Tuesday, October 17, 2006

54 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு

Photobucket - Video and Image Hosting

இதுனால கோயம்புத்தூரு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் சுத்துவட்டாரத்துல இருக்ற 18 பட்டிகள்ள இருக்ற வலைப்பதிவர்களுக்கும் சொல்லிக்கறது என்னன்னா....

வலைப்பதிவர் உலகில் கோவை மண்ணிலிருந்து நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் சந்திப்புகள் எதுவும் நடந்ததாக தகவலில்லை. (நடந்து என் கவனத்தில் வராமலும் போயிருக்கலாம் அப்படி இருந்தால் - மன்னிக்க!)

இந்த முறை தீபாவளி விடுமுறையை ஒட்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தால் என்ன என்று வெகுநாட்களாய் சிந்தித்து வந்ததில் விளைந்த பதிவு இது.

விடுமுறைக்கு நிறைய பேர் தங்கள் சொந்த ஊருக்கு வருவார்கள் என்பதால் நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது கூடுதல் அனுகூலம்.

விசாரித்த வரையில் இன்னொரு பெருங்கூட்டமும் இருக்கிறது அதுதான் நம்மூரு அம்மணிகளை (தங்கமணி) மணந்திருக்கும் கூட்டம். எனவே மாமனார் வீட்டுக்கு வந்திருப்போரும் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது ;-)

சந்திப்புக்கு வர ஆர்வமிருப்போர் ஆஜர் என்று ஒரு பின்னூட்டமிட்டால் மகிழ்வேன் - வோம்! எண்ணிக்கையை பொறுத்து இடத்தை முடிவு செய்து கொள்ளலாம், அக் 22, 2006 ஞாயிற்றுக் கிழமை... மிக மந்தமான நேரமான மாலை 3 - 5 க்குள் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்பது திட்டம்.

வடை-போண்டா என்று குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து கோவை புகழ் 'பேக்கரி'கள் ஏதாவதொன்றில் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம். அல்லது வேறெதுவும் சுவாரசியமான இடங்களை/பதார்த்தங்களை பரிந்துரைக்கலாம்.

தற்போதைய திட்டம்
===================
இடம் : லாலி ரோடு - அரோமா பேக்கரி
நாள் : அக், 22, 2006
நேரம் : காலை 10 - 12

கோவையை சேர்ந்த சில நண்பர்கள் இப்போதே விடுமுறை எடுத்துக்கொண்டு பிரயாணங்களில் ஈடுபட்டிருக்கலாம்... அல்லது இந்தப் பதிவு அவர்கள் கவனத்திற்கு வராது போகலாமென்பதால்... இப்பதிவை பார்ப்போர் சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியச் செய்யுங்கள்.

அலை கடலென திரண்டு, அனைவரும் வாரீர்... ஆதரவு தாரீர் (ஓ தேர்தல்-லாம்தான் முடிஞ்சுருச்சே). சீக்கிரமே சந்திப்போம், அதுவரை உங்கள் மேலான ஆலோசனைகளை எதிர்நோக்கி...

நண்பர்களே இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

36 comments:

Unknown said...

தலைவா

வாழ்த்துக்கள். மானசிகமாய் மட்டுமே வந்து கலந்துகொள்ள முடியும். கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Pavals said...

ரைட்டு

ராசுக்குட்டி said...

நன்றி செல்வன்... உங்களுக்கு தெரிந்த கோவை வலைபதிவர்களிடமும் தெரிவியுங்கள் இது பற்றி!

ராசுக்குட்டி said...

பவளராசா... தோட்டத்துக்கு அன்னிக்கு மட்டும் லீவு வுட்டு வந்தீகன்னா... அப்படியே பிரம்மச்சாரிகள் விருந்தும் வாங்கிப்போம் என்ன சொல்றீக...

நாமக்கல் சிபி said...

Rasukutti,
For The Past 3/4 Days I Couldnt come to Blog worls, So I'm not able to announce in my blog. Thanks for announcing from your side. Lets Meet And Enjoy :)

Namakkal Shibi.

ராசுக்குட்டி said...

பரவாயில்லை சிபி,

ஆனா எங்க சந்திக்கலாம்னு ஒரு ஐடியா கொடுத்துடுங்க!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஞாயிற்று கிழமை திரும்ப வேண்டி இருப்பதால் கலந்து கொள்ள முடியாது வெள்ளி போல வைத்தீர்களானால் கலந்து கொள்ள முடியும். எப்படியானாலும் வலைப் பதிவாளர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

Yuvraj Sampath said...

ஏண்ணா ஏங்கீன்னு சொன்னீங்க...
மரன்ந்த்து போச்சு...

BadNewsIndia said...

நல்ல விஷயம் ராசுக்குட்டி,

இது முதல் தடவைன்னா எல்லாரும் பேசிட்டு போண்டா சாப்டு வீட்டுக்கு போயிடுங்க.

