Friday, July 28, 2006

06 : கழுகுமலைக் கள்ளன்



நான் பொறந்த ஊருங்க கழுகுமலை. அங்கல்லாம் போயி ஒரு ஆறேழு வருஷமாச்சு, அதுக்காக மறந்துருவமா என்ன... பொறந்த ஊர மறக்ற வம்சமா நானு இல்ல மறக்றா மாதிரி ஊரா அது!

அதுனாலதான் பாருங்க நேத்து வலை மேஞ்சுகிட்டு இருந்தப்போ இங்க வந்ததும் கை?! தானா நின்னுருச்சு. அதுவும் அவரோட ஒளிக்கோப்ப தட்டினா மனசு அப்டியே, BSA SLR மிதிவண்டிய மிதிச்சுகிட்டு ஞாபகம் வருதே பாடப் போயிருச்சு. பனங்காட்டு பூமிதான்னாலும் பசேர்னு கெடக்கும். சின்ன ஊர்தான் ஆனா அம்புட்டு அம்சா இருக்கும். ஊருக்கு நடுவால இருக்றதுக்கு பேர்தான் கழுகுமலை. மலைய ஒட்னாப்புல ஏகப்பட்ட கொளம் குட்ட அத சுத்தி ஊரு... அப்றம் ஊர சுத்தி மறுபடியும் மலைங்க மலைய சுத்தி மறுபடியும் கொளம் குட்டன்னு... வட்டத்துக்குள்ள வட்டம், கட்டத்துக்குள்ள கட்டம்-னு ஊரே ஒரு அமைப்பா இருக்கும்.

சித்திர, வைகாசி நல்ல வேனக்காலம் அப்பயும் அப்றம் கோடை முடிஞ்சதும் பதனீர் கிடைக்கும் பாருங்க... அதோட சுவைக்கு ஈடு இணையே கிடையாது. ஆனி, ஆடி... அடடா இப்பத்தானுங்க சீசன்! ஐயோ இப்ப மட்டும் ஊர்ல இருக்கனும், காலங்காத்தாலே எந்திரிச்சு ஒரு பெரிய தூக்குவாளிய சைக்கிள்ள மாட்டி ஒரு மிதி மிதிச்சா, வடவால இருக்ற பனங்காட்டுக்கு போயிரலாம். பனமட்டைய குவிச்சு, கொஞ்சம் குழி நுங்கையும் தோண்டி போட்டு அதுல ஒரு படி பதினிய ஊத்த ஊத்த அடிச்சமுன்னு வைங்க... மத்தியானம் வரைக்கும் சும்மா திம்முனு இருக்கும். வீட்ல இருக்றவங்களுக்கு தூக்குவாளில எடுத்துகிட்டு போறதுலயும் நமக்கு பங்கு கிடைக்கும். ஹூம் அது ஒரு வசந்த காலம்.

மகரந்தச் சேர்க்கை நடந்ததுல இன்னோரு கழுகுமலைப் பூ பூத்திருந்திருக்கிறது, அதையும் ஜான் போஸ்கோ கண்டுபுடிச்சு எழுதியிருந்தாரு. அதுல இருந்த தெப்பக்குளம் பல தேவதைக் கதைகளை ஞாபப்படுத்திருச்சு, அப்றம் எங்க தூங்க. அந்த தெப்பக்குளத்துல கிழக்கு தெச பார்த்தா மாதிரி ஒரு பசு தல (சிலைதான்) இருக்கும். நல்ல மழைக்காலத்தில் எங்கெங்கயோ கம்மாவெல்லாம் நெறஞ்சு பசுவாய்ல தண்ணிவரும் அத பாக்றதுக்கு வரும் பாருங்க கூட்டம்... மேல இருக்ற படத்துல தெரியற கல் சுவர்ல உக்காந்துகிட்டு நானும் பாலாஜி-னு நம்ம பால்ய சினேகிதன் ஒருத்தனும் உக்காந்து மணிக்கணக்கா அரட்டையடிக்றது. என்னது... எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா... தெப்பக்குளத்துல தண்ணியெடுக்க வர்ற பொண்ணுங்கள நாங்க சைட் அடிப்பமா... சேச்சே நாங்கெல்லாம் நல்ல பசங்க... அப்டியெல்லாம் செஞ்சா சாமி கண்ண குத்திரும்னு எங்க பாட்டி சொல்லிதானே அனுப்பி விடுவாங்க ;)

