Monday, September 11, 2006

37 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 5

Photobucket - Video and Image Hosting
முந்தைய பாகங்களிற்கு...
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 2
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 3
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 4

ஹலோ சந்துரு இருக்கானுங்களா...
ஹே நீதானாடா... குரல் வித்தியாசமா இருந்துச்சு
ம்ம் ஆமாம் நேத்துதான் வந்தேன்
அமெரிக்காவுக்கு என்னடா நல்லாத்தான் இருக்கு
சரி இன்னிக்கு 3 மணிக்கு எங்க வீட்டுக்கு வந்துரு
என்ன விஷயமா... நம்ம காலேஜ் வரைக்கும் போய்ட்டு வரணும்... சொல்லியிருந்தேன்ல ஏற்கனவே
ஆமாமாம்... ஒரு வாரம்தான இருக்கு
:
:

வாப்பா சந்துரு... ராசு வந்தாதான் எங்க வீட்டுக்கெல்லாம் வழி தெரியும் உனக்கு இல்ல

எங்கம்மா நானே எங்க வீட்டுக்கு விருந்தாளியாத்தான் வர்றேன்... நேரமே கிடைக்கிறது இல்ல... அப்புறம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு

அதுக்கென்ன தீராம வந்துகிட்டே இருக்கு... சரி நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற

பாத்துகிட்டு இருக்காங்கம்மா... ராசுவுக்கு அமஞ்ச மாதிரி நல்ல பொண்ணா அமஞ்சா உடனே கல்யாணந்தான்

எம்மா அவனுக்கு ஒரு காஃபி குடுங்க... நான் 'தோ வந்தர்றேன் (மேலிருந்து என் குரல்)

டேய் ராசு எப்பப்பாரு தாமசமாத்தான் கிளம்புவியே... சீக்கிரம் வாடா மாப்ள பையா

வந்தாச்சு வந்தாச்சு... டேய் குடிச்ச வரைக்கும் போதும் வா... அம்மா நானும் சந்துருவும் ராத்திரி சாப்பிட வந்துருவோம் சேத்தே செஞ்சுருங்க
:
:
(கற்க கற்க... லேசாக அதிர கல்லூரி நோக்கி பயணித்தோம் நானும் சந்துருவும்)


கதிர் எப்படிடா இருக்கான்... நீயும் அவனும் அடிக்கடி பார்த்துப்பீங்களா

நான் விஸ்கான்ஸின்ல இருக்கேன், அவன் நியூயார்க்ல, நெறய பாத்துக்க முடியாது... ஆனா ஃபோன்ல பேசிக்குவோம் தினமும்...உனக்கு எப்படி போய்ட்டு இருக்கு வேலையெல்லாம்

வேலையெல்லாம் ஓ.கே தான் என்ன ஒரு on-siteதான் கிடைக்க மாட்டேங்குது

வரும்டா கவலைப்படாத எங்க போயிரப்போகுது... ஓ.கே ஒன்னு செய் உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்

ம்... சரிடா மண்டபம் எல்லாம் சொல்லியாச்சா...

அதெல்லாம் தம்பி ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான்... நம்ம மக்களுக்கு பத்திரிக்கை வைக்கிற வேலை ஒண்ணுதான் பாக்கி

உனக்கும் வித்யாவுக்கும் கல்யாணம்னா நம்ம செட்-ல பாதி பேரு நம்ப மாட்டேய்ன்றாய்ங்க

அது சரி எப்ப பாத்தாலும் அவள சீண்டி சண்டை போட்டுகிட்டே இருப்போம்... எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கும் சில சமயம் நினைக்கும் போது

க்ரீச்...

என்னடா நிறுத்திட்ட

இங்க ஓரமா நிக்றது... சார் வணக்கம்... நல்லாருக்கிங்களா

வணக்கம் நீங்க....

சார் நான் ராஜ்... 7 வருஷத்துக்கு முன்னாடி உங்க காலேஜ்-லதான் படிச்சேன்

வணக்கம் சார் நான் சந்துரு... இந்த காலேஜ் பர்ஸ்ட் செட்

ம் ஞாபகம் இருக்கு மறக்க முடியுமாப்பா... எல்லாம் நல்லா இருக்கீங்கள்ள

ம் இருக்கோம் சார்... எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கு... உங்களுக்கு பத்திரிக்கை வைக்கணும்னுதான் காலேஜ் போய்ட்டு இருக்கறேன்... வழியிலேயே உங்கள பாத்துட்டேன்

ரொம்ப சந்தோஷம்பா... எப்ப கல்யாணம்... எங்க வச்சு...

இங்க கோயமுத்தூர்லதான் சார்... நீங்க கண்டிப்பா வரணும்

ம்... அதுக்கென்னப்பா வந்துட்டா போச்சு

சரி சார் வர்றோம், அப்புறம் இங்க நின்னுகிட்டு இருக்கிங்களே... யாருக்காகவாவது காத்துகிட்டு இருக்கிங்களா

இல்லப்பா என் வண்டி திடீர்னு மக்கர் பண்ணி நின்னுருச்சு... என்ன பண்றதுன்னு யோசனையா நின்னுகிட்டு இருக்கேன்

நம்ம வண்டில ஏறிக்கோங்க சார்... காலேஜ்-ல விட்டர்றேன்!

