Monday, August 28, 2006

27 : நன்றி...நன்றி...நன்றி...!

Photobucket - Video and Image Hosting


படித்து வாக்களித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், படைப்புகளை பட்டியலிட்டு விமர்சித்தவர்களுக்கும் மற்றும் பல ரகசிய அபிமானிகளுக்கும், கோடானு கோடி நன்றிகள்.

என்னை தொடர்ந்து ஊக்கப் படுத்தி, என் கனவுகள் சிலவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்த அனிதா, மற்றும் பிரச்சார பீரங்கி கோகோவுக்கு சிறப்பு நன்றிகள்.

முதல் பத்தில் என் படைப்புகள் இரண்டு இடம் பெற்றது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. வாசகர் வாக்கெடுப்பில் என்னுடைய விமர்சனப் பதிவு கூட 11-வது இடம் பிடித்தது, தொடர்ந்து எழுத என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது! அதுவும் 84 படைப்புகளில் என்று சிறு குழந்தை போல் கணக்கு வேறு போட்டுக் கொள்கிறேன்!

பதிவிட ஆரம்பித்து ஓரிரு மாதங்களில் பரிசும், இத்தனை நண்பர்களும் பெறுவதற்கு, என் பெற்றோரோ அதற்கும் முன்னோரோ செய்த புண்ணியம்தான் காரணமாய் இருக்க வேண்டும்.

தலை பத்தில் வந்த எனது படைப்புகள்,
மூன்றாமிடம் - உறவும் பிரிவும்!
ஏழாமிடம் - பாதுகாப்பு உறவு - போதும் காப்பு உதறு

* இத்தருணத்தில் முடிவுகள் பற்றி ஒரு சிறு கருத்து!

என்னை மிகவும் பாதித்த கதை சொக்கலிங்கத்தின் மரணம். நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்றென என்னால் தைரியமாக சொல்ல முடியும். நடுவர் குழுவின் பெரும் மதிப்பை (85%) பெற்றிருந்தும் 5-வது இடம்தான் பிடிக்க முடிந்தது.

(இதற்கு முந்தைய முறைப்படி இந்த படைப்பு 10-வது இடத்திலேயே தங்கி இருக்கும் என்ற வகையில் இந்த முறை பரவாயில்லை)

மற்ற படைப்புகள் (11 - 84) ஓரிரு வாக்குகள் அதிகம் பெற்றிருந்தால் இந்த நல்ல கதை கவனிக்கப் படாமலே கூட போயிருக்கும்! ஏனெனில் முதல் 10 படைப்புகள் மட்டுமே, நடுவர் குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. படைப்புகளின் வளர்ந்து வரும் எண்ணிகையை கவனத்தில் கொண்டு 25% படைப்புகளையாவது பரீசிலிப்பது பொருத்தமாக இருக்கும். அடுத்த மாதத்தில் நடுவர் குழு தீர்ப்புகள் 30% முக்கியத்துவம் பெறப் போகிறது என்பதையும் இணைத்துப் பார்ப்பது அர்த்தம் தரும்.

மற்றபடி போட்டியிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். வெற்றியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டும்!

அனைவர் திறனும் மேலும் மேலும் சிறக்க....

கனவுகள் மற்றும் நம்பிக்கையுடன்!

4 comments:

கதிர் said...

வாழ்த்துகள் ராசுக்குட்டி!

//என்னை மிகவும் பாதித்த கதை சொக்கலிங்கத்தின் மரணம். நான் சமீபத்தில் படித்த மிகச் சிறந்த கதைகளில் ஒன்றென என்னால் தைரியமாக சொல்ல முடியும்//

எனக்கும் அதே கருத்துதான். இதுதான் முதலிடத்தை பிடிக்கும் என்றே எண்ணியிருந்தேன்.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் ராசுக்குட்டி!

Udhayakumar said...

ராசுக்குட்டி, கலக்கிட்டீங்க...

ராசுக்குட்டி said...

நன்றி தம்பி, கப்பி பய, உதய்!