வளவளன்னு இழுக்காம... மலையடிவாரத்துல இருக்ற முருகன் கோவில், அரைமலையில் இருக்கும் சமணர் பள்ளி, இரண்டுக்கும் இடையில் இருக்கும் சுரங்கப்பாதை, மலையுச்சி பிள்ளையார் கோவில், கழுகுமலை தேர் திருவிழா, சஷ்டி விரதம்... அது முடிஞ்சதும் வர்ற சூரசம்ஹாரம், இருக்ற-இருந்த ரெண்டு டூரிங் டாக்கீஸ், தெப்பத்துக்குள்ள இருக்ற யானைக் கவுணி, கோயில் தெருவுல இருக்ற அரண்மனை, அதுக்கு பின்னாடி இருக்ற தெருவுல படிச்ச ஹிந்தி டியூசன், பக்கத்தில இருந்த ஐஸ் கம்பெனி, மலைக்கு பின்னாடி இருக்ற 'பிரதர் ஸ்கூல்' எல்லாம் பத்தி அப்பப்ப எழுதுறேன்

அடுத்த பதிவில் எதிர்பாருங்கள் வெட்டுவான் கோவில் பற்றி வாழ்ந்துவரும் ஒரு செவிவழிக்கதை.

இப்போதைக்கு வ்வ்வ்வர்ர்ட்ட்டா....

15 comments:

பொன்ஸ்~~Poorna said...

இத்தனை பெரிய பதிவை யாரு படிக்கிறது? அசதியா இருக்குங்க.. கொஞ்சம் ரெண்டா பிரிச்சிருக்கலாம்ல?

பொன்ஸ்~~Poorna said...

நல்லா எழுதுறீங்கய்யா.. புதுசுன்னா நம்ப முடியலை.. தொடருங்க..

நல்லா எழுதுறீங்கய்யா.. புதுசுன்னா நம்ப முடியலை.. தொடருங்க..

ராசுக்குட்டி said...

பொன்ஸ்... இவ்வளவு சூடா ஒரு பின்னூட்டமா... பதிந்துவிட்டு பார்க்கும்போது எனக்கும் அதே என்னமிருந்தது... பிரித்துக் கொண்டிருக்கும் போதே உங்களிடமிருந்து ஒரு மறுமொழி... இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஜி-மடல் உங்கள் பெயரில் ஓலையொன்று கொண்டு வருகிறது...

ஓவர் ஸ்பீடுங்கோ!

Anonymous said...

//கோடை முடிஞ்சதும் பதனீர் கிடைக்கும் பாருங்க... //
// பதினிய ஊத்த ஊத்த அடிச்சமுன்னு வைங்க... //

யோவ் கழுகுமலைக் கள்ளா.. அது பதனீயா இல்லை கழுகுமலைக் "கள்"ளா ?

// தெப்பக்குளத்துல தண்ணியெடுக்க வர்ற பொண்ணுங்கள நாங்க சைட் அடிப்பமா...
சேச்சே நாங்கெல்லாம் நல்ல பசங்க... //

பாட்டி இத சொல்லிதானே 'சிங்கை'க்கும் அனுப்பி வச்சிருக்காங்க ? (ஆஹா!).

ஷாங்காய் நகர் புகைப்படங்கள் வந்தா பல 'மேட்டர்' வெளிய வரும்.. :-D
சீக்கிரமே போட்டா நல்லாருக்கும்.. இப்போதைக்கு வ்வ்வர்ர்ருமா ?

சூப்பரா இருக்கு.. தொடருங்க.. ராசுக்குட்டி!

பக்கத்தாலேய இருக்குர ராசா..
(கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு.
யாரு தெரியுமில்லை?)

Anu said...

Raasu
So impressive.
Keep up the good work
Nice photos

Anonymous said...

//நல்லா எழுதுறீங்கய்யா.. புதுசுன்னா நம்ப முடியலை.. தொடருங்க.. //

கழுகுமலை மண்ணின் மணம் தான். அக்னியில் குஞ்சு என்று மூப்பு என்று உண்டோ.. என்ன சொல்றீங்க ராசு..

Anonymous said...

ராசு, கழுகுமலை பற்றிய ஒளிக்கோப்பு இப்ப கொஞ்சம் ஒழுங்கு படுத்தி இருக்கேன். நீங்க கூட மறுபடி பார்க்கலாம். எனக்கு இப்ப பார்க்கிறப்ப ரொம்ப திருப்தியா இருக்கு.
http://pg.photos.yahoo.com/ph/sj_bosco/slideshow?.dir=/ad83&.src=ph

G.Ragavan said...

ஆகா...ராசுக்குட்டி....இத இத இதத்தான் நான் எதிர்பாத்தேன். நடக்கட்டும் நடக்கட்டும்...இன்னும் சொல்லுங்க...அந்த கதையப் படிக்க இப்பவே வர்ரேன்.

