Wednesday, November 22, 2006

56 : கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு - தகவலறிக்கை



நண்பர்களே உங்கள் அனைவரிடமும் அளவளாவி அனேக நாட்கள் ஆகிவிட்டது எனவே முதலில் வணக்கம், அனைவருக்கும்!

அடுத்து சாஷ்டங்கமாய் வுளுந்து மன்னிப்பும் கேட்டுர்றேன்... கோவை வலைப்பதிவர் சந்திப்பை பெரிய அளவில் நடத்தமுடியாமல் போனதற்கு. சின்னதோ பெரிதோ நடந்ததை தமிழ்கூறும் வலையுலகின் பார்வைக்கு வைக்கின்ற மரபிற்க்கேற்ப...இதோ!

ஏதோ பழைய ஞாபகத்தில் லாலி ரோடு, அரோமா பேக்கரின்னு போட்டாச்சு, எதேச்சையா அந்தப் பக்கம் போய் பார்த்தா அரோமா ஆராதனா-வா மாறிப்போச்சு. இதென்னடா பெரிய குளறுபடியா போச்சேன்னு கணிணி மையத்திற்கு ஓடியாந்து வர்றேன்னு சொன்னவங்க பேரெல்லாம் பார்த்து தனிமடல் போட்டு தொலைபேசி எண் வாங்கி ரயில்நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள கே.ஆர்.பேக்ஸ்க்கு சந்திப்பு மையத்தை மாத்தியாச்சு. அப்புறமும் ஒரே உறுத்தல் யாரும் நேரா லாலி ரோடுக்கே போய் ஏமாந்து வந்துருப்பாங்களோன்னு??!! ஒரே ஆறுதல் இதுவரைக்கும் யாரும் அப்படி மடலிட்டு திட்டாதது.

அடுத்தது என்னுடைய கைப்பேசி எண்ணை தெரிவிக்க முடியாமல் போனது அதனால் வரவேண்டுமென்று நினைத்தவர்களுக்கு இலகுவான தொடர்பு என்பது இல்லாது போயிற்று. இந்தக் குறைகளையும் மீறி சந்திப்புக்கு வருவதாய் சொன்னவர்கள்


புதுமாப்பிள்ளை ராசா
நாமக்கல் சிபி
குமரன் எண்ணம்
சுப்பையா வாத்தியார்
ப்ரியன்
சுதர்சன்.கோபால்
முரட்டுக்காளை
கோவை.ரவீ
சம்பத்

ப்ரியன் சேரநாட்டுக்கு திடீரென பயணிக்க வேண்டியிருந்ததாலும், எதிர்பாரா விருந்தினர் வருகையால் சுதர்சன்.கோபால்-ம் வரமுடியாது போயிற்று. முரட்டுக்காளை, கோவை.ரவீ, சம்பத் ஆகியோரை தொடர்பு கொள்ள விட்டுப்போனதால் அவர்களையும் சந்திக்க முடியாது போயிற்று அன்றைய தினத்தில். மேலும் சிலரும் கலந்துகொள்வதாய் இருந்து கடைசிநேரத்தில் முடியாது போயிற்று.

குமரன் எண்ணம் முதலில் ஆஜர்-ங்கோன்னாரு அப்புறமா கோவை ரெமோ - ஜெமோ சிபியும் சேர்ந்தார். பிரம்புகளை உடைக்கிற கண்டிப்பான வாத்தியார்கள் மத்தியில் நம்ம சுப்பையா வாத்தியார் ரொம்ப அன்பானவருங்க. தீபாவளி பலகாரங்களோடு அன்னிக்கு என்ன பேசலாம்-ன்ற அஜெண்டாவோட வந்தாரு. பல நல்ல காரியங்கள் பண்ணிக்கிட்டு இருக்காரு அதெல்லாம் பத்தி சொல்லிட்டுருந்தாரு. அஜெண்டாவோட வந்தவரு அதையெல்லாம் பத்தி பேசறதுக்குள்ள அர்ஜெண்டா கிளம்பிட்டாரு.

இன்னோரு டீ அடிச்சு முடிச்ச நிமிஷத்துல ராசா மல்லு வேட்டி கட்டி மாப்பிள்ளையா வந்தாரு. பல சரித்திர நிகழ்வுகளை சொல்லி தமிழ் மணம்வீசும் வரலாற்றுப் பாடம் எடுத்தாரு. குமரன் எண்ணத்திற்கும் - குமரனுக்கும் இடையே அடிக்கடி குழப்பிக்கிட்டேன் நான். நாமக்கல் சிபியும் பல விஷயங்கள் சொல்லிட்டுருந்தாரு. மறுக்காவும் டீ குடிச்சிக்கிட்டோம்.

