Tuesday, September 05, 2006

32 : தேவதைக் கவிதைகள்

Photobucket - Video and Image Hosting

வாருங்கள் கதைப்போம்

எனைப் போலவே உங்களுக்கும்
தேவதைக் கதைகளில்
நம்பிக்கை உண்டெனில்
வாருங்கள் கதைப்போம்

அரக்கனின் பற்தடங்கள்
என் உடலெங்கும் உண்டு

என் பற்களிலும் ரத்தக்கறை
இருக்கலாம்

என் விரல் நகங்களிடையே இருக்கும்
சதைத்துணுக்குகளில் உங்கள் கவனம்
சிதறாதிருந்தால்

தேவதைச் சிறகுகளின்
மென்மை பற்றி பேசலாம்

சில தேவதைகளை நான்
ஸ்பரிசித்திருக்கிறேன்

சில தேவதைகளும் என்னை
முத்தமிட்டிருக்கின்றன

அதனால்...

7 comments:

Anonymous said...

ராசு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

(ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கிக் கொடுக்கலியே நண்பா.. கோகோ, இதெல்லாம் கேட்கக்கூடாதா?)

Anonymous said...

எனக்கு முழுவதும் புரியல...

ராசுக்குட்டி said...

யாழ்... முழுசாப் புரியலயா... முழுசுமே புரியலயா

நன்றி ராஜ்

6-5 முட்டாய்தான தந்துருவோம்!

ப்ரியன் said...

நல்ல கவிதை ராசு

என்னதான் நான் மோசமானவனாக இருந்தாலும் என்னிடமும் சில நல்லவைகள் இருக்கின்றன வா பேசலாம் அதைப்பற்றி மட்டும் என்பதாய் அர்த்தம் எடுத்துக் கொண்டேன்.சரியான அர்த்தம்தானா?அறிய ஆவல்.

ராசுக்குட்டி said...

ப்ரியன் -> முதல்முறை என்று நினைக்கிறேன் வருக...வருக...

உங்கள் மறுமொழிக்கு நான் க.க.க.போ என்றுதான் சொல்ல வேண்டும்... நான் மோசமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவன், மோசமானவனும் கூட ஆனாலும் நல்ல உறவுகளும் நட்பும் எனக்கு கிடைத்திருகின்றன... அவைகளை பற்றி பேசவே எனக்கு ஆவல்-னு

என் கவிதைக்கு என்னயப் போயி பொழிப்புரை எழுத வச்சுட்டிங்களே

உங்கள் கவிதைகளிலும் எனக்கு பிடித்தவை என்று பெரிய பட்டியலே இருக்கிறது

சரி சுவாசிப்பது அவள் என்று விட்டு எப்படி க.பி.க?

ப்ரியன் said...

நன்றி ராசு

/*சரி சுவாசிப்பது அவள் என்று விட்டு எப்படி க.பி.க?*/

இதெல்லாம் கண்டுக்காதீங்க...எப்படி பார்த்தாலும் இன்னும் கலியாணம் ஆகல இல்லியா அதான் க.பி.க தில் இருக்கேன்

ராசுக்குட்டி said...

நன்றி நிர்மல்!

ப்ரியன் -> அப்டியா சங்கதி... அப்போ நானும் சேந்துக்கட்டுமா சங்கத்துல ;-)