Thursday, February 01, 2007

61 : கவிதை - ஓவியம்

Photobucket - Video and Image Hosting

மனதில் தோன்றிய கவிதையொன்றை
காகிதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன்
மை தீர்ந்துபோன பேனா வெள்ளையாய் எழுதியது

எடுத்த காரியம் முடித்துவிடலாமென்று
பேனாவிற்கு மை நிரப்புகையில்
அச்சமூட்டுவதாயோ, ஆச்சரியமூட்டுவதாயோ
பின்னிருந்து நீ அணைத்ததில்
காகிதமெங்கும் சிதறியது மை

கவிதை... ஓவியமாகிப்போனது!

4 comments:

நாமக்கல் சிபி said...

புரிகிறது ராசுக்குட்டி! வாழ்த்துக்கள்!

காதல் மாதத்தில் முதல் போணியா!

கதிர் said...

பிள்ளையார் சுழி!

ராசுக்குட்டி said...

ஆமாம் சிபி... இந்தப் பதிவுக்கு நீங்கதான் முதல் போணி!

ராசுக்குட்டி said...

தம்பி... இந்த சுழி தானே வேணான்றது. (சுழின்னா சேட்டை-ன்ற அர்த்தத்துல எங்க ஊர் பக்கம் அடிக்கடி சொல்லுவோம்!)