மொத்தம் 60-70 மணித்துளிகள் நீடித்த சந்திப்பு எல்லாருக்கும் மனநிறைவை தந்ததாகவே நினைக்கிறேன். கடைசியா ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொண்டோம். (வாத்தியாரய்யா தந்த தீபாவளி பலகாரம் கடைசியா யார் கைக்கு போச்சு...என்ன இருந்துச்சு..எப்படி இருந்துச்சு) எல்லாருமே பொதுவா சொன்ன சில கருத்துக்கள்

* தனிமனித தாக்குதல்களை ரசிக்கமுடிவதேயில்லை
* கருத்து சுதந்திரத்திற்கும் வரையறைகள் இருக்கின்றன
* மத/இன/ஜாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்குமுன் அவரவர் சுயமதிப்பீடு செய்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்துவிடும்
* டோண்டு Vs போலிக்கு தீர்வாக கருதுவது - "Free-யா விடு மாமே" ன்னு கண்டுக்காம இருக்றதுதான்

நெடுநாள் முன் நடந்ததாலும், என்னுடைய இயல்பான ஞாபக மறதியாலும் இன்னும் சில-பல விஷயங்களை விட்டிருக்கலாம், வந்தோர் பின்னூட்டங்களில் சேர்க்கவும்.

விடுமுறையில் கணிணி பக்கம் நிமிஷக் கணக்கில்தான் செலவளிக்க முடிந்தது மேலும் மூன்று வார விடுமுறையில் வேலைகள் நிறைய சேர்ந்துவிட்டன எனவேதான் இந்த தாமதம். ஏண்டா போட்டிக்கு கதையெல்லாம் எழுத தெரியுது, இந்த சந்திப்ப பத்தி எழுத இவ்வளவு நாளான்னு கேட்பவர்களுக்காக... இன்னோரு தபா, மன்ச்சிக்கங்கபா!

இந்த சந்திப்பை பற்றி நான் என்ன நினைக்கிறேன்?
இதுகாறும் வெறும் பெயர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தேன். இனி அதனினும் மேம்பட்ட திருப்தி கிடைக்குமென்று நினைக்கிறேன்! இனி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ள திட்டம்!

அவ்ளோதான் இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!

35 comments:

நாமக்கல் சிபி said...

வாத்தியார் குடுத்த பலகாரத்தை (கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர் பாகு)என்கிட்டல்ல குடுத்துட்டுப் போனீங்க!

ரெண்டு வாரத்துக்கு ஜலதோஷம்.
நல்லா என்ஜாய்பண்ணினேன்.(ஸ்வீட்டையும்தான்)

வாத்தியார் குடுத்த அசைன்மெண்ட் எல்லாம் உங்ககிடேதான இருக்கு!
(அதாம்பா மீட்டிங்கோட அஜெண்டான்னு பிரிண்ட் அவுட் எடுத்துகிட்டு வந்திருந்தாரே)

நாமக்கல் சிபி said...

நீங்களே எஃப்.ஐ.ஆர் போடுவீங்கதான் காத்துகிட்டு இருந்தோம். போட்டுட்டீங்க.

மிக்க நன்றி.

இந்த சந்திப்பு இட்லி வடையாரின் ஊடுறுவல் இல்லாமல் நடைபெற்றது என்பதை குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஐயா போட்டோ எல்லாம் எடுத்துகிட்டோமே மெயிலில் எனக்காவது அனுப்பி வையுங்க.

Anonymous said...

//ஏண்டா போட்டிக்கு கதையெல்லாம் எழுத தெரியுது, இந்த சந்திப்ப பத்தி எழுத இவ்வளவு நாளான்னு கேட்பவர்களுக்காக... இன்னோரு தபா, மன்ச்சிக்கங்கபா!
//

இது மன்னிப்பு கேக்குற மாதிரி தெரியலையே! இந்தப் பதிவே ஓட்டுக் கேக்க கடைசி நேரப் பிரச்சாரம் மாதிரி இருக்கே!

:))))

எனிவே சந்திப்பு நல்ல முறையில் நடைபெற்றதா? என்னென்ன கட்டுரைகள் வாசித்தீர்கள்?

