Thursday, October 12, 2006

51 : முந்தைய பதிவின் நதிமூலம்!

Photobucket - Video and Image Hosting
ஹும்...சே யேக் ஜ்ஷ்டுஎ ஷ்...... எண்ணே முதல்ல கட்ட அவுத்துவிடுங்கன்னே சின்னப்புள்ள மாதிரி விளையாண்டுகிட்டு

ம்... வாடே கோகோ, எம்புட்டு நாளு கூப்ட்டுகிட்டு இருந்தேம் நீ பாட்டுக்கு நமக்கு டிமிக்கி குடுத்துக்கிட்டு இருந்த பொறவு என்னிய என்ன பண்ணச் சொல்லுத

அதுக்காக இப்பிடியா உள்ளாட்சி வேட்பாளர் கணக்கா ஆள வச்சு கடத்தி செந்தூக்கா தூக்கியாரது...

ஆமா இவரு அந்தானைக்கி கவுன்சுலர் ஆயிட்டாலும்... கெடந்து குதிக்காதல வெசயத்துக்கு வாறேன் அந்தா இந்தான்னு அம்பதாவது பதிவு எழுதப் போறேன், என்ன எழுதலாம்னு ஐடியா கேக்கத்தாம்ல உன்னத் தூக்கியாந்தம்.

ஆமா இம்புட்டுக் காலம் என்னியக் கேட்டா எழுதினீய இன்னிக்கு என்ன புதுசா வாழுது... இந்த 49-ஏ எப்படி வந்ததுன்னு எனக்குத்தான் தெரியும், சும்மா கோழியடிச்சது, போளி சாப்ட்டது, ஒரே கதையா ஆறாப் போட்டது எவனோ அனுப்ச்ச போட்டா வீடியோவெல்லாம் வலையேத்தி ஒப்பேத்திப்புட்டு என்னமோ எழுதறதுக்கு ஐடியா கெடைக்கலன்றீரு... நானென்ன கேனப்பயலா

அதில்லடே 50-ன்றது ஒரு கவுரதையான நம்பர்தானல இந்த கிரிக்கெட்ல கூடப் பாரேன் 50 அடிச்சதும் மட்டைய தூக்கி காமிக்குதாக... அதான் எதுனா நல்ல வெசயத்த எழுதலாம்னு...

யோவ் எனக்கு நல்லா வாயில வந்துரப் போகுது...பெரியவுக வந்து போற இடம்ன்றதால சும்மா விட்டு வைக்கேன்... நீர் வேணும்னா டைப்படிச்ச கீ-போர்ட்-அ தூக்கி காட்டுமேய்யா 50 அடிச்சுட்டேன்னு, சரி பேசாம வெட்டிப்பயலோட அதிசய எண் மாதிரி இந்த 50-க்கும் எதுனா செஞ்சுவுடுமே(ன்)

ஆத்தீ 50 வெசயத்துக்கு எங்கல போவேன்... 1-க்கே இங்க சிங்கியடிக்குது

ஆமாம்யா ஒமக்கு கள்ளும் குடிக்கனும் பல்லுலயும் படப்படாது... சரி பேசாம டைகர் பிஸ்கட் மாதிரி நீரு 50-50 பிஸ்கட் பத்தி எழுதி ஒப்பேத்திரும்

திங்கிறதப்பத்தியே எழுதிக்கிட்டு இருந்தா வெளங்கிரும்ல... நல்ல யோசனயா சொல்லுடே தின்னிமாடா

எல்லாம் என் நேரம்... பேசாம ஒரு 50 பதிவு, எனக்குப்பிடித்த 50 பாடல்கள், 50 படங்கள்னு...ம்...வேணாம் வேணாம் நமக்கு 6-பதிவு போடவே ஆள் கிடைக்கல... 50-ன்ற நம்பரத்தாண்டி யோசிப்போம்... பேசாம சிங்கைப்பாண்டின்னு இன்னோரு பதிவு போட்டா...