(சந்துரு ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்து குறும்பாக புன்னகைக்கிறான் என்று யாராவது சொல்லுங்களேன்!)

14 comments:

நாமக்கல் சிபி said...

//(சந்துரு ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்து குறும்பாக புன்னகைக்கிறான் என்று யாராவது சொல்லுங்களேன்!)//

சொல்லணுமா என்ன? பத்தடிக்கு ஒருத்தரா நின்னு லிஃப்ட் கேட்ட அதே பிரின்ஸிதான அவர்?

கார்த்திக் பிரபு said...

nan sollanumnu ninaichane sibi sollitaaru

நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள கருத்துக்களையும் சொல்லுங்க

Anonymous said...

கற்க கற்க...ன்னு ஒரு வார்த்தை போடறதுக்காக பாட்டுக்கே லிங்க் கா??? இது கொஞ்சம் ஓவர்

Anu said...

wow Rasu
its too good
every story has been linked to the previous one in someway and this one is linked to the very first story
Simple but sweet

Anonymous said...

கல்யாணப் பத்திரிக்கை எங்களுக்கெல்லாம் கிடையாதா?

Anonymous said...

ஒரே மூச்சில் அனைத்து பாகங்களும் படித்தேன் அருமையாக இருந்தது... நல்ல நகைச்சுவை கதையெங்கும்.... உண்மைக் கதைதானே!

பழூர் கார்த்தி said...

முந்தைய பகுதிகளைப் போலவே துள்ளியோடும் இளமை.

வாழ்த்துக்கள் !!

***

"உன் ரெஸ்யூமே எனக்கு அனுப்பி விடு எங்க project ல அடுத்த மாசம் மேய்க்கிறதுக்கு ஆள் வேணும்னாய்ங்க முயற்சி செஞ்சு பாப்போம்" போன்ற வரிகள் மென்பொருள் துறையாளர்களையும் ரசிக்க வைக்கும்..

***

கலக்குங்க..

ராசுக்குட்டி said...

கதைன்னா முடிவு இருக்கணுமேன்றதுக்காக எழுதின பகுதி. இந்த பகுதியில் ரசிக்க வைக்க ஒண்ணுமே இல்லயேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்... அதுல கோட ஒண்ணு கண்டு பிடிச்சீங்க பாருங்க... விமர்சனப் பார்வை உங்களுக்கு செட் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்

முழுப் பதிவா ஒண்ணு போட்டு வச்சுட்டேன் உங்கள் வசதிக்கேத்தா மாதிரி

Anonymous said...

??

நாமக்கல் சிபி said...

நிஜமாலுமே உங்களுக்குத்தான் கல்யாணமா???

எங்களுக்கு எல்லாம் பத்திரிக்கை உண்டா??? (உங்களுக்கு ஓட்டு எல்லாம் போட போறோம் ;))

இதுதான் கடைசி பகுதியா? இல்ல இன்னும் வருமா?

ராசுக்குட்டி said...

அட ஏன் பாலாஜி,
ஒரு ஓட்டப் போட்டுட்டு நம்மள தீராத துன்பத்துல தள்ளணும்னு பாக்கறீங்க... நானே க.பி.க சங்கத்துல நிரந்தர உறுப்பினராகலாம்னு இருக்கேன்!

ஆமா இதுதான் கடைசி பகுதி உங்க வசதிக்காக முழுகதையும் ஒரே பதிவா போட்டுட்டேன்...மற்றுமொருமுறை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

கதிர் said...

போட்டியின்னு வந்துட்டா நீ சிங்கந்தான் ஒத்துக்குறேன். அதுக்காக இப்படியா... தோணுறதையெல்லாம் எழுதி ரயில் பொட்டி மாதிரி தேன்கூட்டுக்கு அனுப்பிட்டே இருந்தா எப்படி??

நாமக்கல் சிபி said...

//நம்மள தீராத துன்பத்துல தள்ளணும்னு பாக்கறீங்க... நானே க.பி.க சங்கத்துல நிரந்தர உறுப்பினராகலாம்னு இருக்கேன்!
//
பாக்கத்தானே போறோம் ;)

//முழுப் பதிவா ஒண்ணு போட்டு வச்சுட்டேன் உங்கள் வசதிக்கேத்தா மாதிரி //
நான் முதல்ல இருந்தே படிச்சிட்டுதான் வரேன் ;)

ராசுக்குட்டி said...

தம்பிபிபிபிபி.... இப்படியா வார்றது... சரி சரி ஓட்டு போட்டாச்சுல்ல!

பாலாஜி - நீங்கள்லாம் இருக்ற தைரியத்துலதான் இப்படிப்பட்ட முயற்சிகள்!