மெயின் சந்திப்பிற்குப் பிறகு 'குட்டி' சந்திப்பு நடைபெற்றதா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அப்புறம் யார் இதுன்னு குழம்பீடாதீங்க குமரன் எண்ணம் என்ற பெயரில் எழுதி கொண்டிருந்த அதே நபர் தான். ப்ரொபைல் மாற்றி இருக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

ஏனுங்க... உங்களை காணோம்னு ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தோம்

ஒரு வழியா வந்துட்டீங்க...

சந்திப்பு எல்லாம் சூப்பருங்கோ :-)

SP.VR. SUBBIAH said...

தாமதமாகப் பதிவு போட்டாலும்,உரிய தகவல்களோடுதான் போட்டிருக்கிறீர்கள் மிஸ்டர் ராசுக்குட்டி. பதிவில் அன்பானவருங்க(?) என்று அடியவனைப் பற்றி குறிப்பிட்டு எழுதியமைக்கு நன்றி!
நாமக்கல் சிபி ஷாருக்கான் மாதிரி ஜம்மென்று மோட்டார் சைக்கிளில் வந்து விட்டுப் போனார்
என்பதையும், ஈரோட்டுக்காரர் குமரன் எண்ணம் அரவிந்தசாமி மாதிரி 'பளிச்' என்றிருந்தார் என்பதையும் நீங்கள் குறிப்பிடாதது உங்கள் அடக்கத்தைக் காட்டுகிறது;))))))))))))))

அன்புடன்
SP.VR.சுப்பையா

Anonymous said...

நீங்க சொல்றதைப் பார்த்தா செந்தில் குமரன் என்பவர்தான்
நாமக்கல் சிபி, கொங்கு ராசா மற்றும் குமரன் எண்ணம் என்ற மூன்று புனைப் பெயரில் எழுதறாரு போலருக்கு!

ஏன்னா மூணு பேருக்குமே ஒரே புரொஃபைல்தான் வருது.

Anonymous said...

என்ன தான் சொல்லுங்க....சென்னை மிட்டிங் மாதிரி திரில்லிங்க இல்லிங்கண்ணா.....முகம் முன்னாடி நல்லா பேசி, அப்புரமா நக்கல் பண்ணி பதிவிட்டு, அத சாக்கா வச்சி பார்பனீய எதிர்ப்பு செய்து....இதெல்லாம் இல்லாத பதிவர் சந்திப்பு ஒரு சுவாரஸ்யமா?...

நீங்க என்ன பண்ணறீங்க பாலா கிட்ட ஒரு டியுஷன் எடுத்துக்கிட்டு, அப்புறமா அடுத்த கூட்டத்த கூட்டுங்க...நாங்க இட்லி-வடை, தோசை, சட்னி-சாம்பார், தயிர்சாதம்-மாவடு எல்லோரையும் அனுப்பி வைக்கிறோம்...

ராசுக்குட்டி said...

சிபி -> அஸைன்மெண்ட் அவுட் ஆஃப் சிலபஸ் சோ விட்டடிச்சாச்சு... ஆமா இட்லி வடையார் ஊடுருவல் உளுந்தம்பருப்பு இதெல்லாம் இல்லாம நடந்தது... சொல்ல விட்டுப் போச்சு!

குமரன் -> அனுப்பிச்சிடுறேன்...ஏன் ப்ரொஃபைல மாத்திட்டீங்க திடீர்னு...

போட்டியாளரே -> சின்ன லெவல்ல ஒரு கயமை செய்தாலும்... கண்டுபிடிச்சிர்ரீங்களே... சே இனி எச்சரிக்கையா இருக்கேன்! கட்டுரைகள் நோ நோ... குட்டி சந்திப்பு எனக்கு தெரிந்து இல்லவே இல்லை!

ராசுக்குட்டி said...

பாலாஜி -> என்னையும் தேடி ஒரு ஜீவனா... ஆஃபீஸ்ல கூட நம்மள தேடலீங்க... ஆமா வந்தாச்சு ஒருவழியா இனி இங்கதான்!

ராசுக்குட்டி said...

//நாமக்கல் சிபி ஷாருக்கான் மாதிரி ஜம்மென்று மோட்டார் சைக்கிளில் வந்து விட்டுப் போனார்
என்பதையும், ஈரோட்டுக்காரர் குமரன் எண்ணம் அரவிந்தசாமி மாதிரி 'பளிச்' என்றிருந்தார் என்பதையும் நீங்கள் குறிப்பிடாதது உங்கள் அடக்கத்தைக் காட்டுகிறது;))))))))))))))//

சுப்பையா சார் அவங்களுக்கும் சேர்த்து நான் அவையடக்கத்தோட இருந்துட்டேன்... அப்புறம் நான் லேட்டா வந்ததக் கூட இருட்டடிப்பு செஞ்சுட்டேன். அஜெண்டாவுல இருந்தத பேசாததால போடல அடுத்த மீட்டிங்குக்கு அந்த தலைப்புகள் இன்னும் உயிரோடு இருக்கும் :-)

ராசுக்குட்டி said...

