Sunday, August 27, 2006

26 : தேன்கூடு முடிவு கள் கிடைச்சாச்சு!

Photobucket - Video and Image Hosting

என்னண்ணே ஒரு வழியா முடிவுக்கு வந்துருச்சு, மாதாந்திரப்போட்டி. வெற்றி-ன்றது போதை தருவது என்று ஞானிகள் பலர் சொன்னாலும், ஞானசூன்யமான நமக்கு அது லேசில் புரிந்து விடுகிறதா என்ன? போதை தருவதை பெறுவதே வெற்றியென்றாகி விட்டது நமக்கு!

என்னடா கோகோ, யார்றா ஜெயிச்சா சொல்லுடா... சொல்லு! ரொம்ப ஆர்வமா இருக்கு

வெற்றியாளர்(கள்) விவரம் கிடைத்து விட்டது. ஒரு போட்டியில் வெற்றி பெருபவர் சிலரே, தோல்வி அடைபவர்கள்தான் அனேகம். இந்தப் போட்டியில் மட்டுமல்ல ஜனநாயக தேர்தலில் கூட அவ்வாறுதானே நேர்கிறது. எனினும் பாதிப்படைபவர்களையும், அவர்களின் எண்ணிக்கையையும் கவனத்தில் வைத்துக் கொண்டு வெற்றியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பாராட்டுக்களை தராமல் இருப்பது எவ்விதத்தில் சரி என்பது தெரியவில்லை.

என்னடா ஏதோ ஞானி மாதிரி பேசற. பிரச்சாரம் பிரச்சாரம்னு வெயில்ல அலைஞ்சியே அதுல எதுனா ஆயிடுச்சா? எதற்கு வளவளவெனப் பேச்சு, வெற்றியாளர் யாரென்று தெரிவித்தால் என்ன?

வெற்றியாளர் ஒரே ஒருவரின் புகைப்படம் மட்டும் கிடைத்திருக்கிறது,

எப்படிடா தம்பி, சாம்புவுக்கே தெரியாத விடயம் உனக்கெப்படி கிடைத்தது?

ஒற்றரிந்த விவரங்கள் பிறகு, இப்போதைக்கு வெற்றியாளரை இங்கு சுட்டி பார்த்துக் கொள்ளுங்கள்.

என்னடா சரியாக தெரியலையே... படம்

அது உங்கள் பாடு, நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். அவர் வெற்றிக் கலயத்தை எப்படி கைப்பற்றினார் என அவரிடம் கேட்டதற்கு சொன்ன பதிலை மட்டும் கீழே தர்றேன்!

கோகோ : எப்டிண்ணே புடிச்சீங்க...
அவர் : ஆங்... புகைப் போட்டு புடிச்சேன்

என்னடா, வைதேகி காத்திருந்தாள் நக்கலா?

சரி நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன். இவர் வீட்டு தென்னை மரத்தில் 'கள்' கலயம் கட்டி வச்சுருந்தாராம். 'கள்' கலயம் நிறைய சேர்ந்த பின்னும் அதை எடுக்க முடியவில்லையாம், ஏன்னா கலயத்திற்கு சற்று கீழே தேனீக்கள் கூடு கட்டி விட்டதாம். மாதாந்திரமாக காத்திருந்துவிட்டு வேறு வழியின்றி புகை போட்டு கலைத்து விட்டு, கலயத்தை கைப்பற்றினாராம் Brave Heart மெல் கிப்ஸனுக்கு ஈடான இவ்வீரர்!

என்னடா சொல்ற?

தென்னை மரத்திலெப்படி தேன்கூடு என்று கேட்கிறீர்களா, நானும் நம்பவில்லை இந்த படத்தை பார்க்கும்வரை ;-)

அடிங்...

என்னது திட்றதுக்கு வார்த்தை தேடிட்ருக்கீங்களா, தேடிட்டே இருங்கண்ணா...

எல்லோருக்கும் இனிய

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ர்ட்ட்ட்ட்டா!

7 comments:

கோவி.கண்ணன் [GK] said...

ராசுக்குட்டி...!

கள்ளா ? வர்ரேன்

சரக்கு அடிச்சிட்டுவந்து கவனிக்கிறேன் !

:)

கதிர் said...

யோவ் கோகோ,

தென்னை மரத்திலெப்படி தேன்கூடு என்று கேட்கிறீர்களா, நானும் நம்பவில்லை இந்த படத்தை பார்க்கும்வரை ;-)

அது தென்னை மரமா?

என்ன ஆச்சுயா உமக்கு?

ராசுக்குட்டி said...

கோவி.கண்ணன்,
நீங்களும் நம்ம கேஸ்தானா மணி 3:40 ஆயிடுச்சே இப்போ...

ராசுக்குட்டி said...

மெய்யாலுமே அது தென்னை மரந்தாப்பா தம்பி!

பார்த்தா தெரியலயா என்ன, ரொம்ப close-up shot-ஆ போச்சுதோ!

கதிர் said...

அந்த ரெண்டாவது சுட்டில இருக்கற படத்தை சொல்றேன்.

எங்கூர்ல அப்டி இல்லயோ என்னவோ?

//பார்த்தா தெரியலயா என்ன, ரொம்ப close-up shot-ஆ போச்சுதோ! //


இது வேறயா!!

ராசுக்குட்டி said...

வுடுங்க தம்பி... நான் வேற யாரையாச்சும் சாட்சி சொல்லக் கூப்பிடுறேன்....

தமிழ்கூறும் நல்லுலகில் தென்னை மரம் தெரிஞ்சவுங்க ஒருத்தர் கூடவா இருக்க மாட்டாங்க!

Anonymous said...

thennai marathula thealnnu than kelvi, ippo then kooduma? sabash sariyaana potti.