல சொல்லி இருந்தா அடி கிழிஞ்சுருக்கும்ல

ஏன் என்னவாம்...

இந்த ஷார்ப் மோட்டார்ஸ் மானேஜர் இருக்காரில்ல அவர் போட்டுக் குடுத்துதான் இப்டின்னு நம்ம கதிர் சொன்னாண்டா

டேய் அவரா, வழக்கமா நிறுத்தி லிஃப்ட் குடுப்பாரு நமக்கெல்லாம். நேத்தும்கூடி நிறுத்தி நம்ம பசங்கெல்லாம் ஏத்திட்டு போனாரே, ராசு நீ கூட நேத்து போனியேடா, அவர் ஏன் இப்படியெல்லாம் பண்ணப் போறாரு - இது சந்துரு.

நான் போனதுனாலதான் பிரச்னையே,

ராசு, என்ன சொல்ற

பின்ன என்ன, போன வாரம் ஒரு நாள் பஸ் கிளம்பிடுச்சு, நான் இங்கன காத்துகிட்டு இருக்கேன், அந்தாளு நிக்காம போய்ட்டான், மத்தியானம் அய்யன் கடைல ஒரு தம் போட்டுகிட்டு இருக்கும்போது வந்தாரு. ஏய்யா நிறுத்தாம போய்ட்ட அப்டின்னு கேட்டா அதுக்கு சொல்றான் நீ காலேஜ் பையன் மாதிரி டீசண்டா டக்-இன் பண்ணாம இருந்த... உன்ன எப்படி ஏத்திக்கறதுன்றான் வெறு....தி!

சரி அதுக்கு நேத்து நீ என்ன பண்ண

முந்தாநேத்து மழை பேஞ்சு இருந்துச்சுல்ல, ரோட்ல ஓரமா கொஞ்சம் சேறு இருந்துச்சு, நல்லா ஷூ நெறய அப்பிட்டு போய் கார்-ல ஏறி நாஸ்தி பண்ணிட்டேன்.

அடப்பாவி, உனக்கு ஏண்டா புத்தி இப்டிலாம் போகுது

அடிங், பிரின்ஸியே என்ன ஒரு கேள்வி கேக்க மாட்டான், இவன் யார்றா. ஏய் கதிரு இவந்தான் போட்டுக்குடுத்தானாடா நேத்து, உண்மைய சொல்லு, எம்பேரக்கீது சொன்னானா?

உம்பேரெல்லாம் சொல்லலிடா பொதுவா பசங்களுக்கு கொஞ்சம் ஒழுக்கம் சொல்லிக் குடுங்கன்னுட்டுருந்தான், விஷயத்த கேட்டதும் பிரின்ஸி இன்னும் கொஞ்ச நாளைக்கு யாருக்கும் லிஃப்ட் குடுக்காதீங்க, அப்பதான் பசங்களுக்கு புத்தி வரும்னு சொல்லிட்டு, லெக்சரர் எல்லார்க்கும் ஒரு அறிக்கையும் அனுப்பி வச்சுட்டாரு காலேஜ் பஸ்தான் வருதில்ல, அதனால் யாரும் பசங்களுக்கு லிப்ட் குடுக்காதீங்கன்னு

அப்படியா விஷயம், சரி டேய் நம்ம யாருன்னு அந்த பிரின்சிக்கு காமிப்போம்டா, BBA பசங்க எல்லாம் நம்ம பக்கம்தானே நிப்பானுங்க.

B.Com, Bio-Tech விட்டுடலாம், பூச்சிப் பசங்க.

மறுநாள் பிரின்சி அவரோட லொட லொடா வெஸ்பாவில் வர, பாலத்திலிருந்து 20 அடிக்கு ஒருவர் என கல்லூரிக்கு சற்று முன் வரை வரிசையாக நின்றிருந்த 50 பேரும் ஒவ்வொருவராக கேட்டோம், சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா!

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2

10 comments:

Anonymous said...

நல்ல நடை அடுத்தடுத்த பாகங்களையும் எதிர்பார்க்கிறேன்

Anonymous said...

சே ஒரு காலேஜ் பிரின்சிபால இப்டியா பண்றது...நல்லா சிரிச்சேன்யா

ILA (a) இளா said...

நல்ல நகைச்சுவை/லொல்லு. போட்டிக்கான வாழ்த்துக்கள்

ராசுக்குட்டி said...

சீக்கிரமே தருகிறேன் யாழ் -> நல்ல பெயர்!

நானும் நல்லவந்தானுங்கோ! -> நன்றி வருகைக்கு

Anonymous said...

கடைசியில் செய்தது வித்தியாசமான பாணி... நிறைய கல்லூரிகளை நிலைகுலைய வைக்கப் போகிறீர்கள்

நாமக்கல் சிபி said...

//மறுநாள் பிரின்சி அவரோட லொட லொடா வெஸ்பாவில் வர, பாலத்திலிருந்து 20 அடிக்கு ஒருவர் என கல்லூரிக்கு சற்று முன் வரை வரிசையாக நின்றிருந்த 50 பேரும் ஒவ்வொருவராக கேட்டோம், சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா!//

:-)))).
திட்டம் உங்களுதா?

சூப்பர்.

நாமக்கல் சிபி said...

சங்கத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது!
நல்ல நகைச்சுவைக்காக!

ராசுக்குட்டி said...

நன்றி இளா -> உங்களுடைய படைப்பும் அருமை... அலுவலக நிகழ்வுகளை வைத்தே நிறைய வருகிறதே... ur office must be a happening place!

நன்றி சிபி -> சங்கத்தில் சிபாரிசு செய்ததற்கு... எப்படி நட்சத்திரமாக இருந்து கொண்டு மற்ற படைப்புகளை பார்க்க நேரம் கிடைக்கிறதோ!

அப்புறம் அந்த திட்டம்... நாந்தான் நல்ல பையன்னு உங்களுக்கு தெரியும்ல அப்றம் என்ன அந்த கேள்வி!

Anu said...

Nice one..
laughed a lot
but..i cant believe that the rasu in the story is you..

ராசுக்குட்டி said...

அனிதா...கதைகளில் என்னை தேடாதீர்களேன்!