இப்பவே அடுத்த சந்திப்புக்கு நாள் குறிச்சு அடுத்ததடவ சேரும்போது ஒரு மௌன ஊர்வலமா நடந்து போங்க. கைல ரெண்டு மூணு Banner உம் எடுத்துட்டுப் போங்க. Bannerla 'சுத்தம் சோறு போடும்', 'ஜாதிப் பிரிவினை வேண்டாம்' இந்த மாதிரி எழுதலாம்.

இதுக்கேல்லாம் permission வாங்க வேண்டி இருக்கும். விசாரிச்சுட்டு வாங்குங்க. இல்லண்ணா விடுமுறை மாமியார் வீட்ல உக்கார வச்சுருவாங்க. ;)

ப்ரியன் said...

நானும் 'கை' தூக்கி இருக்கேன் தெரியுதா?

மணியன் said...

கோவை பதிவர்சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
ம்ம்.. என்னால் வரமுடியவில்லை :(

ராசுக்குட்டி said...

குமரன் -> தலையைக் காட்டிட்டு கிளம்பிடுங்களேன்.... வெள்ளியன்று தீபாவளி முஸ்தீபுகளில் இருப்பார்கள் மக்கள் என்பதால்தான் ஞாயிறு! முடியுமா என்று கொஞ்சம் முயற்சிக்கவும்!

ராசுக்குட்டி said...

Bad News India -> நல்ல வார்த்தை/செய்தியா சொல்லுங்கப்பு!

ராசுக்குட்டி said...

ப்ரியன் -> நீங்கள் இல்லாமலா? காப்பிக்கடைக்கு தீபாவளி பலகாரம்லாம் எடுத்துட்டு வந்திருங்க

ராசுக்குட்டி said...

மணியன் -> வாழ்த்துக்களுக்கு நன்றி, முடிந்ததும் விபரங்கள் தந்து தாங்கள் வராத குறையை போக்கிடுவோம்!

SP.VR. SUBBIAH said...

ஆகா நல்ல விசயந்தானே - சந்திப்போம்!

கோவை ரவீ said...

அன்பர்களே மற்றும் நண்பர்களே எந்த பேக்கரின்னு சொல்லலியே வர முயற்ச்சி செய்கிறேன். பதிவாளர்கள் அனைவருக்கும் தீபாவளீ நல்வாழ்த்துக்கள்.

ராசுக்குட்டி said...

நண்பர்களே... இடம் நாள் நேரம் தெளிவாக குறிப்பிடவில்லை பதிவில்...

இப்போது சரி செய்து விட்டேன்...

வந்துவிடுங்கள் மறக்காமல்!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ராசுக்குட்டி காலையில் வலைப் பதிவு சந்திப்பு நிகழ்ந்தால் கூட வர முயற்சிக்கிறேன். நான் கோவை அல்ல ஈரோடு எனக்கு ஈரோட்டில் 4 மணிக்கு டிரெயின். கோவையில் இருந்து கிளம்புவதால் அங்கேயே கூட பிடிக்கலாம். ஆனால் கோவையில் 2 மணிக்கு கிளம்புகிறது. ஆகவே காலையில் இருந்தால் மற்ற வலைப் பதிவாளர்களையும் சந்தித்துப் போக முடியும். ஆகவே காலையில் சந்திப்பது குறித்து மற்ற பதிவாளர்களுக்கு ஒத்து வருமா என்று தெரிய வேண்டும்.

ராசுக்குட்டி said...

குமரன் எண்ணம் -> காலைதானே மாற்றி விட்டால் போச்சு!

மக்களே எல்லாரும் பாத்துக்கங்க காலை 10 - 12 மணிக்குள் நம் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மிக்க நன்றி நேரத்தை மாற்றியதற்கு ஆனால் எல்லோருக்கும் உகந்த சமயமா என்று தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். காலையில் இருப்பின் கண்டிப்பாக வந்து கலந்து கொள்கிறேன்.

மீண்டும் நேரம் குறித்து பரிசீலனை செய்ததற்கு நன்றி.

Pavals said...

லாலி ரோடா..??

சரி. உங்களுக்காக வர்றேன்.. ஒழுங்கா பாதுகாப்பு குடுத்திரனும்.. ஆமா..

Sud Gopal said...

ஓ..இத்தன நாளா இந்த மேட்டரைப் பார்க்கலையே...

ஞாயிறு மதியம் இன்டர்சிட்டியப் புடிக்கணும்.பார்ப்போம்.எனக்கு அதிர்ஷ்டம் இருக்கா இல்லையான்னு...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சுதர்சனம் கோபால் அவர்களே நானும் பெங்களூர் செல்லும் இண்டர்சிட்டிதான் பிடிக்க வேண்டும்.

ராசுக்குட்டி said...

வாத்தியாரய்யா கண்டிப்பா வந்திடுங்க... பிரம்பெல்லாம் வீட்லயே வெச்சிட்டு வாங்க

ரவீ -> லாலி ரோடு, அரோமா பேக்கரி!

