Wednesday, July 26, 2006

05 : தோல்வியதிகாரம்



நம்ம அலுவலகத்துல சதுரங்கப் போட்டி நடக்குது. நம்மளுக்கு இந்த ராசாமார் ஆட்டம் எல்லாமே புடிக்குமுங்க (என்னது பேர்லயே ராசா இருக்றதுனாலயா... அட என்னப்பு இப்பவே உள்குத்தா?) அதனால நாமளும் பேர குடுத்துப் போட்டு செவனேன்னு ஒக்காந்திருந்தேன்.

குலுக்கல் முறையில பேர தேர்ந்தெடுக்குறேன்னு போட்டு முதல் போட்டியே நம்ம அஞ்சாநெஞ்சன் கஞ்சா கிட்ட போட்டி. நம்ம அரசியல் ஆலோசகனே அவம்தான்...அவம்ட்ட போய் எப்படி போட்டி போட. இந்த மகாபாரதத்துலகூட பார்த்திகன்னா அர்ச்சுனரு பங்காளிககூடத்தான் மோதினாரு...ஆனா இது அர்ச்சுனரும் கிச்சாவும் (கிருஷ்ணர்தேன்) மோதுனா மாதிரியாய்டுச்சு பார்த்துகிடுங்க... சரி செதறுன ரத்தத்தெல்லாம் துடைச்சுட்டு நம்ம கைப்புள்ள மாதிரி செயிச்சு வந்தா அடுத்த போட்டி நம்ம தம்பி கூட... அட போங்கடே நீங்களும் உங்க குலுக்கலும்!

எங்க ஊர்பக்கம் பாத்திகன்னா வயசு பெரிசுங்கள்ளாம் எங்கனா நிழல் கண்ட இடத்துல உக்காந்து இதத்தான் ஆடிட்ருப்பாவ... அட நமக்கே நம்ம பாட்டி சொல்லிக்குடுத்ததுதானே இந்த செஸ்...சதுரங்கமெல்லாம். எங்க ஊர்ல ஒரு ஐஸ் கம்பெனி இருந்துச்சு அதுதான் எங்க ஊர் யூத் ஜாயிண்ட். கொஞ்சம் வளர்ந்த பின்னாடி...(போங்கப்பத்தா எப்ப பார்த்தாலும் என்கிட்ட தோத்துகிட்டே இருக்கிங்க) அங்கதான் நம்ம ஆட்டமெல்லாம். எங்க சதுரங்க ஆட்டத்தோட மத்த விஷயத்தையும் கத்துக்கிடுவானோன்னு வீட்ல பயந்து மிலிட்டரி பள்ளிக்கோடத்துல கொண்டு போய் சேத்தாக... அது தனிகத நம்ம ஆட்டத்துக்கு வருவோம்.

ராசாமார் ஆட்டம்னு சொன்னம்ல, அதுல இந்த சீட்டுக்கட்டு...அப்புறம் இப்ப புதுசா Age of Empires... ஆடறதுக்கெல்லாம் நமக்கு ஆள் கிடைக்கும். ஆனா இந்த சதுரங்கம் ஆடறதுக்குமட்டும் சாமிகளா... ஆளே கெடைக்காது. அப்டிபட்ட ஆட்டத்துக்கு வராது வந்த மாமணி போல் கெடைச்சதுதான் நம்ம தம்பி வின்னரு!

போன மூணுமாசமா (மூணுமாசம்னாலே ஒரு மாதிரி இருக்கா... சரி பன்னெண்டு வாரம்னு படிச்சிக்கிடுங்க) ஷாங்காய்ல இருந்தம்லா அப்ப தம்பிதான் நம்ம சேக்காளி... அலுவலகம் முடிஞ்சதும் முதல்ல ஒரு செஸ் ஆட்டம் அப்புறம்தான் மத்த சேட்டை. சும்மா சொல்லக்கூடாதுங்க நல்ல ஆட்டக்காரரு... தோல்வி வெற்றியெல்லாம் மீறி ஆட்டம் எப்பவுமே சுவாரசியமா இருக்கும். அப்டிபட்ட ஆள்ட்ட ஆட சொல்லிபுட்டாய்ங்க.

சரி கழுதை... காசா பணமா ஆடிப்பாப்போமுன்னா... உக்காந்ததுலேர்ந்து ஒரே அடி! எவ்வளவு நேரம்தான் ஜெயிக்கப்போறா மாதிரியே உக்காந்துருக்றது... கடைசில தோத்துப்போட்டேன். நக்கல் புடிச்ச ஆளு வெளியில வந்ததும் கேக்றார்யா... 'ஏண்ணே வேணும்னுதானே தோத்துபுட்டிங்க'.


தோல்வியும் வெற்றி இடத்து... குறை
வில்லா சந்தோஷம் தருமெனின்.



அப்டின்னு நமக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும்...

கைப்புள்ள மாதிரி நமக்கு அளுவ அளுவயா வருது... இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிகிட்ருக்குன்னு! நமக்கு தோத்ததுல ஒரே வருத்தம்தாங்க... இனி இந்த ஆட்டத்த ஆடறதுக்கு ஆள்கிடைக்க ஒரு மாமாங்கமாயிடும்.

காத்திருப்பேன் அதுவரைக்கும்
இப்போதைக்கு வ்வ்வ்வர்ட்ட்ட்டா...

6 comments:

Anonymous said...

Hi Rasu
I am sure that nee venumtedan vittu kuduttua

Regards
Anitha

Unknown said...

வாங்க ராசுக்குட்டி.. உங்கக் கதையக் கேட்டா நீங்களும் ஒரு வீர தீர பாரம்பரியம் மிக்க வருத்தப் படாத வாலிபராத் தான் இருப்பீங்கப் போலிருக்கு:)

Anonymous said...

Kavala padadhalaee..
Thambi yaaru namaa pulaa..
sumaa sollakudadhulae punch vachitaelae..

vazhthukal.....

Anonymous said...

as a chess player,i can understand your feelings on getting defeated and also not getting many challenging opponents for playing chess.

free-a vudu maamu...thambi thaane..appaala jeyichikidalaam.

ராசுக்குட்டி said...

ஆமா தேவ்... பேசாம சங்கத்துல சேர்ந்து சங்கப்பணியாற்றவா...

வரா..குரு..ஆனந்த் வந்ததற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

அனிதா... இப்டி உசுப்பேத்தி உடம்ப ரணகளமா ஆக்கிறாத

ராசுக்குட்டி said...

வரா -> ஆறுதல் சொல்றேன்னு இப்டியா அசிங்கப் படுத்தறது!

இளங்கோ -> இந்த ஒரு வேலையை எல்லோரும் செய்யலாம், செய்ய வேண்டுமென்றிருப்பதால் தாரை வார்த்தல் சாத்தியமா என்ன?