G.Ragavan said...

// ராசுக்குட்டி said...
பொன்ஸ்... இவ்வளவு சூடா ஒரு பின்னூட்டமா... பதிந்துவிட்டு பார்க்கும்போது எனக்கும் அதே என்னமிருந்தது... பிரித்துக் கொண்டிருக்கும் போதே உங்களிடமிருந்து ஒரு மறுமொழி... இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஜி-மடல் உங்கள் பெயரில் ஓலையொன்று கொண்டு வருகிறது...

ஓவர் ஸ்பீடுங்கோ! //

அதான் பொன்ஸ்...அந்த ஆன ஓடுற வேகத்தப் பாருங்கய்யா....அதுவே சொல்லுமே!

ராசுக்குட்டி said...

ராசா-வுக்கு நன்றி...பக்கத்திலயே இருக்கீரு... வலைப்பக்கத்துக்கும் வந்துருய்யா

பொன்ஸ்... புதுசா? பழைய நினைவுகள்தானே... (சிறு கடி)

ஜான் போஸ்கோ... உண்மைதான், உங்கள் பதிவுகளை படித்தபின்தான் சொல்கிறேன்.

ராகவன்...கதய படிச்சுட்டு சொல்லுங்க பொன்ஸ் யானை வேகம்தான்...ஆனா பாருங்க ஒரு கட்டத்துக்குள்ளதானே இருக்கு... (என்னது வேறேதோ சிந்திக்க தூண்டுதா...நான் சிந்திக்காமதாங்க சொன்னேன்)

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ் யானை வேகம்தான்...ஆனா பாருங்க ஒரு கட்டத்துக்குள்ளதானே இருக்கு... //

ராசுக்குட்டி,
பயங்கர உள்குத்தாக்கீதுப்பா.. இது போதும்.. வலைல சிக்காம பொழச்சுக்கிடுவீக..

ராசுக்குட்டி said...

பொன்ஸ் உள்குத்தா... நானா... உங்களுக்கா... வாய்ப்பேயில்லை! தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதென்று நினைக்கிறேன்!

இராம்/Raam said...

ஆகா ராசு சூப்பரா இருக்குப்போய்..

//நல்ல மழைக்காலத்தில் எங்கெங்கயோ கம்மாவெல்லாம் நெறஞ்சு பசுவாய்ல தண்ணிவரும் அத பாக்றதுக்கு வரும் பாருங்க கூட்டம்... மேல இருக்ற படத்துல தெரியற கல் சுவர்ல உக்காந்துகிட்டு நானும் பாலாஜி-னு நம்ம பால்ய சினேகிதன் ஒருத்தனும் உக்காந்து மணிக்கணக்கா அரட்டையடிக்றது. என்னது... எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா... தெப்பக்குளத்துல தண்ணியெடுக்க வர்ற பொண்ணுங்கள நாங்க சைட் அடிப்பமா... //

எனக்கு இப்போ கொசுவத்தி சுருள் சுத்த ஆரம்பிச்சிருச்சு... சீக்கிரம் நான் இதே மாதிரி பதிவு ஒன்னு போடுறேன்...:-))))))

இராம்/Raam said...

ஆகா ராசு சூப்பரா இருக்குப்போய்..

//நல்ல மழைக்காலத்தில் எங்கெங்கயோ கம்மாவெல்லாம் நெறஞ்சு பசுவாய்ல தண்ணிவரும் அத பாக்றதுக்கு வரும் பாருங்க கூட்டம்... மேல இருக்ற படத்துல தெரியற கல் சுவர்ல உக்காந்துகிட்டு நானும் பாலாஜி-னு நம்ம பால்ய சினேகிதன் ஒருத்தனும் உக்காந்து மணிக்கணக்கா அரட்டையடிக்றது. என்னது... எதுக்குன்னு உங்களுக்கு தெரியுமா... தெப்பக்குளத்துல தண்ணியெடுக்க வர்ற பொண்ணுங்கள நாங்க சைட் அடிப்பமா... //

எனக்கு இப்போ கொசுவத்தி சுருள் சுத்த ஆரம்பிச்சிருச்சு... சீக்கிரம் நான் இதே மாதிரி பதிவு ஒன்னு போடுறேன்...:-))))))

ராசுக்குட்டி said...

ராம்,
மீள்பதிவுகள் இப்படியெல்லாம் பத்த வைக்குமா... இதுக்காக பட்ட கஷ்டம் பெருசா தெரியலீங்கோ!