ராசுக்குட்டி said...

உங்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுமா ;-)
சரி பவளராசாவுக்கு பாதுகாப்புதானே தந்துட்டா போச்சு, கறுப்பு பூனை லெவெல் 1 போதுமா?

சுதர்சன்.கோபால் உங்களுக்காகவே மாத்தினா மாதிரி இருக்கு... கண்டிப்பா முடியும் வந்திடுங்க

குமரன் எண்ணம் - சுதர்சன் கோபால்...சுவாரசியமாய் இருக்கிறது :-)

Pavals said...

எல்லாரும் அந்த ரகசியவார்த்தைய ஞாபகம்வச்சுக்கோங்க..

(சும்மா.. ஒரு பின்னூட்டம் போட்ட, கொஞ்ச நேரம் தமிழ்மண முகப்புல இருக்குமேன்னு போட்டது.. ரொம்ப யோசிக்காதீங்க..)

Sud Gopal said...

//சுதர்சன்.கோபால் உங்களுக்காகவே மாத்தினா மாதிரி இருக்கு... கண்டிப்பா முடியும் வந்திடுங்க//

நன்றி...நன்றி...நன்றி

ஆனா,வரமுடியுமான்னு தான் தெரியலயே??

//குமரன் எண்ணம் - சுதர்சன் கோபால்...சுவாரசியமாய் இருக்கிறது :-)//

அப்படீன்ன்னா???

ராசுக்குட்டி said...

கோவை மண்ணிலிருந்து.... ராசுக்குட்டியின் வணக்கங்கள் முதலில்!

ஆமாம் மக்களே பவள ராசா சொன்ன ரகசிய வார்த்தை ஞாபகம் இருக்கட்டும்.

சுதர்சன் கோபால்... சந்திப்புக்கு வாங்க அங்க தெளிவா சொல்லிர்றேன்

எல்லாருக்கும் இன்னோரு தபா சொல்லிர்றேன்... வந்துருங்க வந்துருங்க மறக்காம வந்திருங்க லாலி ரோடு அரோமா பேக்கரி!

ஃபோன் நம்பர் குடுத்தவுங்க எல்லார்ட்டயும் அடுத்தடுத்து பேசிர்றேன்... கொஞ்சம் பொறுத்துக்கங்க

Anonymous said...

ராசு. ஊருக்கு வந்ததிலிருந்து பல வேலைகளில் மாட்டிக்கொண்டதால் ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் நம்ம வலைப்பதிவுகளைப் பாக்க வந்தேன் (நல்ல வேளை நாளை சந்திப்பை இன்றிரவே பார்த்தேன். நாம லேட்டா வந்தாலும்.. லேட்டஸ்டா ... யப்பா..).

நானும் கண்டிப்பா வரேன். (நமக்கு ஒரு போண்டா.. இல்லை இல்லை சாரி, வெஜ்-பஃப்ஸ் சொல்லிடுங்க.. :-D
)
தீபாவளி வாழ்த்துக்களும் எல்லோருக்கும்! இப்போதைக்கு வர்ர்ர்ட்டா..!

ஓகை said...

சந்திப்பு நன்றாக நடக்க வாழ்த்துக்கள்!

லாலி கார்னர் அரோமா பேக்கரியா?

GCT ல அஞ்சு வருசப் படிப்புல பாதி நாள் அங்கதான் நமக்கு டேரா. நல்லா நடத்துங்க மக்கா!!

Anonymous said...

சந்திப்பு முடிஞ்சு அஞ்சு நாளாகப்போகுது. ரிப்போர்ட் எங்க?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நான் வரலாமென்று இருந்தேன் னால் விமான டிக்கெட் கிடைக்கவில்லை...சாரி..:)

நாமக்கல் சிபி said...

சந்திப்பு நடந்ததா??? இல்லையா???

கோவை ரவீ said...

வேலைபளுவின் காரணமாக தற்போது தான் உங்க பதிவு திறந்து பார்த்தேன் யம்மாடி கொங்கு நாட்டில் இவ்வளவு பேரா? நான் உங்கள் தமிழிணையத்துக்கு புதுசு.
நண்பர் வெ.ப. சொன்னது போல் சந்திப்பு நடந்ததா? இல்லையா? சந்திப்பில் பேசியது எதுவாகவோ இருக்கட்டும் எத்தனைபேர் வந்தீங்க? என்னென்ன சாப்பிட்டீங்க? கரெக்டா பட்டியல் கொடுத்துடுங்க ஆமாம் சொல்லிட்டேன்.

ராசுக்குட்டி said...

சந்திப்பு நடந்ததுங்கன்னா... வேலைப்பளுவின் காரணமாக பதிவிட முடியவில்லை எனினும் இன்றோ நாளையோ கட்டாயம் தந்துவிடுகிறேன்.

ரவீ சில பல டீக்கள் சாப்பிட்டோம் அவ்வளவுதான்