Friday, August 11, 2006

17 : கோகோ - அறிமுகம்

Photobucket - Video and Image Hosting

போன மாத போட்டிக்கு(மரணம்) வந்த மொத்த ஆக்கங்கள் 80. ஆனா இன்னும் 10 நாட்கள் இருக்க இப்போதே 44-ஐ எட்டி விட்டது, இந்த மாதத்திற்கான(உறவுகள்) பதிவெண்ணிக்கை.

கோகோ
கோகோ:என்னண்ணே 20 நாளைக்கு 80, 10 நாட்களுக்கு 44 கிட்டத்தட்ட சரியாத்தானே இருக்கு விகிதம்...,

அட கோட்டிக்கார கோவாலு போட்டின்னா முதலில் குறைந்த அளவே பதிவுகள் வரும்...கடைசி ஆகும்போது ஒரு ஜுரம் வந்து வரிசையாக வரும் பாரு! எனவே இந்த முறை எதிர்பார்க்கப் படும் எண்ணிக்கை 110.

அது சரி மரணத்தை விட உறவுகளை விரும்பும் தலைகள்தானே எண்ணிக்கையில் அதிகம்.

கோகோ
கோகோ: நீங்க சொன்னா சரிதானுங்ணா... அதுவும் சினிமா விமர்சனம்லாம் போட்டிக்குன்னு அனுப்ச்சு வச்சா 110 என்ன 120-ஏ வரும்

அடிங்... சரி நா விஷயத்துக்கு வரேன்

8 - (கட்டுரைகள் மற்றும் +)
16 - சிறுகதைகள்
20 - கவிதைகள்

என்று இந்த நிமிடம் (Aug 11, 2006-01:45 சன் ம்யூசிக்கில் தேவுடா தேவுடா கேட்கும் விநாடி) வரை கவிதைகளே முதன்மை வகிக்கிறது.

அதுவும் ஆசாத் அவர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். புதுக்கவிதை எழுதியிருக்கிறார், உனுக்கும் எனுக்கும் உறவிருக்கு அஞ்சல-ன்னு கானா பாடி கலக்கியிருக்கார் பாட்(டு)காஸ்டிங்ல, அட கட்டளைக் கலித்துறையில் மரபுக் கவிதையையும் உரசிப் பார்த்திருக்கிறார்.

அசத்துங்கஜி!

கோகோ
கோகோ:சரிப்பா, உறவுகள்-னு தலைப்பு கொடுத்தா பாதிக்கு மேல் முறையற்ற உறவுகள பத்தியே வந்திருக்கே அத பத்தி நீ என்ன நெனைக்கிற


அட கோகோ... பெரியவங்க இருக்ற சபையில எதத்தான் கேக்றதுன்னு விவஸ்தை இல்லயே. சொல்ல மறந்துட்டனே, இவன் பேரு கோகோ-ங்க... இவரு கொள்கை "சந்தேகம் வந்துருச்சுன்னா கேட்டுடோனும், கருத்துன்னு வந்தா சொல்லிப்புடோனும்" அவையடக்கம் துளிகூட கிடையாது. வசதிக்கேத்த மாதிரி நம்மள அண்ணா, தம்பி, அடாபுடா, போடா வாடா பொட்டக்கண்ணா-னு எப்டி வேணா கூப்டுவானுங்க. நாமதான் பாத்து இதெல்லாம் கத்துகுடுக்கனும். யாரது ப்ர்ர்ர்ர்ர்-னு சிரிக்கிறது. தொரை இனிமேல் அப்பப்ப நம்ம வூட்டாண்ட வருவாரு.

அலைகடலென வாரீர்.... ஆதரவு தாரீர்!

பாலா வாத்தியார் வந்த 44 படைப்புக்கும் மார்க் போட்டிருக்கார் அதயும் நீங்க ஒரு பார்வை பாத்துருங்க

இப்போதைக்கு வர்ர்ர்ர்ர்ட்டா!

5 comments:

Anu said...

welcome to blog world coco.

Syam said...

கோகோ சூப்பருங்கன்னா, அடிக்கடி அவர அவுத்து வுடுங்க... :-)

அபுல் கலாம் ஆசாத் said...

அய்யா,

பாராட்டிற்கு மிக்க நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

ராசுக்குட்டி said...

ஷ்யாம் -> கோகோ பயங்கர சேட்டைக்காரப் பய!

ராசுக்குட்டி said...

ஆசாத் -> நன்றியெல்லாம் எதுக்கு, நான் என் கடமையத்தானே செஞ்சேன் (ஹி... ஹி...) உண்மையிலே மூணுமே நல்லா இருந்துச்சு அதான் எழுதுனேன்!

வாழ்க...வளர்க