போல சவத்துமூதி... நான் என்னிக்கு சினா பானா போட்டனோ அன்னில இருந்து ஆனந்த விகடன்ல பராக் பாண்டி-ய நிறுத்திப்புட்டாக, நம்ம ராசி அப்பிடி இருக்கு...

ஹா... ஹா... அப்பிடியாண்ணே எனக்கு இந்த விசயம் புதுசு, இந்த தேன்கூடுல இனிமே தொடர்கதையெல்லாம் எழுதக் கூடாதுன்னு சொல்லிப்போட்டாகளே அந்த மாதிரி... ஹா ஹா, ம்ம்... அப்போ பாத்துத்தாம் யோசனை சொல்லணும்... பேசாம, இந்த மாச தலைப்புக்கு ஒண்ண எழுதிப் போட்டுட்டா எண்ணிக்கைக்கு எண்ணிக்கையும் ஆச்சு போட்டிக்கும் படைப்பு ஆச்சு

போடே போக்கத்த பயலே அதெல்லாம் பெரிய விஷயம்... விடுதலைன்ற தலைப்பே விடுகதை போடுதா மாதிரி இருக்கு இப்போதைக்கு ஆகக்கூடியத சொல்டே

பேசாம கவிதை ஒண்ணை எழுதிட்டா? நம்ம கவிமடத்தலைவன் சொன்னாப்ல... இப்போத்தான் நட்சத்திரம் கண் சிமிட்னத வச்சு பாடம்லாம் எடுத்தாருல்லா

சொறிஞ்ச எடம் சொகமா இருக்கு கொஞ்சம் சுண்ணாம்பு தடவுன்னானாம் ஒன்ன மாதிரி ஒருத்தன்... அடே அவர் சொல்றதெல்லாம் பெரிய பெரிய விஷயம், நமக்கு அதப் படிக்கும்போதே கண்ணக் கட்டுது, கவிதை வந்தா ஒண்ணல்லாம் ஏம்ல கடத்துதேன்... ஆங் சமயத்துக்கு ஒனக்கும் நல்ல நல்ல ரோசனையாத்தாம்ல வருது... இரு தமிழோவியத்துக்கு அனுப்பின கவிதை ஒண்ணு இருக்கு அத வச்சு ஒப்பேத்திட்டு வாரம்...

இப்போதைக்கு வ்வ்வர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா...

5 comments:

கதிர் said...

அண்ணே!

ஏண்ணே கோகோவ இந்த வைய்யி வைய்யறீங்க? அவரு மேல அப்படி என்ன காண்டு?

ஆனா ஒண்ணு ஆளாளுக்கு ஒண்ணு ரெண்டு பதிவுதான் மீள்பதிவுன்னு போடுவாக. ஆனா நீங்க அம்பதையும் போட்டு எங்கள தாளிச்சுபுட்டீக.

பெரிய ஆளுதாம்ல நீரு :))

நாமக்கல் சிபி said...

//சரி பேசாம வெட்டிப்பயலோட அதிசய எண் மாதிரி இந்த 50-க்கும் எதுனா செஞ்சுவுடுமே(ன்)
//
சொல்லிருந்தீங்கனா தேடி இருக்குலாமே... 50 அட்டகாகமான எண்ணாச்சே ;)

ராசுக்குட்டி said...

தம்பி -> எல்லாரும் நம்மள திட்டறப்ப நாமளும் திட்டறதுக்கு ஒரு ஆளு வேணும்ல...அதான்! ஆகா நோட் பண்ணிட்டிங்களா? நம்பர் போட்டனுங்கோ...ஹி ஹி...

ராசுக்குட்டி said...

அய்யா வெட்டி -> 50 அட்டகாசமான எண்தான் ஆனா அவ்ளோ விஷயம் தேடி சேக்றதுக்குல்ல... நானும் spinach சாப்ட்டு பாக்கறேன் உங்க அளவுக்கு energy கிடைக்குமான்னு!

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.