சுட்டியைப் பார்த்தவரே இன்னோரு தபா பார்த்திருங்க இப்போ திருத்திட்டேன்

நாமக்கல் சிபி said...

கமெண்ட் போட முடியலையே!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
ஈரோட்டுக்காரர் குமரன் எண்ணம் அரவிந்தசாமி மாதிரி 'பளிச்' என்றிருந்தார்
///

வாத்தியார் ஐயா என்ன விளையாட்டு இது? என்னை வைச்சு இப்படி காமெடி பண்ணறீங்களே இது சரியா?

ராசுக்குட்டி said...

அனானி நண்பரே இன்னும் முழுதாக வலைப்பூக்கள் மேயவில்லை எனவே என்னென்ன கூத்து நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை.

//முகம் முன்னாடி நல்லா பேசி, அப்புரமா நக்கல் பண்ணி பதிவிட்டு, அத சாக்கா வச்சி பார்பனீய எதிர்ப்பு செய்து....இதெல்லாம் இல்லாத பதிவர் சந்திப்பு ஒரு சுவாரஸ்யமா?...//

அதானே எழுதின எனக்கே இதப் படிக்க சுவாரஸ்யம் இல்லை... அடுத்த முறை கிரைம் நாவல் மாதிரி சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த சந்திப்பில் (குறைந்தபட்சம் கலந்துகொண்டு) ஈடுகட்டிடுவோம்

பொன்ஸ்~~Poorna said...

ராசுக் குட்டி,
தப்பான நேரத்துல பதிவு போட்டுட்டீங்க.. காத்திருந்து காத்திருந்து எல்லார் கவனமும் மாறிப் போச்சு :))

Anonymous said...

மத்தவங்க சுட்டியெல்லாம் செந்தில் குமரன் என்றே இருக்கே! அது எப்படி?

அப்போ செந்தில் குமரன், சுப்பைய்யா வாத்தியார், முரட்டுக் காளை, கோவை ரவீ, சுதர்சன் கோபால், ப்ரியன் எல்லாரும் ஒரே ஆளா?

நாமக்கல் சிபி said...

எல்லாரும் கவனிக்க!

//நாமக்கல் சிபி ஷாருக்கான் மாதிரி ஜம்மென்று மோட்டார் சைக்கிளில் வந்து விட்டுப் போனார்
//


எங்க வாத்தியாரு! நல்ல வாத்தியாரு!

ராசுக்குட்டி said...

சிபி -> வந்துடுச்சே... என்ன பிராப்ளம்??

செ.கு -> வாத்தியார் சொன்னா சரியாத்தான் இருக்கும்

நாமக்கல் சிபி said...

//கமெண்ட் போட முடியலையே! //

என்றுதான் சொன்னேன். சோம்பலாக இருந்தது! வேறொன்றும் இல்லை!

Anonymous said...

//நாமக்கல் சிபி ஷாருக்கான் மாதிரி ஜம்மென்று மோட்டார் சைக்கிளில் வந்து விட்டுப் போனார்
//


ஓ! இப்பொழுதெல்லாம் கோவையில் சாமியார்கள் ஷாருக்கான் போல உடையணியத் துவங்கி விட்டனரா?

ப்ரியன் said...

வணக்கம் ராசு,

சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்.

கோவைச் சந்திப்புப் பற்றி பதிவேதும் இல்லாததால் சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என்ற சந்தேகம் வந்தது.இப்பதிவைப் பார்த்ததும்தான் நிம்மதி :)

அடுத்த சந்திப்பு எப்போது?பொங்கல் சாப்பிட கோவை வருவேன் அடுத்து ;)

Anonymous said...

பரவாயில்லை விடுங்க.....நாளை, அடுத்த நாள், அதற்கடுத்த நாள் அப்பிடின்னு ஒரு பதிவிட்டா போதும்.

Anonymous said...

தலைப்புச் செய்தி
---------------

கோவை சந்திப்பில் கலக்கல் கபியின் பலகார ஊழல் அம்பலம்!

