Wednesday, October 04, 2006

46 : இவரைத் தெரியுமா உங்களுக்கு?

Photobucket - Video and Image Hosting
இவரைத் தெரியுமா உங்களுக்கு?

இந்தக் கவிதையைப் படித்திருக்கிறீர்களா?

My Heart is Heavy

My heart is heavy with many a song
Like ripe fruit bearing down the tree,
But I can never give you one
My songs do not belong to me.

Yet in the evening, in the dusk
when moths go to and fro
in the gray hour if the fruit has fallen
take it, no one will know.

சாரா என்று அழைக்கப்படும் சாரா டீஸ்டேல் (Sarah Teasdale). இந்தப் பெண் கவிஞரின் கவிதைகளை இணைய தளத்தில்தான் சந்தித்தேன். முதல் வாசிப்பிலேயே என்னை ஈர்த்துவிட்ட கவிதைகள் அவை.

ஒரு சிறு பெண்ணாய் காதல் ரசம் சொட்டும் கவிதைகள் வடிக்கிறார், இயற்கையை தாய் மடியாய் நேசித்து அதன் சிறு சிறு நிகழ்வுகளை கவிதைப் படுத்துகிறார் . அவர் வாழ்ந்த காலம் 1884-1933, ஆனால் அவர் எழுதிய கவிதகள் இன்றும் ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. அவர் எழுதிய கவிதை பாணி இன்றளவும் நடை முறையில் இருந்து வருகிறது.

1918-ல் தன்னுடைய காதல் கவிதைகளுக்காக மிக உயரிய விருதான புலிட்சர் விருது வாங்கியிருக்கும் இந்தக் கவிஞரை அறிந்தோர் மிகச் சிலரே.அவர் கவிக்கடலில் இருந்து ஒரு நல்முத்தை, எனக்குத் தெரிந்த தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

எடுத்துக் கொள்ளடி, எவருக்கும் சொந்தமற்ற என் பாடலை!

பழுத்த பழங்களால் வளைந்து கிடக்கும் கிளை போலே
பாடல்களால் கனத்துக் கிடக்குது என் மனது - இருந்தும்
பரிசாய் உனக்கென ஒன்றைக்கூட என்னால் தர முடியாது
என் பாடல்கள் எவையும் எனக்கு சொந்தமானதில்லை

பொழுதுசாயுமந்த அந்திப் பொழுதில்
பூச்சிகளும் அலையும் அந்த வேளையில்
(தென்றலின் வருடலில்) சில கனிகள் உதிர்ந்திருந்தால்
எடுத்துக் கொள்ளடி, எவருக்கும் தெரியாது.

பாடல் எனும் இடத்தில் கவிதை என்றோ காதல் என்றோ பொருள் மாற்றி வாசித்து பாருங்களேன் மீண்டுமொருமுறை!

சென்ற வாரம் தமிழோவியத்தில் வெளிவ்ந்திருந்தது இந்தப் படைப்பு

3 comments:

Chandravathanaa said...

நன்றி

ராசுக்குட்டி said...

சந்திரவதனா -> வருகைக்கு நன்றி, இவர் கவிதைகளை படித்திருக்கிறீர்களா?

Anonymous said...

உங்க மொழிபெயர்ப்பு பார்த்தபின்பு ஆங்கிலத்தில் படிக்கும் போது இன்னும் நன்றாகவே இருந்தது. ..
ஒரு சின்ன விடயம். நீங்க உங்க எழுத்துக்கள் ஒரு பத்தியாக அதாவது கொறுவா கொறுவா இல்லாமல் வரவேண்டும் என்பதற்காக Align justify பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன். இது என்னைப் போன்று பயர்ஃபாக்ஸ் உலாவி பயன்படுத்துபவர்களுக்கு பூ பூவாய் தெரியும். எனவே align justify இல்லாமல எழுதினால் எல்லோரும் படிக்க ஏதுவாக இருக்கும். மேலும் இதில் கருத்து வேண்டி இருந்தால் தனிமடலிடுங்கள்.