Tuesday, August 01, 2006

10 : சமீபத்தில் நாங்கள் பார்த்த திரைப்படங்கள்


ஆறு இண்டெர்வெல், ஒரு கைமுறுக்கு தேங்காய் பர்பியோடு மண்ணு குவிச்சு டூரிங் டாக்கிஸ்-ல படம் பாக்றதுல ஆரம்பிச்சு, ஆர்த்தி.. ஆர்த்தி... ஆர்த்தி-ன்ரச்ச கை தட்டி வந்துருக்ற அம்முணிங்கள குஷிப் படுத்திட்டு படம் பார்க்கிற கோவை தொட்டு, தாம்பரம் வித்யா, குரோம்பேட்டை வெற்றி ராகேஷ், பல்லாவரம் ஜனதா, லட்சுமி... அபூர்வமா தேவி..அதவிட அபூர்வமா சத்யம்-னு கலைச்சேவை செஞ்ச காலத்துலயும் (மணீஸ்... ஜோதி-லாம் போனதில்லீங்னா, நல்ல பசங்க நாங்க)... அதுக்கப்றம் போனா க்ளாஸான தியேட்டர்க்குதான் மச்சி போகனும்னு பூனே ஐனாக்ஸ், கோவை செந்தில்-குமரனில் கிங்-ஸ், சிங்கையில் யிஷுன் அப்டின்னு தேடி தேடி போன நேரங்களிலும்... ச்சீ எல்லாம் குப்ப படம்டா இனிமேல் CD எடுத்தே பார்த்துக்கலாம்-னு முடிவெடுத்த கணங்களிலும் எங்ககிட்ட மாறாம இருந்த ஒரே விசயம், படம் பார்க்கின்ற ஆர்வம்!

படம் எடுத்த இயக்குனர், தயாரிப்பாளராலேயே பாதி படத்துக்கு மேல் உக்கார முடியாத படங்களைக் கூட 'விக்கோ' பூசுமஞ்சள் தூள் விளம்பரத்திலிருந்து வணக்கம்/சுபம் போடும் வரை உட்கார்ந்து பார்க்கும் ரசிக சிகாமணிகள் நாங்கள். சில படங்களை பார்த்த பிறகு நாங்கள் பேசிக் கொள்வது இப்படித்தான் இருக்கும்

"யப்பா பின்னிட்டாண்டா டைரக்டர்... என்னா ஸ்கிரிப்ட்... "
"ஆர்டிஸ்ட் செலக்க்ஷன சொல்டா... இவந்தான் இந்த கேரக்டருக்குன்னு எப்டிதான் ஃபிக்ஸ் பண்றாய்ங்களோ"
"ம்யூசிக்... படத்துல ஃபர்ஸ்ட்-ல வர்ற பாட்ட சும்மா ஒரு நூறு தடவ கேட்ருப்பமா...இன்னும் சலிக்கல பாரேன்"
"ஓடற எல்லா தியேட்டர்லயும் 100-150 ன்னு வருஷக் கணக்கெல்லாம் தாண்டி ஓடுதுன்னா சும்மாவா"
"மவனே கேமரா பத்தி சொல்லாம விட்ருவ... ஹீரோயின் ஆப்பிள் கடிக்கும்போது அந்த பல் வரிசை-ய எடுத்துருப்பான் பாரு...ம்ம்மா அல்ட்டிடா"
"கரும்ப பல்லாலயே கடிக்கிற ஃபைட் சீன் கூட சூப்பர்ரா... ஆனா எத்தன பேர் இந்த ஷாட்-லாம் இப்டி அனுபவிச்சு பார்த்துருப்பான்ற"
"கரெக்ட்றா ஃகன்ஸ்(Gans)... பேசாம செகண்ட் ஷோ இருந்து அந்த விக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்த மட்டும் பார்த்துட்டு போயிரலாம்... என்ன சொல்ற"
"போன ஷோவிலயே அப்டி போயிருந்தோம்னு வை அடுத்து வந்த அந்த கொடுமையில இருந்து தப்பிச்சிருக்கலாம்... சரி வா வா..."