கோவையில் சந்திக்கும் இடம் அறிவித்ததில் குளறுபடி! அனானி அன்பர்கள் கொதிப்பு!

வாத்தியார் வெளிநடப்பு! திடுக்கிடும் பின்னணி!

உங்கள் நண்பன்(சரா) said...

யோவ் ராசுக்குட்டி!
அங்க சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விவாதங்கள் நடந்துக்கிட்டு இருக்கும் போது தானா உமக்கு நம்ம கோவை சந்திப்பு நினைவுக்கு வரனும், இருந்தாலும் அருமை!
வலைப்பதிவு நடந்த சமயம் கோவையில் இருந்தும் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகின்றேன்! அடுத்த முறை கண்டிப்பாக கலந்து கொள்ள முயற்சிக்ன்றேன்!

//நாமக்கல் சிபி ஷாருக்கான் மாதிரி ஜம்மென்று மோட்டார் சைக்கிளில் வந்து விட்டுப் போனார்
//

ஆனாலும் வாத்திக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு ஆகாது!:))))))))


அன்புடன்...
சரவணன்.

ராசுக்குட்டி said...

பொன்ஸ் -> //ராசுக் குட்டி,
தப்பான நேரத்துல பதிவு போட்டுட்டீங்க.. காத்திருந்து காத்திருந்து எல்லார் கவனமும் மாறிப் போச்சு :)) //

அதான் ஒரு அனானி நண்பர் தலைப்பு செய்தியெல்லாம் போட்ருக்காரே பார்ப்போம் மற்றவர்களின் கவனமும் பெறுகிறதா என... எனினும் இது சின்ன சந்திப்புதானே சென்னை அளவு இல்லையே!

சுட்டி பார்த்தவரே...திருத்தப்பட்டு விட்டது மறுபடியும்!

சிபி -> 5௰-10 குடுத்து எதுவும் வாத்தியார சொல்ல சொல்லலயே

ராசுக்குட்டி said...

//கமெண்ட் போட முடியலையே! //

என்றுதான் சொன்னேன். சோம்பலாக இருந்தது! வேறொன்றும் இல்லை!

அய்யா இது குசும்பா நக்கலா?

கோவை ரவீ said...

கூட்டத்திற்க்கு வரமுடியாததற்கு வருந்துகிறேன் ராசக்குட்டி அய்யா அவர்களே... அடுத்த முறை ஆஜாராகின்றேன் என்னை எதிர்பார்த்ததிற்க்கும் என் பெயரை பதிவில் குறிப்பிட்டதற்கும் மிக்க நன்றி. மேலும் தகவல்களுக்கு இந்த மின் முகவரிகளை உபயோகிக்கவும்.

rraveendran_citcivil@yahoo.com
covairavee@sify.com

--கோவை ரவீ

ராசுக்குட்டி said...

அடுத்த சந்திப்பு எப்போது?பொங்கல் சாப்பிட கோவை வருவேன் அடுத்து ;)

ப்ரியன் கரும்போடு கொண்டாடுங்க...

அப்புறம் கேரளா விஜயம் வெற்றிகரம்தானே க.பி.க. விலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டதா

நாமக்கல் சிபி said...

//அய்யா இது குசும்பா நக்கலா? //

அதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்!

ராசுக்குட்டி said...

//மூக்கு வேர்த்தவன் said...
தலைப்புச் செய்தி
---------------

கோவை சந்திப்பில் கலக்கல் கபியின் பலகார ஊழல் அம்பலம்!

கோவையில் சந்திக்கும் இடம் அறிவித்ததில் குளறுபடி! அனானி அன்பர்கள் கொதிப்பு!

வாத்தியார் வெளிநடப்பு! திடுக்கிடும் பின்னணி! //

அப்படிப்போடு... இப்படித்தான் இருக்கணும் தலைப்புச்செய்தி நான் ஏதோ நச நசன்னு எழுதிட்டேன்... இது செம hot!

ராசுக்குட்டி said...

நண்பரே சரவணா... அங்கதான் இருந்திங்களா சொல்லியிருந்தா எப்படியாவது இழுத்துருப்பமே... பரவாயில்லை

கோவை.ரவீ -> அடுத்தடுத்து நடக்கும் என்று நினைக்கிறேன்... கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்!

அடுத்த முறை நிச்சயம் சந்திக்கலாம்!

supersubra said...

அடுத்த முறை கூட்டம் போடும் பொழுது மறக்காமல் என்னையும் கூப்பிடுங்கள்.

supersubra@gmail.com

Anonymous said...

i have no idia wut u r sayin!