Sunday, July 09, 2006

03 : எனக்கும் ஒரு இடம் உண்டு!

கடந்த மூன்று மாதங்களாக ஷாங்காய் நகரில் வாசம். வலைப்பூக்கள் அறிமுகமானது அப்போதுதான், அலுவலகத்தில் எந்த மென்பொருளையும் இறக்கி பயன்படுத்த முடியாது. வெளியே எல்லா இடங்களிலும் சீன மொழியிலேயே கணிணிகள் பயன்பாட்டில் இருக்கும். Yes, no, back, next, Install எல்லாமே சீன மொழியில்தான், எனவே கட்டிப்போட்ட மாதிரி இருந்தது. தமிழில்தான் பின்னூட்டமிடவேண்டுமென்ற வைராக்கியத்தில் வலைப்பூக்களில் பின்னூட்டமிட்டது கூட இல்லை.

எனவேதான் ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக எ-கலப்பையை இறக்கி உடனே ஒரு வலைப்பூ துவங்கியாயிற்று. பேரன்புமிக்க உங்களின் பேராதரவு கிடைத்தால் இன்னும் நிறைய எழுதுவேன்.

அடுத்த கட்டமாக என் சீன பயணக் குறிப்புகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வேன். புகைப்படங்களை கணிணியில் ஏற்ற தாமதமாகிறது அவ்வளவே!

சீக்கிரமே சந்திக்கிறேன்... இப்போதைக்கு வ்வ்வர்ர்ர்ட்ட்டா!

6 comments:

நாமக்கல் சிபி said...

ராசுக்குட்டியை தமிழ்மண(ன)த்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்...

வெட்டியா என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. நீங்க கவலைப்படாம எழுதுங்க...

கோவி.கண்ணன் said...

வருக....வருக்க ..... நீங்களும் ஜோதியில் ஐக்கியமாகுங்கள் !

நிலா said...

உங்க பேரு ரொம்ப பரிச்சயமா இருக்கே... ம்ம்ம்...

நிலாச்சாரல்ல ஆரம்பத்தில எழுதின ராசுக்குட்டி நீங்கதானோ?

நாமக்கல் சிபி said...

ராசுக்குட்டி,
எங்க நம்ம பின்னூட்டமெல்லாம் கானோம்???

ராசுக்குட்டி said...

வெட்டிப்பயல் > ரொம்ப நன்றிங்க... உங்கள மாதிரி ஆட்கள நம்பித்தான் உள்ள வந்திருக்கேன்! ;~))

கோவி.கண்ணன் > நன்றிகள் பல உங்களுக்கும்

நிலா > அய்யோ இல்லீங்க... நான் தமிழ் வலையுலகத்துக்கே புதுசு, அப்போ நம்ம பேர்ல ஏற்கனவே ஒருத்தர் இருக்காரா... அடடா பிரச்சனையாச்சே!

Pavals said...

வாங்கயா.. வணக்கம்.! _/\_