ஆனாலும் அடுத்து அதே இயக்குனர் (அ) நடிகரின் படத்துக்கு கொஞ்சம் கூட கூச்சமில்லாம போய்ட்டு வருவோம்... இப்டியாப்பட்டவங்களோட விமர்சனத்தையும் நீங்க படிப்பிங்கன்னா... பின்னூட்டத்துல சும்மா ஒரு ;-) போட்டுட்டுப் போங்க

சமீபத்தில் நாங்கள் பார்த்த திரைப்படங்கள்
---------------------------------------

  1. இம்சை அரசன் 23ம் புலிகேசி
  2. பாரிஜாதம்
  3. நாளை
  4. புதுப்பேட்டை
  5. திருட்டுப் பயலே
  6. பட்டியல்
  7. அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது
  8. பச்ச குதிர
  9. திருப்பதி
  10. கொக்கி
  11. உயிர்
  12. ஜெர்ரி
  13. சித்திரம் பேசுதடி

14 comments:

VSK said...

:)

மகேஸ் said...

பரங்கிமலை ஜோதி தியேட்டரை விட்டுட்டீங்க போலத் தெரியுதே? :))

நாமக்கல் சிபி said...

பேசாமல் நீங்க சமீத்தல வந்த படங்கள்ல பாக்காத படத்தை போட்டிருக்கலாம் ;)

எழுதுங்கள் படிக்க நாங்க இருக்கோம்...

ராசுக்குட்டி said...

SK>> சிரிப்பான் போடுங்கன்னு சொன்னது வாஸ்தவம்தான் அதுக்காக இப்படியா

மகேஸ்>> நாங்க நல்ல பசங்கன்னு சொல்லியிருந்ததை கவனிக்கலயோ!

வெட்டிப்பயல்>>3 மாசம் ஷாங்காயில் மண்டை காய்ந்ததில் வந்ததும் வரிசையாக பார்த்து விட்டேன். ஜூலை 10-ல் இருந்து பார்த்த படங்கள் இவை ;-)

துளசி கோபால் said...

:-))))))))))))))))

மனதின் ஓசை said...

:-)

G.Ragavan said...

விக்கோ வஜ்ரதந்தி விளம்பரம் இன்னமும் அதேதான். ஆனால் ஒரு மாதிரி லைவ்லியான விளம்பரம்.

சமீபத்துல நான் பாத்த படங்கள். reverse chronological order.

1. The Hobbit (1977 version. waiting for Peter Jackson's version this year)
2. Pirates of the caribean
3. இம்சை அரசன் 23ம் புலிகேசி
4. Superman
5. XMen-3
6. Davinci Code

(இதுக்கு மேல நினைவில்லை...பெங்களூர்ல பாத்ததத்தான் சொல்லனும்)

Anu said...

RAASU
neenga paakkadha padatthoda list chinnadha irukkum pola
idula neengalum gansum pesina madiri unga vimarsanthhulayum irundha
nalla iruukum.atleast padam nalla illattium padatthoda vimarsanam sira(ri)ppa irukkenu
sandhoshappadalam

ராசுக்குட்டி said...

சிரிப்பான் போட சொன்னது தப்புதான்... தம்பி, துளசி கோபால், மனதின் ஓசை

ராகவன்...நீங்களும் நம்ம ஆள்தான் போல எல்லா படங்களும் கலந்து கட்டி பார்த்திருக்கிறீர்கள்

அனிதா... கணேஷ் கால்ஷீட் கிடைக்க மாட்டெங்குது :-(

வரா -> இப்படியெல்லாம் தேர்ந்தெடுத்து பாத்தா selective amnesia வந்துரும் ;-)

Anonymous said...

தமிழ் சினிமா ரொம்பவே உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்குங்க!

Unknown said...

சென்னையில் நான் படம் பார்த்த திரையரங்குகள் ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் சாந்தி மட்டுமே.

சமீபத்தில் எந்த புதுப்படமும் பார்க்கலை. கிறிஸ்துமஸ் விடுமுறையில் பார்க்கணும்னு பெண்டிங் வெச்சிருக்கேன்.

நாமக்கல் சிபி said...

நான் சமீபத்தில் பார்த்தவை

இம்சை அரசன் - (கோவை செந்தில் குமரன்)

இம்சை அரசன் (இரண்டாம் முறை)

(கோவை சிவசக்தி)

ராசுக்குட்டி said...

செல்வன் -> //ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் சாந்தி மட்டுமே// ஆச்சரியமா இருக்கு

//விடுமுறையில் பார்க்கணும்னு பெண்டிங் வெச்சிருக்கேன்// விடுமுறையில் மட்டும்தான் படம் பார்ப்பிங்களா...

சிபி -> //இம்சை அரசன் (இரண்டாம் முறை)// நல்ல படம்தான் மேலும்கூட பார்க்கலாம்

Unknown said...

:)