Saturday, August 26, 2006

25 : வேட்டையாடு விளையாடு

Photobucket - Video and Image Hosting
நேற்று வே.வி சிங்கையில் வெளிவந்து விட்டது என்று தெரிந்த பின்னும் வேலையென்ன ஓடும், பற்றாக்குறைக்கு வெள்ளிக்கிழமை வேறு. சர சரவென செய்தி பரப்பி 40+ டிக்கெட் வாங்கி வர ஏற்பாடு செய்தாயிற்று.

5-ம் 10-மாய் வெவ்வேறு இடங்களில்தான் இருக்கை கிடைத்தது. அதன்பின் திடீரென Mumbai X press நியாபகத்திற்கு வந்து இம்சித்தது, ஏதேனும் விமர்சனம் படித்துவிட்டு போயிருக்கலாமோ! எனினும் கவுதமின் வரலாறு (மின்னலே, காக்க காக்க) நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது.

சரி 'துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு' என்று யிஷுன் ஜி.வி சென்று அமர, படம் ஆரம்பித்து விட்டது.

எடுத்த எடுப்பிலே சண்டை, பாடலுன் பெயர் என்று வளமை மாறாத தொடக்கம்தான். இருந்தாலும் ஆரம்பத்திலேயே கீரணூரில் ஒரு பெண் கொலை அதை விசாரிக்கும் பணியில் கமல் என்று நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறார்.

போலீஸ் உயர் அதிகாரி பிரகாஷ்ராஜ், மகளாம். எனினும் எடுத்தவுடன் வருவதால் பிரகாஷ்ராஜ் அழுகை சற்றே மிகைப் பட்ட நடிப்பாகத்தான் தெரிகிறது! மகளின் நினைவுகளை மறக்க நியூயார்க் செல்லும் பிரகாஷ்ராஜ் அங்கேயே வைத்துக் கொல்லப்பட அது தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்காக நியூயார்க் செல்ல, அங்கே ஜோ-வை சந்திக்கிறார். (அட போலீஸ் வேலையில் கூட on-site!)

ஜோதிகாவை தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றிய பின் வரும் வசனம்
கமல் : ராகவன்...
ஜோ : ஆராதனா...
கமல் : ஏன்
என்ன மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி வசனமிருக்கு, நானும் ஜோவும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் இந்த வசனத்தை சொல்ல ஒரு 'அட' போட்டு படத்தோடு ஒன்றி விட்டேன். இதற்கு மேல் கதையை சொல்லக் கூடாது, படம் வெளியாகி இரண்டாம் நாளில்... அது தப்பு!

கற்க கற்க... ஒரு peppy song. சில இடங்களில் பரத்வாஜ் குரல் போன்று ஒலித்த பாடலை பாடியது தேவன், திப்பு மற்றும்...

பார்த்த முதல் நாளாய் இனிமை, பாம்பே ஜெயஸ்ரீ குரலில் பழைய பாடல்களை நினைவுக்கு கொண்டு வந்து விடுகிறது, பாடலில் கமல்-கமலினி முகர்ஜி அழகு. பாடல்களில் அவ்வளவாய் ஈர்க்காத ஹாரீஸ் ஜயராஜ் பிண்ணனி இசையில் திருப்தி படுத்தி விடுகிறார்.

அது யாருப்பா கமலுக்கு வயசு தெரியறா மாதிரி ஒப்பனை செய்து விட்டது. மற்ற உடைகளில் தெரியும் வயது, போலீஸ் சீருடை அணிந்ததும் மறைந்து விடுகிறது. மிடுக்கும் கம்பீரமுமாய், கமல் பாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்.

அழகான பெண்களை பாதியிலேயே கொன்று விடும் தமிழ் இயக்குனர்களிடமிருந்து கமலினியை (கயல்விழி) காப்பாற்றுவது கடினம்தான்.

இடைவேளை வரை தடதடவென பயணிக்கும் கதை, இடைவேளைக்கு அப்புறம் லேசாக தொய்வடைந்து விடுகிறது. முக்கியமாக உயிரிலே... பாடல், கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில் அவ்வளவு மெதுவாக ஒன்று தேவைதானா? அதை ஒரு நாலு வரிப்பாடலாக முடித்திருந்தால் மனதில் இசை தங்கியிருந்திருக்கும் வெளியே வந்து தேடிக் கேட்டிருப்போம் அந்த பாடலை நிச்சயமாக.

காக்க காக்க படத்திற்கும் வேட்டையாடு விளையாடுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை பட்டியலிடுவதா, இல்லை வேறுபடும் இடங்களை சுட்டுவதா என்று தெரியவில்லை. ஒரு வேலை இது மற்றுமொரு Police Story என்பதால், இருக்கலாம். ஆனால் இயக்குனருக்கு சில பெயர்களை பிடிக்கும் என்பது தெரிகிறது, உ.தா. இளா, மாயா (அமுதன் கூட கேட்டது போல் உள்ளது)

ஜோ கூட மாயா டீச்சர் போல எப்போதும் ஒரு மென்சோகத்தோடே வலம்வருகிறார்!

இன்னும் பேசலாம் இந்தப் படத்தை பற்றி... வசனங்கள், வில்லன்களைப் பற்றியும் நீங்களும் பார்த்துட்டு வாங்க அப்புறம் விவாதிப்போம் நிறைய!

இப்போதைக்கு வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா!

10 comments:

ரவி said...

///ஏதேனும் விமர்சனம் படித்துவிட்டு போயிருக்கலாமோ!///

என்று சொல்லிவிட்டு, நீங்கள் எழுதிய விமர்சனத்தில் கதையை துக்ளியூண்டு வைத்தால் - என்ன செய்ய ?

பாக்கலாமா - பாக்கப்படாதா ?

வசந்தன்(Vasanthan) said...

கதையைச் சொல்லாததுக்கு கோடி நன்றி.

ராசுக்குட்டி said...

டிஸ்கியாத்தான் ஒரு பதிவே போட்டுறக்குறனே

சமீபத்தில் நாங்கள் பார்த்த திரைப்படங்கள்

அதுனால என்ன கேட்டா பார்க்கலாம்னுதான் நான் சொல்லுவேன்! ;-)

மஞ்சூர் ராசா said...

விமர்சனம் பரவாயில்லை.
ரவி சொல்றமாதிரி, பாக்கலாமா, வேண்டாமா?

குழப்பறீங்களே...

மஞ்சூர் ராசா said...

மடல் அனுப்புன பின்னாலெ உங்க மடலெ பார்த்தேன். சரி பாத்துடுவோம்....

Anonymous said...

கமல் படம் எப்படி இருந்தாலும் அவருக்காகவே ஒரு தடவை பார்க்கலாம். உண்மையிலேயே அவர் "The One in the industry"

நெல்லைக் கிறுக்கன் said...

வேந்தன் சொன்ன மாதிரி கமலுக்காக ஒரு தடவ கண்டிப்பா பார்க்கலாம்.

ILA (a) இளா said...

அட நமக்கு முன்னாடியே ஒரு விமர்சனமா?
இதையும் பார்க்கலாமே

ராசுக்குட்டி said...

மஞ்சூர் ராசா, வேந்தன், நெல்லைக் கிறுக்கன்... எல்லோரும் கண்டிப்பா பாக்கலாம்... தியேட்டரிலே பார்ப்பது இன்னும் சிறந்தது!

ராசுக்குட்டி said...

பாத்துட்டேன் இளா பாத்துட்டேன், btw உங்களோட முழுப் பேர சொல்லிருங்க... படபடப்பு கொஞ்சம் குறையுதா பாக்கலாம்.