Thursday, August 17, 2006

20 : 'கீதா' உபதேசம்

Photobucket - Video and Image Hosting
எதை நீ படித்தாய்
மறந்து போவதற்கு

எதை நீ புரிந்துகொண்டாய்
பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்
வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ
அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ
அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது

இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்.

சம்பவாமி யுகே யுகே!

கோகோஎன்னண்ணே, டிஸ்கி-ல ஓசிப்பதிவுன்னு ஒத்துக்குவீங்களா... இல்ல... நான் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு வண்டவாளத்த எல்லாம் தண்டவாளத்துல ஏத்தனுமா!

ரா.கு: ஆகா, தமிழ்கூறும் நல்லுலகுக்கு உன்னை அறிமுகப்படுத்தி ஒரு துரோகம் செய்துவிட்டேன். வலைப்பூ ஆரம்பிக்க வச்சு இன்னொருக்கா தப்பு பண்ண மாட்டேன் சாமீ! நன்றி ரவிக்குமார் (எனக்கு இத அனுப்பி வச்சதுக்கு)

13 comments:

Anonymous said...

சுப்பர் அண்னே..
/எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ
அது நாளை மற்றொருவனுடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடுகிறது/

அது உண்மைதாண்னே.

/இதுவே கல்லூரி நியதியும்
ஃபிகர்களின் குணாம்சமும்./
ஆகா என்ன ஒரு அற்புதமான சிந்தனை. வாழ்க நீர் எம்மான், வாழ்க நின் கொற்றம்.

குமார்

ராசுக்குட்டி said...

நன்றி குமார்!

கடமையை செய்வோம், பலனை எதிர்பார்க்காமல்!!

Anonymous said...

ராசுக்குட்டி பாவா..ஸ¥ப்பரா உன்னதி பாவா. நாக்கு தெலிசி இட்ல ஒக்கரேனு ராயலேது, பாவா! Keep it up Paavaa!
கிருஷ்னாயுடு நமஹ!

Anu said...

rommmmba mukkiam...

சிறில் அலெக்ஸ் said...

:)

நல்ல கற்பனை.

ஜயராமன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

வந்துட்டாருய்யா வந்துட்டாரு... பகவத்கீதையே சுத்த ஃபிராடு... அதை ஒருத்தர் கிண்டல் பண்ணிட்டாராம்... வந்துட்டாரு காவி கொடி பிடிச்சுகிட்டு!

ராசுக்குட்டி said...

அனானி பாவா நாக்கு தெலுகு ராலேது!
அனிதா -> எவ்ளோ முக்கியமான கருத்து இது... இப்டி சொல்லிட்டீங்க
சிறில் -> மடலில் வந்ததை சிறு மாற்றங்களுடன் தந்துள்ளேன் அவ்வளவே... முதலில் எழுதியவருக்கு நல்ல கற்பனை வளம்தான்!
ஜயராமன் -> முதல் வருகை என்று நினைக்கிறேன்... நல்வரவாகுக. நான் பகவத்கீதையை படித்ததில்லை எனினும் அதிலுள்ள் கருத்துக்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த நகைச்சுவைத் துணுக்கு அதன் புகழுக்கோ, அது ஏற்படுத்தும் பிம்பங்களுக்கோ எந்த வித பாதிப்பும் உண்டு செய்யாதென்பது எனது கருத்து.
அனானி -> இதை நகைச்சுவையென்றே வகைப்படுத்தியிருக்கிறேன்... அரசியல் வண்ணம் பூச வேண்டாமே இங்கே!

Geetha Sambasivam said...

பேரைப் பார்த்துட்டு வந்தேன், நல்லாவே கலாய்க்கிறீங்க போங்க! :D

Anu said...

why no comments from COCO :)

Unknown said...

யாரு அந்த கீதா அதச்சொல்லுங்க முதல்ல ?

ராசுக்குட்டி said...

கீதா சாம்பசிவம் -> சிபியின் 'புகை உடலுக்கு பகை' யிலேயே உங்களைப் பற்றி தெரியும் என்றாலும்...வருக வருக!

உங்க அனுபவத்துல இந்த மாதிரி, பசங்கள கிண்டி கெழங்கெடுத்துருக்கிங்களா?

மகேந்திரன் -> கண்டிப்பா கீதா சாம்பசிவம் இல்லை ;-) இது எனக்கு மடலில் வந்தது... இங்கே தந்து விட்டேன் அவ்வளவே!

Unknown said...

பைபிள்,குரான் கூடfraud தானே,ஏன் அத கிண்டல் பண்ண தைரியம் இருக்காடா உங்களுக்கு,idiots நல்ல விசயத்த கடைபிடிங்கடா.